23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்த்துறை மாணவியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களின் தலைமை உரை இன்றைய பாடத் திட்ட மாறுதல்களும் அவற்றின் தேவைகளும் அதற்கு படைப்பாளிகளின் ஆதரவின் தேவை பற்றியும் உரையாற்றினார்.
பாரதி இலக்கிய சங்கத்தின் செயலர் திலகபாமா ந. சுசீந்திரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அடுத்து நடந்தேறிய சுசீந்திரனின் உரையில், மிக முக்கிய இடப் பெயர்வுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் இலக்கியங்களின் பிரதிபலிப்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார். அவற்றில் புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கும் புகலிட இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும், அதனால் வரைபடங்களை அழித்துக் கொண்டு ஒரு புது வெளி உருவானதின் நன்மைகளையும் , வெளிநாட்டு இலக்கியங்களை மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது பற்றியும், சமூக கலாசார மாற்றங்களை மக்கள் எதிர்கொண்டதை இலக்கியங்கள் பிரதிபலிக்கக் கூடியதாய் இருப்பதைப் பற்றியும் உதாரணங்களோடு பேசினார், அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களது பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்த கலந்துரையாடலோடு நிகழ்வு இனிதே முடிந்த்து