மெய்யியல் கற்றல் கற்பித்தல்-4

பிளேட்டோஅரிஸ்டோட்டில்- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -சோக்கிரடிசு

மூவரைத்தாண்டி மேலைத்தேய மெய்யியல் நகராது.

1. சோக்கிரட்டீஸ்
2. பிளேட்டோ
3. அரிஸ்ரோற்றில்

1) சோக்கிரட்டீஸ்.

இவர் ஒரு பிரசங்கி. இவர் ஒரு நூலையும் எழுதவில்லை. இவரது சீடன் பிளேட்டோ. இவர் சொன்னதாக பிளேட்டோ எழுதியவைகளே இவரது தத்துவம். இவருக்கு என்ன தெரியும் என்று இவரைக் கேட்டபொழுது –எனக்கொன்றும் தெரியாது என்று எனக்குத் தெரியும்- என்று பதிலிறுத்தார்.

அதாவது தெரிந்தவற்றுக்கும் தெரியாதவற்றும் எப்படி ஒரு எல்லையை வகுக்கமுடியும் என்று கேட்டார். அறிவின் வரையறை என்ன? அதன் எல்லை என்ன? ஏன் என்று கேள் என்றார். உன்னை அறி என்றார். ஒரு பொழுதேனும் அவர் தான் சொன்னதிலிருந்து பின் வாங்கவில்லை. தப்புவதற்கு ஏகப்பட்ட வழியிருந்தும் அவர் தப்பவில்லை. நஞ்சைத் தானுண்டார். இறந்து போனார்.

நீதி பற்றி இவர் சொன்னவைகள் ஏராளம். நீதி பற்றித் தெரியாத ஒருவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியாகுமா என்றும் கேட்டார்.

2) பிளேட்டோ.

இவர் இல்லாவிடில் அறிவு நகர்ந்திருக்காது. -ஞானம்- என்பது அறிவு என்றார். தனது குரு சோக்கிரட்டீஸ் சொன்னதை புத்தகமாக எழுதினார். -குடியரசு- எனும் மாபெரும் நூலை எழுதினார். தூய கணிதத்தில் அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார்.

முதன் முதலில் –பல்கலைக் கழகம்- ஸ்தாபித்தார். அந்தப் பல்கலைக் கழத்தில் அவர் ஒரு அறிவித்தல் எழுதியிருந்தார். -தூய கணிதம் தெரியாதவன் இங்கே வரக்கூடாது- என்று

அப்போ அங்கே அரிஸ்டோட்டில் மாணாக்கராய் இருந்தார். -உனக்கு தூயகணிதம் தெரியாதே. நீ வெளியே போ- என்றாராம். அரிஸ்டோட்டில் சொன்னாராம் -எனக்கு தருக்கவியல் தெரியும்- என்று

3) அரிஸ்டோட்டில்

முதன் முதலில் தருக்கவியலை உலகிற்குச் சொன்னார். -கவிதையியல்- எனும் நூலை எழுதிய மகானும் அவர்தான். சரி. இதெல்லாம் நீங்கள் கூகிளில் அல்லது விக்கியில் அறியலாம். நீங்கள் அறிய வேண்டிய மிகப் பெரிய விடயம் இதுதான்

அறிவு

1. அனுபவ அறிவு
2. ஞான அறிவு

என மாபெரும் பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறது அன்றிலிருந்து.

(தொடர்வேன்