உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்குத் தொடர் – 2

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்குத் தொடர் - 2உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை. International Association for Tolkappiyam – Canada Branch 4 – 2800 Eglinton Avenue East, Toronto, ON. M1J 2C8

அன்புடையீர், தமிழின் தொன்மையையும்  சிறப்பையும் சான்றுபடுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் அமைக்கப்பெற்று வருகின்றன. கனடாவில் அமைக்கப்ட்டுள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:
நாள்: சனிக்கிழமைää ஏப்ரல் 16, 2016
நேரம்: 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A – 5637, Finch Avenue East, Scarborough, M1B – 5K9 (Finch & Taps court- (Toronto Tamil Sangam,  Near to Dr. Lambotharan’s Clinic )  

கருத்தரங்கில் உரை நிகழ்துபவர்;: திரு. பொன்னையா விகேகானந்தன்; அவர்கள்   அண்ணாமலை கனடா வளாகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் – ரொறன்ரோ கல்விச் சபை அனைத்துலக மொழிகள் கல்வித் திட்ட அலுவலர்
பொருள்: “தொல்காப்பியத்தி;ல் களவியலும் கற்பியலும்; – ஒரு நோக்கு”

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

நிகழ்வு சரியாக  பி.ப. 3: 00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம். உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை

தொடர்புகளுக்கு: tolcanada@gmail.com
416-267-5255. 
647-295-3578. 
416-546-1354. 
647-885-8391
647-224-8871

தகவல்: த.சிவபாலு
avan.siva55@gmail.com