இம்மானுவேல் கான்ற்.
அப்பாடா… இவரின்றி மெய்யியலுலகே அசையாதென்பர் இவரை அறிந்தோர்.
இரு பெரும் பிரிவுகளாய் அறிவுலகு பிரிந்திருந்தது.
1. ஞான அறிவு
2. அனுபவ அறிவு.
2 ம் 2 ம் நாலு என்பது அனுபவ அறிவல்ல. 2 மனிதரும் 2 மனிதரும் 4 மனிதராய் அதோ தெரிகிறார்கள் பார். என்பது அனுபவ அறிவு.
முக்கோணம் 3 கோணங்களை உடையது. இதற்கு அனுபவம் தேவையில்லை. முக்கோணம் பற்றிய ஞான அறிவு வேண்டும். ஆனால், அந்த முக்கோணம் சற்றுச் சரிந்திருக்கிறதென்றால்…அதற்கு அனுபவ அறிவு வேண்டும்.
1. உயரமான மனிதன் ஒரு மனிதன். (ஞான அறிவு)
2. உயரமான மனிதன் நீலச் சட்டை அணிந்துள்ள ஒரு மனிதன். (அனுபவ அறிவு)
இப்படியே அறிவானது பெரும் பிரிவாய் பிளவுண்டிருந்தது.
-கான்ற்- இதனைத் தெளிவு படுத்தினார். இவர் –தோற்றப்பாடு- எனும் கோட்பாட்டைச் சொன்னார். -பினோமினோலஜி- அதாவது….அறிவின் கூறுகளை கோடிட்ட இரு பெரும் பிளவுகளாகப் பார்க்க முடியாது. ஒன்றின் தோற்றம் ஒன்றின் காட்சி ஞான அறிவினாலும் அனுபவ அறிவினாலும் இரண்டும் இணைந்தே மெய்ப்பிக்க முடியும் என்றார்.
மிக மிக செம்மையான தெளிவான மெய்யியலாளர் என இவரைச் சொல்வர். இவர் நேரந் தவறமாட்டார். இவர் நடந்து போகும்போது..அவ்வூர் மக்கள் தமது கடிகாரத்தை சரியான நேரத்தில் விடுவார்களாம்.
(கான்ற் பற்றி மிக நுட்பமாகவும் ஆழமாயும் பின்னர் எழுதுவேன். அதுவரை….kant Immanuel என்று கூகிளில் தேடினால் வந்து குவியும்.) இவர் நடுநிலையாய் செயற்பட்டார். நடுநிலை என்பதைவிட –நடு- -மத்தி- என்பதை அறிவுறுத்துகிறார். ஞானமும் தேவை அனுபவமும் தேவை என்கிறார். அதுவே அவரது தோற்றப்பாட்டு வாதம். (நடுநிலை என்பதே இல்லையென மாக்சியர்கள் தற்போதும் அப்போதும் சொல்வர். கான்ற், ஹேகலுக்கு முந்தியவர் மார்க்ஸ் ஹேகலுக்குப் பிந்தியவர்)
– மேலும் அறிவோம் –