கற்சிலைமடுவின் குழந்தைகள்!

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது. கனடாவில் வதியும் எழுத்தாளர் வ.ந கிரிதரனின் “குடிவரவாளன்” நாவலின் அறிமுகநிகழ்வின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு தொகைப்பணமே நூலாசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இச்செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சு.குணேஸ்வரன், சித்திராதரன் ஆகியோர், குறித்த பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டுக்கு பொறுப்பாகச் செயற்படும் திரு தர்சன் (ஆசிரியர்) அவர்களை கற்சிலைமடுவில் நேரில் சந்தித்து கற்றல் உபகரணங்களை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் வகையில் வழிப்படுத்திய திரு ஜெயக்குமாரன் அவர்களும் கலந்து கொண்டார். வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு தொகுதி மாணவர்களுக்கும் கற்றல் உபரகணம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேற்படி கிரிதரனின் நாவல் அறிமுக நிகழ்வு உயில் & சித்தம் அழகியார் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கிரிதரன் அவர்களின் பெருமனதுக்கு எமது நன்றியும் வாழ்த்துக்களும். – உயில் & சித்தம் அழகியார்