1. உறவுமலர்!
ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.
2. பாதபூஜை.
இனிமேல் பார்க்கக் கிடைக்குமோ,
தனியாய் தொலைந்த காரணமோ,
பனித்த கண்களால்
பாதம் கழுவி,
புனிதம் அடைந்தேன்
3. நான் யார்?
உண்மையான நான் உறங்கிக்கிடக்க ,
பொய்யான நான் பேயாட்டம் ஆடுகிறது
என்று அடிக்கடி காதில் விழுகின்றது.
இதில் உண்மையான நான் யார்?
பொய்யான நான் யார்?
பிறந்த பொழுது பெயரிட்டு, சீராட்டி,
பாராட்டி வளர்த்த இந்த உடம்பு நானா?
உயர் கல்வியும் பல் கலைகளும் கற்று
அருமையாய் பெருமையாய் வளர்ந்தது நானா?
அறிந்தோம் எனச் செருக்குற்றது நானா?
பக்தியிலே ஊறி மெய்மறந்து நிற்பது நானா?
திக்குத் தெரியாது திகைப்பது நானா?
எதையோதொலைத்தது போல் பரிதவிப்பது நானா?
இவையெல்லாம் பொய்யானால்
உண்மையான நான் யார்?