தமிழ் ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

தமிழ்  ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

வணக்கம் நண்பர்களே…. தமிழ் ஸ்டுடியோவின் ஐந்திணை மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருகிறது. திரைப்படம் பார்ப்பதையே ஒரு கலையாக மாற்றும் முயற்சியாக ஐந்திணை செயல்படவிருக்கிறது. மேலும் திரைப்படம் சார்ந்து நுணுக்கங்கள், திரைப்படம் இலக்கியம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு, வெகுவாகக் குறைந்து வரும் மனித உறவு போன்றவற்றை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் களமாக இந்த ஐந்திணை செயல்படவிருக்கிறது.

ஐந்தினையில் இலக்கிய கூட்டமும், குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகத் திரைப்படங்கள், ஆகியவை திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும். மேலும் திரைப்படம் சார்ந்த நுணுக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். இவை அனைத்தையும் ஏதோ ஒரு மூடிய அறைக்குள், காதுக் கேட்காத நான்கு சுவர்களுக்குள், மின் விசிறிகளின் கிரீச் சப்தத்தில் நாங்கள் செய்யப்போவதில்லை. மேலும் திரையிடலுக்கு வந்து படங்களை பார்த்துவிட்டு அடுத்த கணமே மாயமாய் போகும் நண்பர்களுக்கும் இங்கே இடமில்லை.

ஐந்திணை முழுக்க முழுக்க வேறொரு வடிவத்தில் உங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. குன்றத்தூர் அருகில் உள்ள பறந்து விரிந்த தோட்டத்தில், இயற்கை முறையில் விளையும் பழ வகைகள் அமைந்துள்ள நிலப்பரப்பில், நல்லக் காற்றை சுழற்றி அடிக்கும் மரங்களுக்கு இடையில், பறவைகளின் ரீங்கார இசைக்கு மத்தியில் ஒரு இலக்கியக் கூட்டம், தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையுடன் வாசகர்கள் கலந்துரையாடும் நிகழ்வு, பின்னர் அடர்ந்த இருட்டில் அதே இயற்கை காற்றில் ஒரு குறும்படம், ஒரு ஆவணப்படம், ஒரு உலகத் திரைப்படம் பார்த்துவிட்டு, இதற்கிடையில் அங்கேயே சமைக்கப்படும் உணவு வகைகளை ருசிப் பார்த்துவிட்டு (சைவம் & அசைவம் இரண்டும்) அந்த இயற்கை சூழலிலேயே இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலை எழுந்து அருகில் உள்ள செம்பரம்பாக்கம் அணை, அல்லது அதே இடத்தில் உள்ள பம்ப் செட்டில் குளித்துவிட்டு வீடு நோக்கி நகர வேண்டியதுதான்.

இதில் முக்கியமானது இரவு முழுக்க படங்களைப் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் திரைப்படம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் விவாதித்திக்கொண்டு, நமது பார்வையிலேயே சமைக்கப்பட்ட இயற்கை உணவுகளை ருசித்துக் கொண்டும் இருப்பது என்பது கலையின் மீதான காதலுக்கு நிச்சயம் உத்திரவாதம்.

நகர இரைச்சலை விடுத்து, அமைதியான, மனதுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுடன் நமக்குப் பிடித்த இலக்கிய, திரைப்பட ஆளுமைகளுடன் விவாதித்துவிட்டு இயற்கையை ஆராதிக்கும் இந்த நிகழ்விற்கு மாதம் ஒரு நாளை ஒதுக்க நம்மால் இயலவில்லை என்றால் நாம் இழக்கப் போவது ஏராளம். எனவே நண்பர்களே நீங்கள் திரைப்படங்களை நேசிப்பவராக இருந்தால், இலக்கிய ஆர்வலராய் இருந்தால், புதிய நண்பர்களை தேடித் திரிபவர்களை இருந்தால் நிச்சயம் ஐந்தினையில் உறுப்பினராகி இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுங்கள்.

இதுவரை ஆர்வலர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ எவ்வித சந்தாத் தொகையும் விதித்ததில்லை. தமிழ் ஸ்டுடியோவின் எல்லா நிகழ்ச்சிகளும் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டன. ஆனால் இந்த நிகழ்வில் நீங்கள் கலந்துக் கொள்ள வருட சந்தா ரூபாய் 1500/- கட்ட வேண்டும். இரவு உணவு (சைவம் & அசைவம்) நான்கு திரைப்படங்கள், இலக்கிய நிகழ்ச்சி, திரைப்பட தொழில்நுட்பம் என எல்லாவற்றிற்கும், மாதத்திற்கு நீங்கள் செலவு செய்யும் தொகை நூறு (100/-) சொச்சம் மட்டுமே.. வருடத்திற்கு ரூபாய் 1500/-  மட்டுமே.. ஐந்திணை குறைந்த பட்சம் ஐம்பது உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் தொடங்கப்படும். ஐந்திணை இந்த சமூகத்தின் கலை பிடிப்பையும், ரசனை ஏற்றத்தையும் அளவிடும் என்பதில் ஐயமில்லை.

1500/- ரூபாய் சந்தாக் கட்டுபவர்கள் தமிழ் ஸ்டுடியோவின் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளலாம். ஐந்தினையில் உறுப்பினராக தொடர்பு கொள்ளுங்கள்.

அருண் மோ. 9840698236

http://thamizhstudio.com/aindhinai_announce.php

அன்புடன்
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com