சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் கோவை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளில் வெளியிடப்பட்டன. இளஞ்சேரல் தலைமை தாங்கினார். The hunt –Shortstories ( Trans. Ramgopal) நூலை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஆரம்பகால நிறுவனரும், கேர் தன்னார்வக்குழுவின் இய்க்க்குனருமான பிரித்விராஜ் வெளியிட்டுப் பேசினார்: சாயத்திரை போன்ற நாவல்கள் முதல் சுப்ரபாரதிமணியன் நாவல்கள், சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் மூலம் சுற்றுச்சூழல் அக்கறையைப் படைப்பிலக்கியத்தில் வெளிப்படுத்தி வருகிறார். சமூகச் சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை அவரின் நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இலக்கிய ரசனை என்பதை மீறி சமூகச் சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும்.உழைக்கும் பெண்கள், அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை , அவர்களுக்கான மீட்சிகளைப் பற்றி தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் பேசுகிறார்.
The lower shadow –Poems (Trans. Rm .Shanmugam ) நூலைப் பேராசிரியர் தாரிணி வெளியிட்டுப்பேசினார். சுப்ரபாரதிமணியனின் படைப்புகளின் மையம் பல ஆண்டுகளாய்த் திருப்பூரும் அந்த நகரின் உழைக்கும் மக்களும். அவர்களின் வாழ்நிலையைப் பதிவு செய்வதும் ஆகும். இதனையே அவரின் சமூகக் கடமையாகக் கருதுகின்றார். இதை நாவல்கள் போன்ற படைப்புகளில் மட்டுமின்றி அவ்வப்போது கவிதைகளிலும் வெளிப்படுத்துகிறார். இத்தொகுப்பின் முதல் கவிதையில் கடவுளும் சாத்தானும் ஒரே புதை குழியில் இருப்பதைச் சொல்லும் கவிதை சுவாரஸ்யமானது. Paradise lost ஞாபகம் வந்தது. குளிரூட்டுவான் பற்றிய கவிதை பல பரிமாணம் கொண்டது. சாதாரண மக்களின் அனுபவங்கள் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. சுமங்கலி , அமங்கலி, தாய்மை போன்ற வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. அடிமைத்தனத்தில் இருக்கும் பெண்களின் விடுதலை சாவோ, தற்கொலையோ என்றாகி விடுகிறது.. உடல் ரீதியாகப் பலவீனமான பெண் அடிமைத்தனத்திற்கு இன்னும் சுலபமாகி விடுகிறாள்.. எலியோ டைனோசரோ சித்ரவதைதான், பழிவாங்குபவனும் பழிக்கிரவனும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். பெண் குழந்தைகள் மேல் சுமத்தப்பட்ட சுமைகள் இன்னும் இறுக்கமானவை. கறுப்பு இலக்கியம் போல் இந்த வகை அடிமைப் பெண்களைப் பற்றி எழுதும் இலக்கியம் சுப்ரபாரதிமணியனுடையது. வேட்டையாடப்படும் உலகில் பெண் சாதாரணமாகத் தென்படுகிறாள். எல்லா இடத்திலும் தென்படும் ஏழ்மை, சிக்கல்கள் அவளை இன்னும் தனிமைப்படுத்துகினறன. இதைச் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அவரின் படைப்புகளின் மூலம் . பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த் தானே இருக்கும்.
“ சுகந்தி சுப்ரமணியனின் படைப்புலகம் “ நூலை ( டிஸ்கவரி புக் பேலஸ் ) அகிலா, பொன் இளவேனில் ஆகியோர் அறிமுகப்படுத்திப் பேசினர். அவை நாயகன், அம்சப்ரியா, பேரா. செல்வி, கந்த சுப்ரமணீயன், ராம்ராஜ், ம.நடராஜன் , கொடீசியா இயக்குனர் சவுந்திரராஜன் உட்படப் பலர் நூல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.சோலைமாயவன், புன்னகை ரமேஷ் குமார் கவிதை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன .அம்சப்ரியா நன்றி கூறினார்
subrabharathi@gmail.com