மெல்பனில் தங்கத்தாரகை நூல் அறிமுகம். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டுகால வரலாற்றின் தொகுப்பு.

மெல்பனில் தங்கத்தாரகை நூல் அறிமுகம். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டுகால வரலாற்றின் தொகுப்பு.

 

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வரலாற்றை ஆவணமாகத்தொகுத்திருக்கும் தங்கத்தாரகை நூலின் அறிமுக அரங்கு எதிர்வரும் 10 ஆம் திகதி (10-06-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையில் அவுஸ்திரேலியா மெல்பனில் வேர்மண் தெற்கு சமூகமண்டபத்தில் ( Karobran Drive, Vermont South, Victoria 3133) நடைபெறும். கனடாவில் வதியும் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபரும் பன்னூல் ஆசிரியருமான திரு. கதிர் பாலசுப்பிரமணியம் இந்நூலை தொகுத்துள்ளார். யூனியன் கல்லூரியின் தோற்றம் – வளர்ச்சி – இலங்கையின் கல்விப்பாரம்பரியத்தில் அதன் வகிபாகம் முதலானவற்றை விரிவாகத்தொகுத்துக்கூறும் இந்நூலில் முன்னாள் அதிபர்கள், மற்றும் கல்லூரியின் வளர்ச்சியில் பங்கேற்ற நலன்விரும்பிகள் பற்றிய விபரங்களும் அவர்களின் ஒளிப்படங்களும், வெளிநாடுகளில் இயங்கும் யூனியன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் கிளை அமைப்புகள் பற்றிய பூரண விபரங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 425 பக்கங்களில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் அறிமுகவிழாவை மெல்பனில் இயங்கும் யூனியன் கல்லூரியின பழைய மாணவர் சங்கத்தினர் ஒழுங்குசெய்துள்ளனர்.
அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:

அன்டன்: 0407 173 739
நரேந்திரன்: 0434 766 966
சிவநாதன்: 0412 067 019
உதயன்: 0403 155 066

letchumananm@gmail.com