கடும் சிவப்பு
திராட்சை ரசமெனும் வைன்
பலவேளைகளில்
சிலகதை சொல்லும்
காதல் என்றும்
காமம் என்றும்
இலக்கியமென்றும்
சினமாவென்றும்
ஏதேனும் சொல்லும்
சிலவேளை அரசியலும்.
வைன் பொழுதுகளில்
அதனுடன் காதலையும் காமத்தையும்
பற்றி பேசவே ஆசை கொள்வேன்.
வைன் பொழுதுகளில்
நீயும் நானும் எப்போதும் நெருக்கமானவர்களாக
இருப்போம்
உனக்கும் அவ்வாறிருக்கும்.
ஒரு பீர் போல
ஒரு வொட்கா போல
ஒரு தரமான விஸ்கி போல
இன்னும் பலவகை சோம பானங்கள் போல
வைனை நான் மேசை போட்டு
பகிர்ந்து பருக விரும்புவதில்லை.
உனக்காக
எப்போதும் தனிமையில்
நானும் வைனும்.
வைன் பொழுதுகளில்
பேனா எடுக்கலாம்
பிரபஞ்சம் ஆளலாம்
என்றெல்லாம் எண்ணியதுண்டா.
அழகிய வைன் கிண்ணங்களை
வாங்குவதில்
நீயும் புழகாங்கிதம் கொள்வாயா
கண்ணம்மா
அந்தக் கிண்ணத்தில்
வைன் வீழ்வதையும்
அதன் திமிர் காட்டாத
திமிர் நிரம்பிய அழகைப்
பார்த்து நீயும்
கர்வம் கொள்வாயா.
உப்பும் அதிகமானால் கேடு
சர்க்கரையும் அதிகமானால் கேடு – இதில்
வைன் மட்டும் விதிவிலக்கா என்ன!
ஒரு தேநீர் போல
விடுதலை கிடைக்காத வைனை
அருந்துவதில் ஏதேனும்
ஒரு தேநீர் போல
விடுதலை கிடைக்காத வைனை
அருந்துவதில் ஏதேனும்
சமூகச் சிக்கலை
எதிர்கொண்டதுண்டா நீ -இல்லை
அதை நீயும்
ஓரு தமிழ்ச் சமூகப் பேரவலமாக
பார்த்தபடி
சிரித்துக் கொண்டே
கர்வம் கொண்டு கடந்து செல்கிறாயா.
உனக்கான ஒரு கோப்பை
வைனும் நானும்
காத்திருக்கிறோம் கண்ணம்மா.
மகிழ்ச்சி
poppurushoth21@gmail.com