கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது. பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் இச்சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.
ஒன்ராறியோ கல்விச் சபையில் கல்வி கற்கும் மாணவர்களின் போட்டிக்கான விண்ணப்ப முடிவுநாள் எதிர்வரும் (10-12-2011) டிசம்பர் 10ம் திகதியாகும். இந்த நாளுக்கு முன்பாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இணையத்தளத்தில் காணப்படும் (ontta.org – online) விண்ணப்பத்தை நீங்கள் எளிதாக நிரப்பியனுப்ப முடியும். தேவையெனில் நீங்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் (downlord) செய்துகொள்ளலாம்.
பத்திரத்தை உங்கள் தமிழ் ஆசிரியரிடம் கையளிக்கலாம்.
போட்டிகளுக்கான சொற்கள் வாசிப்புப் பகுதிகள் எழுதுதல் போட்டிக்கான விபரங்கள் என்பன விரைவில் இத்தளத்தில் http://ontta.org இணைக்கப்படவுள்ளன.
ஒன்ராறியோ தமிழாசிரியர் சங்கத்தின் பணிகள் மேலும் சிறப்புற உங்கள் அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம்.
Welcome to Ontario Tamil Teachers Association
Our vision is to make a positive impact upon Ontario and surrounding cities by creating a nation-wide tamil center in which all are welcome. Website: http://ontta.org