தமிழ் மலையாள சிறுகதைகள் ( 1980 வரை )

- சுப்ரபாரதிமணியன் -கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி , சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும் .

தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது .அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது .அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள்  என்பதை குளத்தங்கரை அரசமரம்  கதை சொல்கிறது . இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில்  இடம்பெற்றது ,

மலையாள இலக்கிய உலகில் வெங்கையில் குன்ஷிராமன் நாயர் என்ற பத்திரிக்கையாளர் 1861 இல் எழுதிய நகைச்சுவை கதை ஒன்று முதல் கதையாக கணிக்கப்படுகிறது கெ.ஏ சுகுமாரன் மலையாள இலக்கியத்தின் முதல்வர் என்ற பாராட்டுகளோடு ஜனங்களிடத்தில் மின்னலிட்டவர் .  கேலி சித்திரம் உத்வேகம் நிறைந்த வசனம் தொடர்கள், காதல் ,ஆபாசம் என்ற கலவையுடன் கொடுத்தார். அவர் கதைகள் சுவாரஸ்யத்தளத்துடன் விளங்கின

1933 மணிக்கொடியின் முதல் இதழ் வெளிவந்தது. முதல் தமிழ்ச் சிறுகதைகளின் வீச்சு வெகுவாக வெளிப்படத்தொடங்கியது பி எஸ் ராமையா அதன் ஆசிரியராக திகழ்ந்தார் .மூன்று ஆண்டுகளில் அது நின்று விட்டது. விகடனின் நிறைய சிறுகதைகளை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி  1941 கல்கி இதழ் ஆசிரியர் ஆனார்.வணீக ரீதியான கதைகள் கோலோச்சின. அவற்றினை மீறி புதுமைபித்தன், குபாரா,பிச்சமூர்த்தி, சிசு செல்லப்பா போன்றோர் முக்கிய ஆளுமையாக வெளிப்பட்டனர்.  சரஸ்வதி இதழ்மூலம் சிறுகதைகளில் நிலைநிறுத்திக் கொண்டனர் கோபம் கொண்ட தலைமுறையாய் 1952- 62ல் சரஸ்வதி இதழின் மூலம் தொமுசி ரகுநாதன், ஜெயகாந்தன் , சுந்தரராமசாமி போன்றோரும் தங்களைச் சிறுகதைகளில் நிலை நிறுத்திக் கொண்டனர்.

1952-62 ல் எழுத்து இதழின்  ஆசிரியர் சி சு செல்லப்பா பல நல்ல கதைகளை எழுத்துலகில் அடையாளம் காட்டினார்.1955க்குப்  பின் சரஸ்வதி,  சாந்தி, தாமரை போன்ற இதழ்கள் சோசலிச கதைகளுடன் யதார்த்த உலகைக் காட்டின . அறுபதுகளில் வெகுஜன  இதழ்கள் நல்ல சிறுகதைகளில் வெளிப்படுத்தின.திஜா போன்றோர் வெளிப்பட்டனர்.

எழுபதற்குப் பிறகு கோபம் கொண்ட தலைமுறையினரிடம் சமூகப் பார்வையும் உள் மன ஆசையும் ஊடாடின . அசோகமித்திரன் பிரபஞ்சன்          கி ராஜநாராயணன் வண்ணதாசன் ஜெயபிரகாசம் உட்பட பலர் சிறப்பான கதைகளை உருவாக்கினர் .எண்பதுகளில் கோணங்கி, சுப்ரபாரதிமணியன் சங்கரநாராயணன் ஜெயமோகன் போன்றோர் புதிய வீச்சுடன் சிறுகதைகளை அணுகினர்

மலையாளத்தில் ஆரம்ப காலகட்டத்தில் கெ.சுகுமாரன், மூர்க்கோந்து குமரன் , அம்பாடி நாராயணன் பொதுவான்  போன்றோர் வெளிப்பட்டனர். நிகழ்ச்சிகளை கதையாக்கி சிறப்பு செய்தனர். ஈவி கிருஷ்ணன் பிள்ளை போன்றோர் முன்னிலை வகித்தனர்.

அடுத்த தளத்திற்கு மலையாள கதைகளை எஸ். ராம வாரியார், எம். ஆர், பட்டத்திரி  பாடு போன்றோர் நுழைந்து ரியலிஸம் ரொமாண்டிசிசம் கலந்து தந்த காலகட்டத்தை பிரதிபலித்தனர்  1930- 35 களில் யதார்த்த அடித்தளங்களில் கேரள சமூக வாழ்க்கை ஓரளவு வெளிப்பட்டது. முந்திரில் கோடு ராம வாரியார், பட்ட்த்திரிபாடு  போன்றோர் இதில் முன்னணி வகித்தனர் . பிறகு வந்த எழுத்தாளர்களில் கேசவதேவ், பொற்றெக்காடு, காரூர், தகழி, பஷீர், லலிதாம்பிகார்ஜனா போன்றோர்  சமூக தளங்களுக்கான பொருளை எடுத்துக் கொண்டனர், பாட்டாளி வர்க்க இலக்கியம் ஒருபுறம் கோலோச்சியது .பஷீர் சமூக சிக்கல்களையும் வெளிப்படுத்தினார். கலை பிரச்சாரம்  அன்றி வேறில்லை . தானும் முற்போக்குக் கருத்துகளீன் பிரசாரகன்  என்று கேசவதேவ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.பஷீர் போன்றோரின் சிறுகதைகளில் வறுமை சார்ந்த சித்திரங்கள் நகைச்சுவையாகவும் எள்ளலும் கலந்து  ஒரு புதிய பரிமாணம் பெற்றன .

தகழியின் கதைகளில் ஒரு புறத்தில் மாபசான் பாதிப்பும்,செகாவின் ஆழமும் கருக்கொண்டு ஆன்மீகம், வறுமை  என்று ஊடாடின. .பொன்ன்னம் வர்க்கி, கோவூர் ,கிருஷ்ணன் குட்டி உருபு போன்றோர் மத்தியதர வர்க்க பிரச்சனைகளையும்  வாழ்வியலையும் வெளிப்படுத்தினர்.  இன்னொருபுறம் கேரளா வாழ்வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின.

அடுத்ததாய் அந்த புதிய தலைமுறை காலத்தின் மாற்றத்தை பிரதிபலிப்பைக்  காட்டியது. என் டி வாசுதேவன் நாயர், குட்டி கிருஷ்ணன், ராபி, வெட்டுவன் போன்றோர் சமூக வாழ்வியலையும் வெளிப்படுத்தினர். அவை இன்னொரு புறம் கேரளா வாழ்வியலை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தின. அடுத்து வந்த புதிய தலைமுறை கால மாற்றத்தின பிரதிபலிப்பை காட்டியது.எம்டி வாசுதேவன் நாயர்  கதைகளில் நசிந்து போன நாயர்  சமூக நினைவுத்தொடர்கள்  மனோத்துவம் கலந்த வார்ப்பில் மிளிர்ந்தன.  முகுந்தன் சக்காரியா சி வி பாலகிருஷ்ணன் கமலதாஸ் ஹரிகுமார் பத்மநாபன் போன்றோரின் சிறுகதைகள் தனித்தன்மையாக விளங்கின பிரஞ்ச் ஆட்சியில்  இருந்த நேரத்தில் பிறந்த முகுந்தன் கதைகள் மய்யழி நதிக்கரை மக்களின் வாழ்வியலை பிரதிபலித்தன. அவர் கதைகளில் நினைவுகள் வரலாற்றில் சிறு சிறு பகுதிகளாக நின்றன. .எந்த காலகட்டத்திலும் தெளிவான கூறுகளைக் கொண்டவை முன்னிலைப்படுத்தவில்லை .எந்த கண்ணோட்டத்தையும் எந்திரத்தனமாக சரியாக பகுப்பாய்வு செய்ததில்லை. எந்த ஒரு நிலப்பகுதியில் அதன் புவியில் வகையில் பரந்த அளவில் அறிமுகப்படுத்துவதில்லை. எல்லாத் தெளிவான கூறுகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன  இன்றியமையாத பகுதிகள் அல்லது சாரம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. எழுத்து, களம், நடப்புகாலம் ஆகியவற்றில் வரலாறு எதார்த்தமாக மாறும் உண்மையின் அசலான நிலையைத் தரும் முகுந்தனின் அனுபவ பற்றி கேபி அப்பன் குறிப்பிட்டிருந்தார்.  அந்த பாதிப்பு எண்பதுகளின் முக்கிய  மலையாள போக்காகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது இப்போக்கு பின்நவீனத்துவ தாக்குதலில் இன்னும் தீவிரம் பெற்று மலையாள சிறுகதைகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது .

உதவியவை :
1.  மலையாள விமர்சகர் கேபி அப்பன் கட்டுரைகள்
2. மலையாளச் சிறுகதைகள் ( என்பிடி ) வெளியீடு
3.  தமிழ் சிறுகதை வரலாறு –மாலன்
4. தாய்பால் தொகுதி -முகுந்தன் -சாகித்ய அகாடமி வெளியீடு

subrabharathi@gmail.com