‘இத்தாலியில் வாழ்ந்தாலும் தான் வாழ்ந்த நாரந்தனை மண்ணின் கனவுகளைச் சுமந்து ‘புலத்தின் கனவு’, ‘குளிர்விடும் மூச்சு’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை தந்திருக்கும் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலனின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியதொன்றாகும். சொந்த மண்ணில் வழங்கள் நிறைய இருந்தபோதிலும் அவற்றை பூரணப்படுத்திக் கொள்ள முடியாத பல தடைகள் தாயக மண்ணிலே நிகழ்ந்துவிட்டதே என்று மனதில் எழும் ஆதங்கங்களை மென்மையான கவிதை வரிகளிலே தமிழ் உணர்வும், ஆத்மீக மரபும்ää சமூக பொறுப்புணர்வும் கொண்டு படைத்திருக்கும் இக்கவிதை நூல்கள் ஜெயசீலனின் வெற்றிகரமான முயற்சியாகும். மிகவும் குறுகிய காலமே அவருடன் நான் பழக நேர்ந்தபோதிலும் ஒரு கருமத்தை எடுத்தால் அதனை நேர்த்தியாகச் செய்யும் ஆற்றல் அவரிடம் பொதிந்துள்ளது கண்டு வியந்திருக்கிறேன்’ என்று இத்தாலியின் பலர்மோ நகரின் கோல்டன் திரையரங்கில் இம்மாதம் ஆறாம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல்வெளியிட்டு விழாவில் தலைமை தாங்கி உரையாற்றிய ஆன்மீகப்பணியக இயக்குனர் அருட்பணி பீற்றர் ராஜநாயகம் தெரிவித்தார்.
‘புலம் பெயர்ந்து வாழ்ந்த நிலையிலும் இங்குள்ள தமிழ் சிறார்கள் தமிழ் மொழியைக் கற்று நமது தமிழ் பண்பாட்டை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு பலர்மோவில் இலக்கிய மன்றத்தை நிறுவி தமிழ்ப்பணி ஆற்றி வரும் ஜெயசீலனின் சமூக உணர்வு மதிக்கத்தக்கதொன்றாகும். கவிதைகள் மெல்லுணர்வுகளை வாசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கவிபுனையும் ஆற்றல் ஜெயசீலனிடம் நிறையவே காணக்கிடக்கிறது’ என்று கௌரவ விருந்தினராக பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த குரூஸ் ஜெயசீலன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
‘கலை, கலாச்சாரம், நற்சிந்தனை ஆகியவற்றை போதித்து என்றும் நல்லதையே செய்ää நல்லதையே நினை, வீழ்ந்தாலும் தாழ்ந்தாலும் துணிவோடு எழுந்து நில் என்று என்னைச் செதுக்கி வளர்த்தது போலவே என் தந்தை தன்; அயராத உழைப்பினால் கவிதை மணிகளைத் தந்திருக்கும் பண்பினை எண்ணிப் பெருமைப் படுகின்றேன்’ என்று செல்வி . யூலியா ஜெயசீலன் அவர்கள் இத்தாலி மொழியிலும், தமிழிலும் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.
‘நீண்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்ட நம்மத்தியில் இன்று தமிழ் அறிஞர்களும், கவிஞர்களும் அருகிக்கொண்டு வரும் நிலையில், புலம் பெயர் மண்ணில் கவிதையின்வழி தமிழ் ஆர்வத்தை விதைத்துச் செல்லும் கவிஞர் ஜெயசீலனின் இந்த இரண்டு கவிதைப் படைப்புகளும் நாளை எம் தமிழர் வரலாற்றில் நிட்சயமாகப் பேசப்படும். தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் வாழ்ந்து வளர்ந்த மண்ணின் மரபிலிருந்து கவிஞர் ஜெயசீலன் படைத்திருக்கும் இக்கவிதை இலக்கியங்கள் புலம்பெயர் இலக்கியத்தில் குறிப்பிட்டுக்கூற வேண்டிய ஒன்றாகும்’ என்று தாயகத்திலிருந்து வந்திருந்த அருட்பணி அந்தனி யேசுதாசன் அவர்கள் தனது சிறப்புரையில் தெரிவித்திருந்தார்..
‘500 ஆண்டுகளுக்கு மேலாக, போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே நாரந்தனை விசுவாசம் மிகுந்த கத்தோலிக்கர்களைக் கொண்ட பிரதேசம் ஆகும். நாரந்தனை – கரம்பன் – சரவணை – சுருவில் – மிருசுவில்- புங்குடுதீவு – வேலணை – அல்லைப்;பிட்டி – மண்டைதீவு போன்ற கீர்த்தி மிக்க பகுதிகளில் தேவாலயங்களை உள்ளடக்கிய மகிமை மிக்கது.
டொன் சூசைக் கணக்கர் அவரது பேரன் சந்தியாப்பிள்ளைää அன்றூ பஸ்ரியாம்பிள்ளை அத்தகைய மிகப்பெரிய பாரம்பரியத்திலிருந்து கத்தோலிக்க சமூக சிந்தனையின் பின்னணியில் அப்பகுதி சிறந்து விளங்கியதாக அறியமுடிகின்றது. அத்தகைய அறிஞர்களைத் தந்த நாரந்தனைப் பிரதேசத்திலிருந்து தமிழ் உணர்வோடும், ஆன்மீக உணர்வோடும், தமிழ் சமூகத்தைப் பற்றிய அக்கறையோடும் அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களும் தோன்றியிருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது’ என்று லண்டனிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர் நவஜோதி ஜோகரட்னம் ‘புலத்தின் கனவு’ என்ற நூலின் ஆய்வுரையில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் ‘பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வீரமாமுனிவர் போன்ற தமிழ் அறிஞரைப் பயந்த இத்தாலி நாடு இன்று அத்துணைத் தமிழ் தொடர்பின்றி இருக்கிறது. தமிழ்த்தொண்டை, கலைகளைப்பற்றி மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் அவர்களின் ஆசை இன்று கவிஞர் ஜெயசீலன் அவர்களால் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. தனக்குள் உதிர்க்கும் அனுபவங்களை – மன உணர்வுகளை இயற்கையால் மட்டுமே உணர்ந்துகொள்ளக் கூடிய அடுத்தவர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக என்னால் கவிஞர் ஜெயசீலனைப் பார்க்க முடிகின்றது. வாழ்க்கையில் தாம் எதிர்கொண்ட மனதைப் பாதித்த வலிகளை அழகியல் உயிர்ப்புக் கொடுத்து சமூகத்தின் பால் ஒரு பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு கவிதைகளை படைக்கிறார்கள் கவிஞர்கள் என நான் பார்க்கின்றேன். இப்படித்தான் கவிதைகள் பிறக்கின்றன என எண்ணுகின்றேன். அந்த வகையில் ஜெயசீலனின் பல கவிதைகள் என் சிந்தனையைத் தொட்டுச்சென்றது. அடுத்து ஜெயசீலன் ‘பன்னிரு திங்கள்’ என்ற கவிதையில் பன்னிரண்டு மாதங்களை நன்றியோடு வர்ணிக்கும் பாங்கு மிக அழகாக மனதுக்கு ரம்மியம் தருகின்றது. வெறும் சொற்கள் தான்ää கருத்துக்கள் ஏற்றப்படும்போது கவிதைகளாகின்றன என்று எண்ணத்தோன்றுகின்றது. இப்போது நினைத்தாலும் எனது ஆனைக்கோட்டைக் கிராமம் அழகானதாக என்னுள் விரிகின்றது. அங்கு வாழ்ந்த அந்த மனிதர்களும் மிக அழகானவர்கள் தான். ‘ஓன்றின் நினைவே ஒருவனுக்கு சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தான் இருக்கவேண்டும் என்று! ஜெயகாந்தன் ஒரு சிறுகதையில் குறிப்பிடுவது என் நினைவில் இங்கே வந்து போகிறது. ஜெயசீலன் அவர்களுக்கு நினைவுகள் சங்கத் தமிழ்நாடு, தமிழ் மொழி, பார்க்கும் விழிகள், மலரும் முகங்கள் எல்லாமே சேர்ந்து அழகு காட்டி காட்சிகளாக்கி வடிவம் கொடுப்பது அலாதியாக உள்ளது’ என்று மேலும் தெரிவித்தார்.
‘குளிர்விடும் மூச்சு’ என்ற நூலை அருட்பணி ஆரோக்கியம் சவரி அவர்கள் கருத்துக்கள் செறிந்த ஆய்வுரையை அழகுற வழங்கியிருந்தார். வரவேற்புரையை திருமதி கலிஸ்ரா ஜெயசீலன் வழங்கியிருந்தார். ஏற்புரையை வழங்கிய கவிஞர் ஜெயசீலன் அவர்கள் ‘பாறை’ என்ற சஞ்சிகையை முன்னெடுத்த அருட்பணி விமல்ராஜனின் சிறந்த பணிகளைப் பாராட்டி மகிழ்ந்ததோடு, நாரந்தனைக் கீதம் வழங்கிய நாரந்தனைச் சிறார்கள்ää வரவேற்பு நடனம் வழங்கிய நிருத்தியாலயா நடனப்பள்ளி மாணவர்கள்ää நடன ஆசிரியைகள்ää சிறப்பாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள்;ää நாரந்தனை மக்கள் நல்வாழ்வுச்சங்கம்ää காவலூர் இளையோர் விளையாட்டுக்கழகம்ää சூசையப்பர் சபையினர்ää பாறைப் பத்திரிகைக் குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி இனிதே நிறைவு செய்தார்.
19.7.2019
NavajothyBaylon@hotmail.co.uk