மனக்குறள்-22: தமிழும் தமிழரும்
உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!
இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம் என்க!
இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!
எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!
தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!
இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!
இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!
தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!
இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!
சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!
மனக்குறள்-23: அணித்தமிழும் ஆராய்ச்சியும்
திருக்குறளை லத்தீனிற் தேனாய் மொழிந்தார்
அருள்வீர மாமுனி வர்!
அண்ணாம லைக்கழகம் ஆனமுத லாசிரியர்
தண்ணார் விபுலானந்தர் தான்!
கருவாய்த் திருமூலர் காணத் தமிழ்ப்பா
அருள்வாய் எனக்கேட்டார் ஆர்!
முத்துத் தமிழ்ஆய்வில் மேவுதனி நாயகத்தார்
வைத்தார் அறுபதாறில் வண்ணம்!
நான்கென்க யாழ்நகரில் நம்தமிழ் மாநாடு
கூனிட்டுக் கொன்றனரே கொள்!
பத்தென்கச் சிக்காக்கோ பார்த்ததமி ழாராய்ச்சி
வைத்தார்பத் தொன்ப வடம்!
தமிழும் அரசியலும் தந்தைசெல்வா வென்;ற
இமயம் விதைத்ததுவே ஏர்!
இற்றைநாள்; ஈழம் இயன்றபத் தொன்பதிலே
கற்றை எதிரிகண்டோம் காண்!
வள்ளுவம்தொல் காப்;பியம் வாய்த்த கணக்குஎலாம்
தௌ;ளுதமி;ழ் பெற்றெடுத்த தேசம்!
பன்னி;ரண்டு ஆண்டு பரிந்துவிபு லானந்தர்
அன்புரைத்தார் யாழ்நூல் அளித்து!
மனக்குறள்-24: இருக்கையும் இருந்தமிழும்
தெற்காசி யாத்தவிர திக்காருங் ஹாவார்ட்டில்
பெற்றார் தமிழிருக்கைப் பொன் !
தொரன்றோவின் பல்கலையும் தேருந் தமிட்கு
இருக்கை யமைத்தார் இயம்பு !
தமிழிருக்கைப் பாடல் தழைஇ தொரன்றோ
இமிழார் இமானே இசை!
வானூர்தி செல்லும் வழி;தமிழிற் சொல்லுமே
இந்தியா, சிங்கப்பூர் ஈழம்!
பாஞ்சாலி காதையே பாரதியார் பாடலின்
வாஞ்சை படைத்த வரம்!
தமிழைத் தமிழர்க்குத் தப்பாமற் தமிழை
அமயமென வைத்தார் அமர்வு!
தனிநா யகத்தார் தகையருட் தந்தை
தமிழாய்ந்தார் வண்ணத் தமிழ்!
தமிழ்த்தாய் வணக்கம் தமிழிற்குக் கண்டார்
மனோன்மணியச் சுந்தர னார்!
தனித்தமிழ் போற்றும் தமிழ்மொழி யாக்கம்
மறைமலை யிட்ட வடிவம்!
தனித்தியங்கும் என்றே தமிழ்மொழியைக் கண்டார்
அருட்தந்தை கால்வெட் அறிஞர்
vela.rajalingam@gmail.com