மனக்குறள்:28 , 29 & 30

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !


மனக்குறள்:29 நிலம் பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்தோர் ஆகிப் பெருந்தமிழர் நின்றார்
கலங்கியதே வாழ்க்கைக் கடல் !

இரண்டா யிரமாண்டின் எல்லை வரைக்கும்
திரண்டார் கனடியத்தைத் தேடி !

ஆசியத்தில் ஐந்தாம் அணிநாடு என்கவே
வுhசமெனக் கண்டார் வழி; !

தன்னேர் அறிவிற் தகையோடுங் கல்வியில்
வென்றார் கனடா விருப்பு !

தொரன்றோவும் மொன்றியல் செப்புங் கனடாப்
புரமென்க நின்றார் புகல் !

தமிழர் தகவல் தனித்தபெரும் ஏடு
அமிழ்தாகி மாதமிடும் ஆர் !

ஆங்கிலம் ஆர்தமிழ் ஆக்கமெனப் பத்திரிகை
தாங்கும் கனடாத் தமிழ் !

வானொலிகள், மாண்பார் மனையிற் தொலைக்காட்சி
காணொளிக ளார்க்கும் கனம் !

நற்பணியும் கல்வி நயக்கும் வளாகமெலாம்
கற்கநெறி பெற்றார் கனி !

வணிகம் தொழிலாக்கம் வையத் துறைசார்
இணையோடும் எல்லாம் இருப்பு !


மனக்குறள்:30 கனடா மதிப்பு – தேர்தல் தினம்

காலை விடியும் கடும்பகலிற் தேர்தலொடும்
மாலை முடிவுவரும் மன்று !

தேர்தற் கொடுமை திருப்பம் பகைமையென
சாடும் வகையறியார் சால !

காவியுடை இல்லைக் கரணம் மரணமில்லை
யாவும் அமைதி வலம் !

வாளும் வருத்தமிலை வாதஇன வாதமில்லை
வாழுங் கனடா மதிப்பு !

பிரெஞ்சும் ஆங்கிலமும் பேசிவரும் ஆட்சி
யிரண்டுமொழி உண்டே இயல் !

தமிழ்மரபுத் தைத்திங்கள் சார்ந்தவோர் சட்டம்
கமழுந் தமிழர் கனம் !

பல்கலாச் சாரமதில் பங்குற்ற மக்களொடும்
சொல்லாது நிற்;கும் சிறப்பு !

தமிழும் அரசியலும் தாங்கும் கனடா
அமிழ்தம் எனக்காணும் ஆர் !

அமைப்புப் பணியிற் திகழுங் கனடாத்
தமிழர் அமைப்;பே கருது ! (ஊவுஊ)

பல்திறத்தோர் பேசும் பகுத்தறிவோர் ஆட்சியியல்
சொல்லும் கனடா தினம் !

vela.rajalingam@gmail.com