நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programmeநிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme
20.5.2011 வெள்ளி மாலை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 வரை; இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை

சமகால ஈழ நாடகம் : கலந்துரையாடல்; உரையாடுவோர்: இங்கிலாந்திலிருந்து க. பாலேந்திரா கலந்து கொள்கிறார். பாலேந்திரா இலண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நெறியாளர். கடந்த பல தசாப்தங்களாகச் சளையாது இலங்கையிலும் புகலிடத்திலும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். புகலிட தமிழ் குழந்தைகளுக்கான நாடகப்பள்ளி இவரது முக்கியமான பங்களிப்பு.

பிரான்சிலிருந்து ரகுநாதன் கலந்து கொள்கிறார். ஈழ நாடகத்தின் முதல்தலைமுறைக் கலைஞர்களில் முன்னோடியானவர். மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர். ஈழ சினிமாவான வாடைக் காற்று திரைப்படம் முதல் இன்றைய இளம்தலைமுறை புகலிடத் திரைக்கலைஞர்கள் உருவாக்கும் குறும்படங்கள் வரை அவற்றில் பண்பட்ட நடிகராகத் தனது முத்திரையைப் பதித்து வருபவர்.

கனடாவிலிருந்து ஜயகரன் கலந்து கொள்கிறார். நாளை நாடக அரங்கின் நெறியாளர். தேடகம் அமைப்பில் பல்லாண்டுகளாகச் செயலாற்றி வரும் ஜயகரன் தேடகம் வெளியிடும் தேடல் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் செயலாற்றி வருகிறார். புகலித் தமிழர்களின் மனநெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தனது நாடகங்களில் சித்தரித்து வருகிறார்.

நிகழச்சித் தயாரிப்பு
குருபரன்-யமுனா ராஜேந்திரன்
rajrosa@gmail.com