முனைவர் தெ.வெற்றிச்செல்வனை ஆசிரியராக்கொன்டு வெளிவரும் இணையத்தளம் ‘பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology) ‘. அத்தளத்தினை இம்முறை ‘பதிவுகள்’ வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். ‘திணைசார் சமூக வாழ்வியல் கொண்ட தமிழர், திணைபெயர் வாழ்வியல் மாற்றம் பெற்று உலகெங்கிலும் பரவி வாழ்கின்றனர். வணிகம், போர் போன்ற பண்டைக்கால தமிழர் பரவல் காரணமாகவும், வேலைவாய்ப்பு, அகதிமைசார் அலைந்துழல்வு போன்ற சமகால தமிழர் பரவல் காரணமாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பாக தமிழ் அடையாளத்தைப் பேணுவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் சூழ்ந்த போதிலும், ஓரளவு உலகளாவிய தமிழியல் முயற்சிகள் குறித்த அடையாளங்கள் ஆங்காங்கே தென்படாமல் இல்லை. கல்வி, தமிழாய்வு இவற்றில் இவர்கள் செலுத்திவரும் கவனம் இப்போது கூர்மைப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழியல் குறித்த ஊடகம், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி, வரலாறு, அரசியல்அறிவியல், பொருளாதாரம் பல்இன மக்களிடையே வாழ்வியல் பொருத்தப்பாடு, ஆய்வியல் என பல்துறைத் தேவைகளை வெளிக்கொண்டு வர உள்ளது, இவ்விதழ். படைப்புகள், நூல்அறிமுகங்கள், கூட்டநிகழ்வுகள், பதிவுகள், பின்னூட்டங்கள் அனுப்பி உதவி, தொடர்ந்து ஆதரவு தர விழைகிறோம்’ என்று உலகத்தமிழ் வாசகர்களைக் கேட்டுக்கொள்ளும் ‘பன்னாட்டுத் தமிழ்’க் குழுவினருக்கு உங்கள் ஆதரவினை வழங்குங்கள். ‘பன்னாட்டுத் தமிழ்’ இணையத்தளத்தின் முகவரி: http://internationaltamilology.com
ஆசிரியருடனான தொடர்புகளுக்கு:
முனைவர் தெ. வெற்றிச்செல்வன்
செல் பேசி: 94439 43988
மின்னஞ்சல்: vetripoet@gmail.com