அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ( Australian Tamil Literary & Art Society) மெல்பனில் தமிழ்த்தூது வண.பிதா தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நினைவுப்பேருரை!

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச்சங்கம் ( Australian  Tamil   Literary  &  Art  Society) மெல்பனில் தமிழ்த்தூது வண.பிதா தனிநாயகம் அடிகளார்   நூற்றாண்டு நினைவுப்பேருரை!அவுஸ்திரேலியா   தமிழ்    இலக்கிய   கலைச்சங்கத்தின்   வருடாந்த எழுத்தாளர்  விழா    இம்முறை   கலை – இலக்கிய   விழாவாக    எதிர்வரும் ஜூலை   மாதம்  26 ஆம்  திகதி  (26-07-2014)  சனிக்கிழமை  பிற்பகல்  2  மணி முதல்   இரவு  10  மணிவரையில்     மெல்பனில்     St.Bernadettes  Community  Centre    மண்டபத்தில் (1264, Mountain Highway,   The Basin – Vic- 3154)   நடைபெறும். உலகத்தமிழாராய்ச்சி  மன்றத்தினை  உருவாக்கியவரும்  உலகெங்கும் தமிழியல்   ஆய்வுகளை   மேற்கொள்ள   வழிவகை    செய்தவருமான தமிழ்த்தூது  அமரர்  வண. பிதா  தனிநாயகம்  அடிகளாரின்    நூற்றாண்டை முன்னிட்டு   அவர்   தொடர்பான    நினைவுப்பேருரையும்  இடம்பெறும் இலக்கியக்கருத்தரங்கு   நிகழ்வும்   கலை,   இலக்கிய   விழாவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில்   கலந்து  சிறப்பிக்குமாறும்   தமிழ்த்தூது   தனிநாயகம் அடிகளாரை  நினைவு கூர்ந்து  இடம்பெறும்   கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும்   அனைவரையும்   அன்புடன்  அழைக்கின்றோம். இந்த   அழைப்பினை    தங்கள்  அமைப்பின்   உறுப்பினர்கள்  மற்றும் உறவினர்கள்,   நண்பர்களிடமும்    தெரிவிக்குமாறு   அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய   கலைச்சங்கம்   அன்புடன்    தெரிவித்துக்கொள்கின்றது.

 

மேலதிக  விபரங்களுக்கு:
ஸ்ரீநந்தகுமார் ,  செயலாளர்    04 154 05 361 ;  லெ.முருகபூபதி – நிதிச்செயலாளர்  04 166 25 766                                                              

இவ்விழாவில்   இடம்பெறும்   இதர   நிகழ்ச்சிகள்  பற்றிய   விபரங்கள்
 
கருத்தரங்கு  – விமர்சன அரங்கு –  கலையரங்கு  –   இசையரங்கு  –  நடன   அரங்கு
பகல்பொழுது  நிகழ்ச்சிகள்:     (பகல்  2   மணிக்கு  ஆரம்பம்)

இலக்கிய கருத்தரங்கு
மெல்பன்,  கன்பரா,   பேர்த்   மாநகரங்களிலிருந்து   வருகைதரும் படைப்பாளிகளின்   சிறப்புரைகளும்  அன்பர்களின்   கலந்துரையாடலும் தமிழ்  ஆராய்ச்சிக்கு  ஆக்கபூர்வமாக   உழைத்த   அமரர்   வண.பிதா தனிநாயகம்   அடிகளார்   நூற்றாண்டு    நினைவுப்பேருரை. பல்கலைக்கழக  பிரவேசப்பரீட்சைக்குத்  தோற்றும்   தமிழ்   மாணவர்களுக்கும்   தமிழ்   ஆசிரியர்களுக்கும்  பயனுள்ள   கருத்துரைகள்  இடம்பெறும்  கருத்தரங்கு.

நூல் விமர்சன அரங்கு
மெல்பன் – சிட்னி – கன்பரா  எழுத்தாளர்களின்  நாவல், சிறுகதை, கவிதை, புனைவு  இலக்கிய கட்டுரை,  ஆன்மீக நூல்களின்  திறனாய்வு  நிகழ்ச்சி.
தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு பயனுள்ள வாசிப்பு அனுபவப்பயிற்சிக்கான களம்.

இரவு நிகழ்ச்சிகள்:    ( மாலை 6 மணிக்கு ஆரம்பம்)
மெல்பன்   நிருத்தியோ   பாசனா   நாட்டியக்குழுவினரின்  நாட்டிய நாடகம்.   மெல்பன்  கலாலயா  மெல்லிசைக்குழுவினரின்  பழைய  புதிய  திரை  இசை கானகீதங்கள்.  இலங்கை – இந்தியா – மலேசியா  கலைஞர்களின்        Fusion Dances & Drum
அன்பர்களுக்கு    சுவையான    இரவு    உணவுவகைகள்  
அனுமதி:      குடும்பம்  $10  வெள்ளி     —     தனிநபர்:  $5   வெள்ளி.

அனைவரையும்  அன்புடன்  அழைக்கின்றோம்

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் |  மின்னஞ்சல் முகவரி: atlas2001@live.com

தகவல்: முருகபூபதி  letchumananm@gmail.com