தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் – சேட், சிவப்பு நிற ‘மவ்ளர்” தோளில் – சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.
Continue Reading →