கவிதை: குப்பைகள் குறித்து…

கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1

இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.

Continue Reading →

கவிதை: குடும்ப விளக்கு

ஶ்ரீராம் விக்னேஷ்– 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை  முன்னிட்டு, குத்துவிளக்காகத்  திகழும்  “குடும்ப விளக்கு”ப்  பெண்ணைச்  சிறப்பித்த  பாவேந்தரது வரிகளை,  முடிந்தவரை   என் வரிகளில்   தருகின்றேன். –

முட்டிடும்  கூரைவீட்டில், 
குட்டைபோல்  குனிந்துசேவை.
மட்டிலா  செய்யும் மனைவி!

கட்டிய  கணவன்  நெஞ்சில்,
கிட்டவும்  துன்பம்  சேரா
கெட்டியாய்  நிற்கும்  துணைவி !

பட்டிகள்  தொட்டிதோறும்,
இட்டமாம்  நேசத்தோடு,
பரிமாறும்  இதயம்  இரண்டு !

திட்டமாய்  இருந்தால்  அதனைத்
தீர்க்கமாய்ச்  சொல்லலாமே
திறமான  குடும்பம்  என்று !

பட்டினியோடு  சென்று,
பகல்சாயத்  திரும்பி வந்து
பாயாசம்  உண்டேன் நான்  என்பான்!

கட்டிய  மனையாள் உண்ணக்
கவளத்துச்  சாதம்தொட்டுக்,
காதலோ  டூட்டச்  சொல்வான் இவளோ

Continue Reading →

நிலானியின் ஓவியங்கள்

  நிலானியின் ஓவியங்கள்

இழப்பும் இருப்பும் (LOSS AND EXISTENCE) காண்பியக்காட்சி யாழ்.பல்கலைக்கழக கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது. கடந்துபோன காலங்களையும் கடந்து கொண்டிருக்கும் காலங்களையும் கண்முன்கொண்டுவரும் வகையில் நிலானியின் ஓவியங்கள் அமைந்துள்ளன. வேலிகளும் எல்லைகளும் வீடுகளும் முகப்புக்களும் வாழ்விடங்களும் Unveiled Barrier, Address of Residence ஆகிய தலைப்புகளில் கோடுகளால் நிறைந்து அவரவர் வாழ்வனுபவத்திற்கு ஏற்ப அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துள்ளன. அவரின் Yall Jewellery எனப் பெயரிடப்பட்ட காட்சிகள் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டு வந்துள்ளன. ஈழத்து ஓவியக் கலைக்கு நிலானியின் தொடர் பங்களிப்பு வளம்சேர்க்கவேண்டும். வாழ்த்துக்கள்.

Continue Reading →

சிறுகதை: பிரசாதம்

எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இச்சிறுகதையை அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் நவயோதி யோகரட்ணம்.


… அவள் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. படி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலீஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி  அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான்….           

கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.

அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.

கிழக்கு முக வாசல்;  மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும்  இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன்? பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.

தூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.

அவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.

இந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.

‘எங்கிட்டால வர்றீங்க?’ என்று கேட்டாள் ஆத்தா.

‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.

‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா?’

‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா?’

Continue Reading →

மனக்குறள் 22,23 & 24

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-22: தமிழும் தமிழரும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!

இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம்  என்க!

இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!

எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!

தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!

இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!

இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!

தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!

இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!

சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!

Continue Reading →

தமிழ் நதி

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

Continue Reading →

இரு கவிதைகள்!

1.

முல்லைஅமுதன்தண்ணீரில்
மூழ்கிப்போகும் என்று தெரிந்தும்
அம்மா
காகிதக்கப்பலைத் தண்ணீரில் விட்டாள்..
அவ்வைப்பாட்டி
அவள் இல்லை என்று
நினைக்கும்படி
கதை சொல்லிச் சொல்லி
சோறு
ஊட்டிய அம்மா சொன்னதும் பொய்தானே?
இருந்திருக்கலாம்..
நாகரீககோமாளியாக
தாய்மாமன்…
‘உம்மாண்டி வருகுது’
என்று சொல்லி
பயமுறுத்தியதும்
அதே அம்மாதானே?
‘இந்த வழியால் மட்டுமே போ’
கட்டாயப்படுத்தி
வழியனுப்பிவைக்கின்ற அம்மா..

Continue Reading →

அகில மக்காள் வாருங்கள் !

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -போட்டி பொறாமை எலாம்
பொசுக்கியே விட வேண்டும்
வாட்டமுறும் வகையில் என்றும்
வார்த்தை பேசல் நல்லதல்ல
மூத்தவரை மனம் நோக
வைப்பதிலே என்ன பயன்
கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
கிழித் தெறிவோம் வாருங்கள் !

பெற்றவர்கள் மனங் கலங்க
பிள்ளை செய்தல் கூடாது
சொத்துப்பற்றி சண்டை செய்து
சுகம் பறிக்கக் கூடாது
கற்றுத் தந்த ஆசானை
களங்கமுற வரும் நினைப்பை
கடுந்தீயில் போட்டு நின்று
கருக்கி நிற்போம் வாருங்கள் !

Continue Reading →

ஒளிப் பதிவுக் கலை (கவிதை)

– 19.08.2019  உலகப்  புகைப்பட  தினத்தை முன்னிட்டு, இக் கலையை  மதிக்கும்,  அத்தனை  கலைஞர்களுக்கும்  இக்கவிதை  சமர்ப்பணமாகிறது. –
ஶ்ரீராம் விக்னேஷ்
பாரதி  தாசன்சொல்  “உருக்கவர்  பெட்டி”யின்
பரிணாம  வளர்ச்சியா  லே,
பாரினை  ஓர்திரை  அரங்கிலே  கொட்டிடும்
படைப்பாளி  ஆகினோம் : நாம் !
ஊரினை  பேரினை  உறவினை  அறியாது,
ஓர்முனை  எட்டினோ  ரும்….
யாரவர்  என்பதைக்  கவர்ந்திங்கே  சொல்லுவோம்
யாம்செய்யும்  தொழிலினா  லே !

கனவிலே  சுற்றிடும்  உலகென்று  பேருக்கு
கண்டவர்  சொன்னபோதும் :  பலர்
கனவினை  நனவாக்க  கையிலே  பணங்கொட்டும்
கடவுளாம்  கலையின்  கூடம் !
மனதிலே  தோன்றியும்,  தோன்றலுக்கு  அன்றியும்
மறைந்திடும்  காட்சி  முற்றும்,
தனதுளே  காட்டுமே  தலைசுற்றப்  பண்ணுமே
தந்திரக்  காட்சி  மற்றும் !

“ஏன்.?”என்று  கேட்டிட  எவரின்றி  வீதியில்
இழிநிலை  கண்டமா  தும்,
“மான்”என்று  காட்டிட  ஒப்பனைக்  கலையினார்
மணியாகச்  செய்தபோ  தும்,
வான்நின்று  சிரிக்கின்ற  வண்ணத்  தாரகை
“வா.!”என்று  ரசிகர்மோ  தும்,
நாம்நின்று  செய்திடும்  நல்லஒளிப்  பதிவினால்
நடந்தது  அன்றோ  ஏதும்..?

Continue Reading →