‘பதிவுகள்’ இணைய இதழில் வரி விளம்பரங்கள் ‘பதிவுகள்’ இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். ‘பதிவுகள்’ இணைய இதழில் வரி…
கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா. இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி நடத்துபவர். இதய நோயாளி. நட்பால் இணைகிறார்கள். ரூபாவுடன் பாலியல் ரீதியான உறவாகவும் அமைகிறது ஆனால் ரூபாவின் நிலையை அறிந்து கொள்பவர் விலக நினைக்க அது இயலாததாக இருக்கிறது. அவரின் மனைவியும் குடும்பங்களும் தூசிக்கின்றனர்.அவர் நோய் வாய்ப்பட்டு இறக்கிறார். இந்த உறவு குறித்து எரிச்சலாகி . மனைவியின் தம்பி ரூபாவைக்கொல்ல கத்தியுடன் வருகிறான். முன்பே பல முறை ஆண்குறியை அறுக்க எத்தனித்து வெற்றி காண இயலாத நிலையில் கொல்ல வந்தக் கத்தியைப் பயன்படுத்தி ஆண் குறியை அறுத்து விடுகிறாள் ரூபா. நாட்டியத்தில் அக்கறை கொண்டவள். அவள் பயன்படுத்தும் சலங்கையை அவரின் கல்லறையில் சமர்ப்பிக்கிறாள்.( இது தேவையில்லாததாகிறது..நாட்டியத்தை கைவிடும் குறியீடாகவே அமைகிறது )
ஒரு ஆண் பெண்ணாக மாறும் போது அக்குடும்பம் அதை எதிர்கொள்ள சிரமப்படுவது சிறப்பாகவே உள்ளது. ஒழுக்க உணர்வில் தத்தளிக்கிறார்கள். ரூபா தன்னைக்கண்டுகொள்கிற விபத்தை இப்படம் தெரிவிக்கிறது. தென்ஆசிய சமூகத்தால் திருநங்கைகள் பார்க்கப்படும் விதம் பற்றிய நுணுக்கமானப் பார்வை இப்பட்த்தில் உண்டு..திருநங்கைகளின் பொருளாதார நிலை, பாலியல் தொழில் செய்வது, பணததிற்காக நடந்து கொள்ளூம் விதங்கள் விசித்திரமாகவே காட்டப்பட்டுள்ளன. அந்த சமூகம்பற்றிய இரக்கமானப் பார்வையை இப்படம் தொனிக்கிறது . கனடாவில் ஒரு ஆண் பெண்ணாக மாற சட்ட ரீதியான அங்கீகாரம் உள்ளது. ஆனால் தன்னை வடிவமைத்துக் கொள்ள கோகுல் பம்பாய் செல்லுவதும் அங்கிருக்கும் தாயின் பிம்பம் அவள் கனடா வந்த் பின்னும் வழிநடத்துவதும் வலிந்து திணிக்கப்பட்டதாகும்.
முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.
தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப் பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத் “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.
ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.
நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.
“நண்பர் வேந்தனார் இளஞ்சேய் புலனத்தில் யாழ் இந்து நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட இன்னுமொரு கருத்துப் பகிர்வு; பகிர்ந்துகொள்கின்றேன். இளஞ்சேய் என் பால்ய காலத்திலிருந்து நண்பராகவிருக்குமொருவர். அக்காலகட்டத்தில் நாமிருவரும் எம்மிடமுள்ள புனைகதைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாசித்து மகிழ்வோம். அவர் சிறந்த பேச்சாளர்; கவிஞர்; எழுத்தாற்றல் மிக்கவர். பயனுள்ள அவரது கருத்துகளுக்காக மீண்டுமொருமுறை நன்றி.” – வ.ந.கிரிதரன் –
இளஞ்சேய்:
“அன்பிற்குரிய பள்ளிக்கால நண்பர்களே, எம் பள்ளித்தோழன் கிரிதரனின் “அமெரிக்கா” என்ற குறுநாவல், மற்றும் “குடிவரவாளன்” என்ற நாவல், இவ்விரண்டு நூல்களையும் கடந்த சனி- ஞாயிறு முழுமையாக வாசித்தேன். நான் நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். அந்த வகையில் கிரிதரன் என்னை கனடாவில் சந்தித்தபோது, அவரின் பல ஆக்கங்களில்- மேற்கண்ட இரண்டை எனக்குத் தந்திருந்தார். இந்த இரு நாவல்களையும் , இவ்வாறு நாட்டைவிட்டு, செய்த நல்ல வேலைகளை விட்டு , வெளிநாடுகளுக்கு , பெரும் செலவு செய்து , பலவித இன்னல்களுக்குட்பட்டு வந்து, வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து தொடங்கி, இன்று தம் கடுமையான முயற்சியினால் உயர்வடைந்துள்ள நம்மவர்கள், எல்லோரும் வாசிக்கவேண்டும் . இந் நாவல்கள் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. இதனை எமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் இனக்கவரம் ஏற்படுத்திய அழிவுகள், படித்து முடித்து நல்ல உத்தியோகங்களில் இருந்தவர்களும், எல்லாவற்றையும் துறந்து , உயிரைக் காப்பாற்ற , புலம் பெயர் நாடுகளிற்கு சென்று, புலத்தில் இனக்கலவரத்தால் அலையுண்டு திரிந்த தம் உறவுகளுக்கு பணம் அனுப்ப அவர்கள் பட்ட பாடு, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, இவை எல்லாம் ஆவணப்படுத்தப் படல் வேண்டும். ஒவ்வொரு ஈழத் தமிழனின் இன்றைய புலம்பெயர் வாழ்வும், அவன் காலத்திய பிரச்சனைகளை, உறவுகளை விட்டு, ஊரை, உத்தியோகத்தைத் துறந்து , பனியிலும்- குளிரிலும்- கடும் வெய்யிலிலும் , அவன் உழைத்த உழைப்பை, தனிமையில் அவன் தவித்த தவிப்பை எல்லாம், நம் வருங்கால சமுதாயம் உணர்தல் வேண்டும்.
கவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.
கவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.
இன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையின் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.
அண்மையில் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் ‘மனஓசை’ பதிப்பக வெளியீடுகளாக வெளியான மூன்று நூல்கள் கிடைத்தன. இதற்காக அவருக்கு என் நன்றி. இவற்றில் இரு நூல்கள் அவர் எழுதியவை. அடுத்தது அவரது கணவரும் எழுத்தாளரும், ஓவியருமான மூனா (ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) எழுதியது. இவற்றில் சந்திரவதனாவின் ‘நாளைய பெண்கள் சுயமாக வாழ’ அவரது பதினைந்து கட்டுரைகளையும், ‘அலையும் மனமும் வதியும் புலமும்’ பத்தொன்பது சிறுகதைகளையும் , மூனாவின் ‘நெஞ்சில் நின்றவை’ இருபத்தியிரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியவை. அழகாக வடிவமைக்கப்பட்ட வன் அட்டைகள் நூலுக்கு மேலும் சிறப்பைத்தருகின்றன. இவற்றுக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் இவரது கணவரான ஓவியர் மூனா. மேலும் அட்டைகளை வடிவமைத்திருப்பதும் அவரே. புகலிடத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன். அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல்கள் அண்மையில் வெளியான முக்கிய வரவுகள்.
‘நாளைய பெண்கள் சுயமாக வாழ’ நூலிலுள்ள கட்டுரைகள் புகலிடப் பெண்கள், பெண்கள் சுயமுடன் , சமூகத்தில் அவர்களை அடக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் கட்டுரைகள். பெண்களுக்கு பெண் விடுதலை விடயத்தில் சிந்தனைத்தெளிவை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டும் சேவையினை ஆற்றும் கட்டுரைகளிவை. ‘பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை’ என்று நூலுக்கான தன்னுரையில் அறை கூவல் விடுக்கும் சந்திரவதனா நூலின் தாரக மந்திரங்களாக ‘ நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம் பெண்களே வழி கோலுங்கள்’ என்ற கூற்றினையும், ‘பெண்ணே நெருப்பாயும் வேண்டாம். செருப்பாயும் வேண்டாம். உனது இருப்பு , உனது விருப்போடு, உனதாய் இருக்கட்டும்’ என்னும் கூற்றினையும் முன் வைக்கின்றார். பெண்ணுரிமையினை வலியுறுத்தும் தன் எண்ணங்களை இக்கட்டுரைகளில் வலியுறுத்தும் சந்திரவதனா , அவை ஆண்களுக்கு எதிரானவை அல்லவென்றும் குறிப்பிடுகின்றார்.
அண்மையில் நண்பரும், எழுத்தாளருமான வேந்தனார் இளஞ்சேய் என் படைப்புகள் சிலவற்றை வாசித்துத் தன் கருத்துகளைப் புலனம் (Whatsup) மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். என் படைப்புகளை வாசித்துத் தன் கருத்துகளைத் தெரிவித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
1. 05.08.2019
நல்லது கிரி. உங்கள் குறுநாவலான “சுமணதாஸ பாஸ்” ஜ தற்போது வாசித்தேன். இயற்கையை இரசிக்கும் தன்மை – அடர்ந்த காடு – கடும்மழை- குளங்கள்- ஆறுகள்-பறவைகள்-விலங்குகள் – இவற்றை ரசிக்கும் மனப்பாங்கு , பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு அதிகம். அது உங்கள் எழுத்தில் நன்கு தெரிகின்றது. கதை ஓட்டம் , ஆற்றொழுக்காக இயற்கை காட்சிகள் வர்ணனைகளுடன் தங்கு தடையின்றி செல்கின்றது.வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த உங்கள் நூல்களையும் விரைவில் வாசிப்பேன். நிற்க. இக் கதையின் உட்கருத்து – மனிதாபிமானமிக்க சுமணதாஸ் பாஸ் கொல்லப் பட்டதும் , அவனுடன் சேர்ந்து அவன் குடும்பமும் கொல்லப்பட்டதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பும், ஆதங்கமுமே. இதை நான் நன்கு உணர்கின்றேன். ஏற்றுக் கொள்கின்றேன்.
சம்பவம் 1
நானிருந்த கந்தர்மடத்தில் , 1969-73 பகுதிகளில், என் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி ஓர் குடும்பம் வசித்து வந்தது. மூத்த இரு ஆண் பிள்ளைகள்.கடைசி பெண்பிள்ளை. மூத்த ஆண் பிள்ளைக்கு என்னிலும் 3 வயது குறைவு. மற்றவனுக்கு 5 வயது குறைவு. கடைசிப் பெண் பிள்ளை 12 வயது இளமையானவள். இரு பெடியன்களும் எங்களுடன் துடுப்பெடுத்தாட்டம்- உதைபந்தாட்டம் விளையாடுவார்கள். அவர்களுடன் வரும் சிறுமியை, என் சிறிய தமக்கையார் தூக்கிக் கொண்டு திரிவார்.
குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர், அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?
கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.
குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?
கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.
குரு அரவிந்தன்: ஏனைய புலம் பெயர் நாடுகளைப் போல வாசிப்புப் பழக்கம் தற்போது அங்கும் குறைந்து கொண்டு வருகிறதா?
கே.எஸ்.சுதாகர் : வாசிப்புப் பழக்கம் இங்கும் குறைந்துகொண்டுதான் வருகின்றது. `மெல்பேர்ண் வாசகர் வட்டம்’ என்றொரு அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இதில் காலத்துக்குக் காலம் பலரும் இணைந்துகொண்டு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கி வருகின்றார்கள். சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.
குரு அரவிந்தன்: கனடாவிலும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் தற்போது அடுத்த தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றோம். அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள் தமிழ் வளர்ப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்.
கே.எஸ்.சுதாகர் : இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது பல மொழிகளில் இயங்கிவரும் SBS (Special Broadcasting Service) வானொலி. இது பிரதிவாரமும் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணித்தியால சேவையை வழங்கி வருகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதுபோல் பலவிதமான நிகழ்ச்சிகளை இவ்வானொலி தருகின்றது. தவிரவும் சிட்னியில் இருந்து 24 மணி நேரம் இயங்கும் இயங்கும் ATBC (Australian Tamil Broadcasting Corporation), இன்பத்தமிழ் வானொலி, தமிழ் முழக்கம், டிஜிட்டல் மூலம் இயங்கும் `தாயகம்’ என்பவற்றையும் குறிப்பிடலாம். இவற்றைத்தவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் பல தமிழ் வானொலிகள் இயங்கி வருகின்றன.