– ஜூலை 1, 2017 அன்று கனடாவுக்கு வயது 150. அதனையொட்டிய பதிவிது. – எம் தாய்நாடு இலங்கை. இன்று எம் ‘குழந்தை நாடு’ கனடா. அதே…
“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள். சித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள். சிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள். என்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார். காலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.
இத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931 என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.
முள்ளிவாய்க்காலின் இறுதிக்கட்ட அவலங்களைப் புகைப்படக்கலைஞரும், எழுத்தாளருமான அமரதாஸ் அவர்கள் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கால அவலங்களை வெளிப்படுத்தும் இவ்விதமான புகைப்படங்கள் யுத்தத்தின் அவலங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகள். நன்றி: புகைப்பட உதவி – குளோபல்தமிழ் நியூஸ் – http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132287/language/ta-IN/article.aspx
‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.
பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின் வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.
தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஆனந்த விகடனின் தொலைக்காட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரை ஊழல் ராணி என்றும், கொள்ளைக்காரி என்றும் ஆவேசமாகத்திட்டித்தீர்க்கும் காணொளியினை யு டியூப்பில் கண்டேன்.
சட்டம் ஒரு கழுதை என்பார்கள். தனக்கெதிராகக்கூறப்பட்ட தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனு செய்வதற்கும் சாத்தியமற்ற நிலையில் மரணித்த ஒருவர் மீது கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் மீது அவதூறினை வாரி இறைப்பதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா மரணமடைந்துள்ள நிலையில் அவர் மீது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை இறுதியான தீர்ப்பாகக் கருத முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்துக்கூட ‘சீராய்வு’ மனுச்செய்யும் உரிமை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு உண்டு. ஆனால் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு அந்த உரிமை மறுதலிக்கப்படுகின்றது. அவர் உயிருடனிருந்திருந்தால் அவர் தீர்ப்பு மீதான சீராய்வு மனுச்செய்திருக்க முடியும். அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடச் சாத்தியமாகியிருக்கும். ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியாதபடி அவரது மரணம் அமைந்து விட்டது. எனவே அவரை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வழக்கிலிருந்து விடுவித்திருக்கின்றார்கள். அவரைக் குற்றவாளியென்று அறிவித்திருந்தாலும் கூட, ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரால் நீதிபதிகளின் குற்றவாளி என்னும் தீர்ப்பினை எதிர்த்துத் தன் நியாயத்தை எடுத்துரைக்கக்கூடிய சட்டபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தினைப்பாவிக்க முடியாமல் போய் விட்டது.
தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.
இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.
எவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.
பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.
2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa’s Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.
3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.
4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த…
ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் இலங்கை அரசுடனான முரண்பாடுகளினால், அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளினால் மற்றும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்குகிடையிலான முரண்பாடுகளினால் பலியாகிய அனைத்துப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். சிறைகளில்…
தனது தொண்ணூறாவது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத்தலைவர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. லெனின், மாசேதுங், ஹோ சி மின் , சேகுவேரா வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். தான் நம்பிய மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் படை சமைத்து, பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த் ஃபிடல் காஸ்ட்ரோவின் வரலாறு அடக்கு முறைகளுக்கு எதிராகப்போராடும் புரட்சிகர சக்திகளுக்கெல்லாம் முன்மாதிரியானது.
அலுக்காமல், சலிக்காமல் நீண்ட நேரம் வரை உரையாற்றுவதில் வல்லவர் இவர். ஒரு சமயம் இவர் அவ்விதமாகத் தொடர்ந்து 9 மணித்தியாலங்கள் வரையில் உரையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்த ஒரு விடயத்தையும் பற்றி மிகவும் தெளிவாக, விரிவாக உரையாற்றுவதில் வல்லவரான இவரது அரசினை பெரும் வல்லரசான அமெரிக்காவாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ அமெரிக்கத் தலைவர்கள் முயன்று பார்த்தார்கள். அவரை அசைக்க முடியவில்லை. அமெரிக்க உளவுத்தாபனமான சி.ஐ.ஏ பல தடவைகள் இவரைக்கொல்ல முயன்று அனைத்து முயற்சிகளிலும் தோற்றே போனது. இறுதியில் மேற்கு நாடுகளே , அமெரிக்கா உட்பட, இவரது காலடியில் வீழ்ந்தன.
இவரது வெற்றிக்குக் காரணம் கியூபா மக்கள். பெரும்பான்மைக் கியூபா மக்கள் இவரை தம் அன்புக்குரிய தலைவராகக் கொண்டாடினார்கள். மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவனாக மானுட வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோ நிலைத்து நிற்பார்.
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்குமிடையில் நிலவிய நட்பும், இணைந்த நடத்திய கியூபாப் புரட்சியும் புரட்சிகர வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இவரது மறைவு வருத்தப்பட வேண்டியது அல்ல. கொண்டாடப்பட வேண்டியது.