The Prime Minister’s Office – Communications ; Prime Minister sets new course to address crises In Iraq and Syria and impacts on the region

Justin Trueadu, The Prime Minister of Canada.February 8, 2016  Ottawa, Ontario
The Prime Minister, Justin Trudeau today announced Canada’s new policy to address the ongoing crises in Iraq and Syria and the impact they are having on the surrounding region. It will make a meaningful contribution to the Global Coalition’s fight against the Islamic State of Iraq and the Levant (ISIL), while strengthening the ability of regional governments and local authorities to defend themselves, and rebuild over the long-term.

It is a whole of government approach that enlists several federal departments to work closely together to enhance security and stability, provide vital humanitarian assistance, and help partners deliver social services, rebuild infrastructure and good governance.

On the security front, Canada looked at how the Canadian Armed Forces (CAF) could best contribute in the fight against ISIL in the region within the Global Coalition. In keeping with the mandate the government received from Canadians last fall, the government will focus on training and advising local security forces to take their fight directly to ISIL.

To this end, additional military resources will be dedicated to supporting Coalition partners at various headquarters and to training, advising and assisting Iraqi security forces in their efforts to degrade and defeat ISIL. While Canada will cease air strike operations no later than February 22, 2016, aerial refueling and surveillance activities will continue. As well, stabilization and counter-terrorism measures and chemical, biological, radiological and nuclear security programming in the region will be enhanced

Continue Reading →

சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்!

தோழர் சண்முகதாசன்!–  பெப்ருவரி 8 தோழர் என். சண்முகதாசன் அவர்களின் நினைவு தினமாகும். அவரது நினைவு தினத்தையொட்டி ‘பதிவுகள்’ (மார்ச் 2010  இதழ் 123) இணைய இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அசலகேசரி என்னும் பெயரில் வெளியான இக்கட்டுரையினை எழுதியவர் வி.ரி,இளங்கோவன ஆவார். – பதிவுகள் –


சர்வதேசப் புகழ்பெற்ற,பொதுவுடமைத் தத்துவ ஆசான்தோழர் சண்முகதாசன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும், ‘மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.

1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் ‘திரிபுவாதம்” எனக் கண்டித்தார்.. குருசேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு” என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.

1964ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர். சோவியத்சார்புப் பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி – விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தின் – புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.

Continue Reading →

அறிஞர் அண்ணா நினைவாக….

–  பெப்ருவரி 3 அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். அவரது நினைவையொட்டி, அவர் பற்றி ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான முனைவர் துரை கண்டனின் ‘அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை’ மற்றும் முனைவர் கல்பனா சேக்கிழாரின் ‘சொல்லேருழவர் பேரறிஞர் அண்ணா! ஆகிய கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். – ஆசிரியர், பதிவுகள். –


அண்ணாவின் நாடகங்களில் மொழிநடை

– முனைவர் துரை.மணிகண்டன்  –

“அண்ணா அவர்கள் நமது நாட்டுக்குக் கிடைத்த ஒரு நிதி என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் தந்தை பெரியார் அஃது உண்மையும் கூட. அண்ணா தமிழகத்திற்கு சீர்திருத்த திறவுகோல் ஆவார். தாழந்து அடிமைபபட்டுச் சாதிகளால் சிக்குண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்க புறப்பட்ட புரட்சியாளர்; ; இளைஞர்களின் எழுச்சி தீபம்; அரசியலையும், படைப்புகளையும் தன் இரு கண்களாகிக்கொண்டு வாழந்த வள்ளல்;;; இப்பேரும் புகழும் பெற்ற அண்ணாவின் படைப்புகள் பல. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை, நாடகம் வழக்காடு மன்றம் என இலக்கியப் பணியில் பன்முகத் தன்மை கெர்ணடவர். இவர் படைப்புகளான நாடகங்களில் கையாண்டுள்ள மொழி நடையைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மொழி நடை
மொழி சொற்களால் ஆடைக் கட்டிக் கொள்கிறது. அவ் ஆடைகள் பலவாக இருக்கலாம். படைக்கும் படைப்பாளனை ஒட்டியே அஃது அமைகிறது. ஒரு கருத்தை மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்கு மொழி ஒரு பாலமாக இயங்குகிறது.  “நடை என்பது அந்தந்த ஆசிரியரின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லதாகும். அவரை இனங்கண்டு கொள்ளும் வகையில் அவரவருக்கே உரியதாக இருக்கும் வெளி;ப்பாட்டின் மொழிப்பாங்கே அது இலக்கியத்தில் அதுவே மிகப் பெரிய சாதனையாகும் என்று மா.ராமலிங்கம் மொழிநடைக்கு விளக்கம் தருகிறார். (20 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.160) “அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல எழுத்தின் அழகு நடையில் வெளிப்பட வேண்டும் “ (இலக்கியக் கலை ப.145) என்று அ..ச. ஞானசம்பந்தன் நடையைப்பற்றி விளக்குகிறார் இவ்வாறு மொழிநடை இலக்கிய படைப்புகளையும் படைப்பாளனையும் இனங்கண்டு கொள்ள மொழி நடை தேவைப்படுகிறது.

Continue Reading →

அனைவரையும் நினைவு கூருவோம்!

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதமயமாகியபோது , களத்தில் பல விடுதலை அமைப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள், தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

Continue Reading →

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:- பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?  17 ஜூலை 2015 –  பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

அறிமுகம்
பாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் – பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்?

தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் சனநாயக ஆணையாக வெளிக் கொணர்வதற்கும் அந்நிலைப்பாட்டிலிருந்து தமிழர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்கள் பங்குபற்ற வேண்டிய தேவை இன்று உண்டு. ஆகவே இங்கு அதிமுக்கியமானது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதல்ல எத்தகைய கொள்கைக்கு நாம் ஆதரவளிக்கின்றோம் என்பதே.

Continue Reading →

அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!

– உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். –

- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும்  தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும்  எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம்  அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும்   வலுப்படுத்த   முடியும்.
       
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த  சனாதிபதி தேர்தல்  இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.  வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள்.  அந்தத் தேர்தல் முடிவு,  எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல  மாற்றங்களைக்  கொண்டுவந்தது.  முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான  இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம்  பேச்சுச் சுதந்திரம் மற்றும்  சட்டத்தின்  ஆட்சி மற்றும்  சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு  உலக நாடுகளால்  வரவேற்கப்பட்டன.  எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள்  மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது  பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள்  தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

Continue Reading →

1983 ஜூலைப்படுகொலை நினைவாக….

கொலைக்கு முன்பாக களிக்கூத்து.முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

1983 இனப்படுகொலையைப்பற்றிய நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரையொன்றினை எழுதியவர் மைக்கல் றொபேர்ட்ஸ். இவரது கட்டுரை கவிஞர் சேரனின் மொழிபெயர்ப்பில் ‘எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை’ என்னும் பெயரில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு இதழில் வெளியானது. அக்கட்டுரையினை ‘கறுப்பு ஜூலை நினைவாக பகிர்ந்துகொள்கின்றோம்.

இந்தக்கட்டுரையில் சிங்கள வழக்கறிஞரான பாஸில் பெர்ணாண்டோவின் ஜூலைப்படுகொலை பற்றிய ‘ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்’ கவிதையினையும் கட்டுரையாளர் உள்ளடக்கியிருக்கின்றார். 83 ஜூலைப்படுகொலைபற்றி வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதையாக இதனையே நான் கருதுகின்றேன். வாசிக்கும்போது நெஞ்சினை அதிர வைக்கும் கவிதை. இது பற்றிக் கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவார்:

Continue Reading →

மீள்பிரசுரம் (‘குளோபல் தமிழ் நியூஸ்’): வித்யாவும் இசைப்பிரியாவும்:

- சிங்களத்தில் விகல்ப்ப - தமிழில்: லறீனா அப்துல் ஹக் -யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை  அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக் கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.

Continue Reading →

ஓவியர் புகழேந்தியின் முகநூல் குறிப்புகள்: முள்ளிவாய்க்கால்

‘2009ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் தொடர்ந்து தொடர்புகள் இருந்ததோடு அங்கு என்ன நடைபெறுகிறது என்பது குறித்த செய்தியும்,ஒளிப்படங்களும் கிடைத்தன.…

Continue Reading →

மே 1: உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும்!

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்

மே தின வரலாறு[தொகு]தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

Continue Reading →