முன்னுரை
‘இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்’ என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்
‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’
என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் ‘இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.’ என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.