ஆய்வு: கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் சத்தியம்

முன்னுரை
கவிஞர் வெள்ளியங்காட்டான்மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின்,   விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்;  சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கவிஞர் வெள்ளியங்காட்டான் – ஓர் அறிமுகம்
கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி, பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சில காலம் கோவையிலிருந்து வெளிவந்த  ‘நவஇந்தியா’ இதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்று கன்னட மொழியிலும் பல படைப்புகளை வெளியிட்டதோடு, கன்னடப் படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1991- இல் தனது 87-வது வயதில் காலமானார்.

Continue Reading →

ஆய்வு: தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்!

முன்னுரை
ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதொடக்கத்தில் தனி மனிதர் வாழ்வில் இதழியல் துறையை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்ர்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அவற்றின் மூலம் நாளுக்கு நாள் செய்திகளை அறிய விழைந்தனர். இதழியல் துறையின் முன்னேற்றத்திற்கு அறிவியல் துறை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதன் மூலம் செய்தி பாரிமாற்றமானது எளிதாக மாறியது. அதன் தொடர்ச்சியாக ஒலி, ஒளி (ரேடியோ, தொலைக்காட்சி) மூலமும் பின்பு கணினி தோன்றிய பிறகு அச்சுத்துறையில் மாற்றம் ஏற்பட்டதால் இதழியல் மேலும் பல படிநிலை உருமாற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இதழ்கள் இணையத்தில் மூலம் உலகத்தினை ஒருகண் சிமிக்கையில் இணைக்கும் இணையம் பாலமாக உள்ளது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களில் நேரடியாக வெளிவந்த இதழ்களும் இணையத்தில் அரங்கேற்றம் பெற்றன. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களின் தோற்றத்தையும் , வளர்ச்சியையும் இக்கட்டுரையில் காணலாம்.

இணையம் வரையறை:
இணையம் என்பதை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான கணினிகளை பல ஆயிரக்கணக்கான இணைப்பிழைகள் மூலம் ஒரு கணினியிலிருந்து எண்ணிக்கையிலடங்கா கணினிகளுக்கு தகவல்களை அனுப்பவும் பெறவும் முறையே இணையம் எனப்படும். இதனை வையவிரிவு வலை, வைய விரிவு வலைப்பின்னல், உலக வலைப்பின்னல், உலக இணையப் பின்னல், இராட்ச்ச வலிமைமிக்க சிலந்தி வலை என்று பல்வேறாக அழைப்பா். சைவத்தின் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய என்பதாகும்.  அதுபோல இணையத்திற்கு WWW மந்திரமாகும். இதனை ஆங்கிலத்தில் (World Wide Web) என்றழைப்பா். “இணையம் என்ற சொல்லை தமிழில் கண்டுபிடித்த பெருமை www.tamil.net  இந்த இணைய தளத்திற்கு உண்டு. இதனை ஆஸ்திரேரியாவிலுள்ள பாலா பிள்ளையின் இணையமாகும்’1 (தமிழும் கணிப்பொறியும் – ஆண்டோபீட்டா் ப.77). ‘இணையத்தை பயன்படுத்தாவன் குருடன்’ என்று கூறுமளவிற்கு இணையமானது இன்று பட்டி தொட்டிகளிளெல்லாம் விரிந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழரின் சூழலியல் அறிவு

க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துபவனாக மனிதன் அமைகின்றான். அம் மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளபவனும் அவனே. தான் சூழலில் ஏற்படுத்திய மாற்றம் தன் வாழ்வியற் சூழலின் இயல்பிற்கு எதிராக அல்லது தனது சூழலிற்குக் கேடுவிளைவிப்பதாக மாறுவதைக் கண்ட அவன் ‘சூழல்’ என்பதைத் தனித்தன்மையுடன் கவனிக்க முற்பட்டான். அவனது கவனிப்பு தற்காலத்தில் ‘சூழலியல்’ எனும் தனித்துறை உருவாகக் காரணமாக அமைந்தது. சூழலியல் குறித்த இந்த கவனிப்பு மனிதன் இயற்கையுடன் மாறுபடாத, ஒன்றி இயங்கிய காலத்திலேயே தமிழனிடம் இருந்து வந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

உயிரிவகைப்பாடு
தனது வாழ்வியற் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களைப் பற்றியும் தான் பொதுவான அறிவுடையவனாக விளங்குவதே சூழலியல் அறிவின் முதற்படியாகும். தனது சூழலில் என்னென்ன இருக்கின்றது? என்ற வினாவிற்கான விடையை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயங்கும் அனைத்து உயிரினங்களும் அறிந்திருத்தல் வேண்டும். இதில் விலங்குகளைநோக்கும் பொழுது தனது சூழலில் இயங்கும் பொருட்களில் இவையிவற்றை உண்ணவேண்டும்.  இவ்வுயிரினத்தை இம்முறையில் தாக்கி அழிக்கவேண்டும் என்னும் நிலையில் துல்லியமான அறிவுடையனவாக விளங்குவதை அவற்றின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. மனிதனைப் பொருத்தமட்டில் அவ்வகையில் தெளிவான அறிவுடையவனாக விளங்குகின்றானா? என்பது கேள்வியாகவே உள்ளது. பண்டைத் தமிழினம் தான் இயங்கிவரும் சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியரின்

Continue Reading →

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனை

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதமிழ் மொழி காலத்தால் பழமையுடையது. இத்தகு சிறப்புப் பெற்ற மொழிக்கு கூடுதலாகச் சிறப்புச் சேர்ப்பது தொல்காப்பியம் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் இலக்கணிகளும், உரையாசிரியர்களும் சிறந்த மொழியறிஞர்கள் என்பதனை அவரவர் உரையின் வாயிலாக விளங்க முடியும். மேலைநாடுகளில் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது மொழியியல். இத்துறையானது மொழியினைப் புரிந்து கொள்வதில் பெரிதும் பங்காற்றுகின்றது. மேலை நாடுகளில் வளர்ச்சி பெற்ற துறை குறித்தான அறிவினை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாக அறியலாம். இத்தகு, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய தெய்வச்சிலையாரின் உரையில் பெயரியலில் இடம் பெற்றுள்ள தொடரியல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகுமாக அமைகிறது.

பெயரியல்
“மொழியியலார் சொற்களை வகைப்படுத்தும் பொழுது Form Class என்ற கலைச்சொல்லை அறிமுகப்படுத்துகின்றனர். தமிழில் இதனை வடிவவகை என்று கூறலாம். வடிவம் என்பது சொல்வடிவத்தையே குறிக்கிறது. ஒரு வகைப்பாட்டில் அடங்கும் சொற்கள் எல்லாம் ஒரு பேச்சுக்கூறு என்றே மொழியியலார் கருதுகின்றனர்”என்று (தூ.சேதுபாண்டியன்:2013:23) ‘தொல்காப்பிய ஆய்வில் மொழியியல் அணுகுமுறைகள்’ என்ற நூலினுள் கூறுகிறார். இந்த ‘Form Class’ என்னும் கலைச்சொல்லை ஹாக்கெட் என்னும் மொழியியல் அறிஞர் தமது நூலில் பின்வருமாறு வரையறை செய்கிறார். “A Class of forms which have similar privileges of occurrence in building larger forms is a Form Class” (Hockett:1958:162). இத்தகைய Form Class இல் பெயர்ச்சொல்லும் ஒன்றாகும். இத்தகைய பெயரினைக் குறித்து ச.அகத்தியலிங்கம் குறிப்பிடும் பொழுது, “பெயர்ச்சொற்கள் எல்லா மொழிகளுக்கும் உரியனவாகும். எல்லா மொழிகளிலும் பெயர்ச்சொற்களைக் காணமுடியும்” (அகத்தியலிங்கம்:1986:145) என்று குறிப்பிடுகிறார்.

Continue Reading →

ஆய்வு: சிலம்பில் சொல்லாடல் பண்பாடு

சிலம்பில் சொல்லாடல் பண்பாடுமானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் ‘சிலம்பில் சொல்லாடல் பண்பாடு’ என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.

 கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் ‘சொல்லாட்டி’ எனச் சுட்டுகிறான்.

 ‘முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
 நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
 சொல்லாட்டி ‘(108 : 15 – 18)

Continue Reading →

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்இயற்கை, இயற்கைச் சார்ந்த புற உலகில் மாந்தன் நொடியொரு பொழுதும் பல்வேறு விதமானப் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே வந்ததை வரலாறு மெய்ப்பிக்கின்றது. இத்தகு போராட்டங்கள் முதலில் உணவுக்காகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டமாகத் தொடங்கி பின்னர் செல்வ பெருக்கத்திற்கும், சிலர் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே பெரும் போர்கள் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. அப்போர் நிகழ்வுகளில் மலையும், மலையைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கிடையே ஆநிரைகளைக் கவர்தலும் அதனை மீட்டலுக்குமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழ்க் காதல்

பண்டைத் தமிழ்க் காதல்  - பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – இயற்கை சமூகம் உள்ளடக்கிய இந்நிலவுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது! இது இயற்கையானது! இவ்வேட்கை இயல்பானது! எதார்த்தமானது! இதனை அறிந்தே தமிழ் ஆசான் தொல்காப்பியர்,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்காப்பியம். நூ.)

என்றார். மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று; நூல்களின் வழியாக உணர்த்திற்று:

Continue Reading →

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, “ மனித சமூக வாழ்க்கையில் பழக்கவழக்கமே முதல் கட்டுப்பாடாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுபடவும் சாதிப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை ஒத்த தன்மை பெறச் செய்யவும் சுய எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், ஆட்படாதவர்களை ஒதுக்கித் தள்ளவும், இப்பழக்கவழக்கங்கள் தோன்றின….. ”  என்று பழக்கவழக்கம் தோற்றம் பெற்றதற்குரிய காரணத்தை வரையறுக்கிறார் டாக்டர்  அ. தட்ஷிணாமூர்த்தி அவர்கள். பழக்கவழக்கம் தொடர்பாக தமிழர்கள் கொண்டிருந்த ஒழுக்க நெறிகள் பல கலித்தொகையில் பண்பாட்டின் சுவடுகளாய் விரவிக் கிடக்கின்றன. அவை பின்வருமாறு வரிசைபடுத்தப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது.

Continue Reading →

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும், நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும் எடுத்துரைக்கின்றது.

 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
 மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)

என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார். மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93) என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும் அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத் தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும் எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.

Continue Reading →

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது.  தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு தெரிந்த தெலுங்கு மொழியைக் கற்க விரும்பும் சமற்கிருதவானர் எடுத்துக்கொண்டால் பெயர் வினைகளைப் பற்றித் தவறாமல் பேசியிருக்கிறது. தெலுங்கு  வினைக்கென ஓர் இயலை அமைத்துச் (கிரியா பரிச்சேதம்) சமற்கிருத வேர்ச்சொற்களைத் தற்சம வினைகளாக மாறும் படிநிலைகளையும் வினையியலின் போக்குகளையும் இனம்காணும் வகையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

      முதல் தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி கி;.பி 11-ஆம் நூற்றாண்டில் நன்னையா அவர்களால் இயற்றப்பட்டது. ஆந்திர சப்த சிந்தாமணிக்கு நன்னய பட்டீயம்;இ வாகம சாஸநீயம்;இ; சப்தானு சாஸனம்;;இ பிரகிரியா கௌமதி;;இ ஆந்திர கௌமதி;;இ ஆந்திர வியாகரணம்; என்ற பெயர்களும் உண்டு. இது நன்னையாவால்  இயற்றப்பட்டதென்பது பழங்கால இலக்கணிகளின் நம்பிக்கை.  தெலுங்கு இலக்கியத்தில் ஆதிகவி யார் என்ற விவாதத்தைப் போலவே முதல் இலக்கணி யார் என்பதும் இன்றுவரை உறுதிபடுத்தாத நிலை உள்ளது. ஆதிகவியான நன்னையா முதல் இலக்கணி என்பது பல புலவர்களின் கருத்தாகும.

Continue Reading →