ஆய்வுக்கட்டுரை: ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

Continue Reading →

தமிழ்ச்சிற்றிதழ்களில் நவீன படைப்புகள்

தமிழ்ச்சிற்றிதழ்களில்  நவீன படைப்புகள்-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு   ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம்.  கவிதை,  சிறுகதை, குறுங்கதைகள்,  திறனாய்வுகள்,   துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1

என்கிறது   தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் – ஓர் அறிமுகம்

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் -  ஓர் அறிமுகம்மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை  இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் மீவியல் புனைவுகள்

books554.jpg - 8.33 Kbசெவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன்,  சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் – புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன்,  சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள்,  வெற்றி, புகழ்,  போர்த்திறம்,  உலாவருதல்,  அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல்,  பேய்களின் செயல்பாடுகள்,  போர்க்களச் செய்கைகள்,  புலவர்களின் கற்பனை,  சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள்,  வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Continue Reading →

மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

Continue Reading →

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

நூற்றொகை  விளக்கத்தின்  பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் – விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

Continue Reading →

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

Continue Reading →

கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு – ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது

அறிமுகம்
 சு. குணேஸ்வரன் பொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச்சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்கமுடியும். அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப்பகுதியில் நோக்கலாம்.

கலாசாரம் – தமிழ்மனம் – தத்தளிப்பு
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி,  வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும்  கூறுவர்.  இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழமுற்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவையாக அமைகின்றன.

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →

தனியே நிற்கும் நகுலன் எனும் உயிர்க்கவிதை

நகுலன்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்

“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”

Continue Reading →