தேவகாந்தனின் கனவுச் சிறை!

book_kanavuchsirai5.jpg - 11.07 Kbஎழுத்தாளர் தேவகாந்தன்.[எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் ஜனவரி 3 , 2015 அன்று தமிழகத்தில் காலச்சுவடு பதிப்ப வெளியீடாக வெளிவரவிருக்கின்றது. நீண்ட நாள்களாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாவலான ‘க்னவுச்சிறை’ நூலுருப்பெற்று வெளிவருவது மகிழ்ச்சியளிப்பது. வாழ்த்துகிறோம். அதனையொட்டி ‘கனவுச்சிறை’ நாவல் பற்றி வெளியான எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள் சிலரின் கருத்துகள் சில இங்கு பதிவாகின்றன. – பதிவுகள்-]

முனைவர் நா.சுப்பிரமணியன்:
நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட – கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட – வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

Continue Reading →

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் – பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

Continue Reading →

பேராசிரியர் செல்வா கனகநாயகம் : புன்னகையைத் தேக்கிவைத்திருந்த உதடுகள்

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ஓரு சில விஷயங்களில் மட்டும் கருத்து முரண்பாடு கொண்டு நாம் விமர்சித்தவர்கள் அகால மரணமடைகிறபோது நமக்கு ஏற்படும் உணர்வு முதலில் குற்றவுணர்வாகவே இருக்கிறது. அவர்கள் நாம் கண்டு பேசி நம்மை உபசரித்தவர்கள், நம்மோடு கனிவுடன் உரையாடியவர்கள் என்கிறபோது நமது விமர்சனம் அவர்களது இறுதிநாட்களில் அவர்களைச் சிறிதேனும் துன்புறுத்தி இருக்குமா என நினைக்கிறபோது எழுதுவதையும் விவாதிப்பதையும் சிந்திப்பதையும் கூட விட்டுவிடலாமா என்று சமயத்தில் நமக்குத் தோன்றும். தென் ஆசிய இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட கனடிய நண்பரான செல்வா கனகநாயகத்தின் மரணத்தைக் கேள்வியுற்றபோது இவ்வாறான மனநிலைக்கே நான் ஆட்பட்டேன்.

அவருடன் விரிவாகப் பேசுவதற்கான இரண்டு தருணங்கள் எனக்கு வாய்த்தன. இலண்டன் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பவென இரண்டு மணித்தியாலங்கள் அவருடன் அவரது ஆய்வு நூல்கள் குறித்து உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடலுக்கெனவே அவரது நூல்கள் அனைத்தையும் இரு வாரங்களில் நான் வாசித்திருந்தேன். அன்று நான்கைந்து மணிநேரங்கள் என்னுடன் இருந்தார். தொரான்றோ பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழியல் கருத்தரங்கில் ஈழ நாவல்கள் பற்றிய எனது கட்டுரை சமர்ப்பிப்பதற்கான பயணத்தை தனிப்பட்ட முறையில் அவரும் ‘காலம்’ செல்வமும்தான் பொறுப்பெடுத்துச் செய்தனர். அந்த நிகழ்வுக்கும் வந்திருந்து விவாதங்களைத் துவக்கி வைத்தவரும் அவர்தான். நான் மொழிபெயர்த்த மஹ்முத் தர்வீஷ் கவிதைகள் நூல் குறித்தும் அவர் என்னுடன் தனிமையில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறி

முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்பு

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்புஉலகப் பெருங்காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மகாபாரதம் ஆகும். இவை “தமிழ்நாட்டில் பாரதம் மட்டுமே புனித நூலாக மதிக்கப்பெற்று உலகறிந்த நூலாகப் வழங்கப்பெறுகிறது”1 என்று எம்.சீனிவாச அய்யங்கார் சுட்டுவார். இக்காப்பியம் மனிதன் வாழ்க்கையோடு ஒன்றி நிற்கின்றன.  அவை நீதிக்களஞ்சியம், மெய்ப்பொருட் சுரங்கம், உயிர்க்கும் உலகியலுக்கும் வழிகாட்டும் பனுவல், வீரர்கள், வீரப்பெண்டிர்களின் வரலாற்றுநூல், இந்தியாவிற்கேயன்றி எல்லா நாட்டிற்கும் வழிகாட்டத் தக்க காப்பியம்; சமுதாய நீதிகளில் தன்னகத்தே கொண்டது என எழுத்தாளர்களாலும் மக்களாலும் போற்றி வணங்கப் பெறுவதை அறிகின்றோம்.

“அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது – இதில் இல்லாதது ஓரிடத்திலும்  இல்லை”2  என்ற வியாசரின் கூற்றும் நிலைத்ததாகும். தாவரங்கள், காடுகள், கடல்கள், நதிகள் பற்றியும், உலக மக்களைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் இக்காப்பியத்தின் மூலம் விலகும் என்று கூறுவர்.  இக்காப்பியத்தில் முதலில் பாண்டவர்களின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிட்டாலும் பிற்பகுதில் மிகுதியாகப் பாண்டவர்களைப் பற்றியே பேசப்படுகிறது. அப்படிப்பட்ட பாண்டவர்களின் பிறப்பு, உறவுமுறை, நட்சத்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும். மகாபாரதத்தில் வரும் பாண்டு மன்னனின் மனைவிகளான குந்தி, மாத்தி, இவர்களுக்கு பிறந்தவர்களே பாண்டவர்கள்.  அவர்களைப் பற்றி பின்வருமாறு  வகைப்படுத்தலாம்.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  -அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச்  சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக  ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.

 திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காணவந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப்பெருமான்.

 ‘‘நந்தி நாமம் நமசிவாயவெனும்
 சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
 சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்
 பந்த பாசம் அறுக்க வல்லார்களே ’’
                                                               (திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயண குமார காவியம். இக்காப்பியத்தில் உதயணன் காவிய நாயகனாக விளங்குகின்றான். உதயண குமார காவியத்தின் முதன்மை இடம் வகிக்கும் பெண் தலைமை மாந்தர்கள் பலராக விளங்குகின்றனர். இக்காப்பியத்தில்  வாசவதத்தை, விரிசிகை, பதுமாபதி, மானனீகை போன்ற நான்கு பெண்மணிகளும் முதன்மைப் பாத்திரங்களாகக் கருதத்தக்கவர்கள்.  காப்பியங்களைப் படைத்தவர்கள் ஆண்கள் என்ற நிலையிலும், ஆணாதிக்கம் தலை தூக்கியிருந்த காலகட்டத்தில் காப்பியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்ற நிலையிலும் ஆண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காப்பிய ஆண்படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாகின்றது. இருப்பினும் இக்காப்பிய படைப்புகளில் பெண் பாத்திரங்களும் உரிய நிலையில் காப்பிய சுவைக்காகவும், காப்பிய நடப்பிற்காவும்  இணைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு இணைக்கப்பெற்றுள்ள பெண் பாத்திரங்களின் நடப்புகள், அவர்களின் பண்புகள் ஆகியவற்றின் வாயிலாக காப்பிய கால பெண் சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக இருந்து ஒரு காப்பியத்தை பெண் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய உதவுவது பெண்ணியத் திறனாய்வு ஆகின்றது. அவ்வழியில் உதயண குமார காவியம் என்ற காப்பியக் கதையில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களை மட்டும் இக்கட்டுரை எடுத்துக்கொண்டு அவற்றின் இயல்புகளை பெண்ணிய நோக்கில் ஆராய்கின்றது.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்தமிழகத்தில் இலக்கியம் தோன்றிய காலத்திலேயே அவ்விலக்கியத்தை முன்மொழிதல், இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தல் போன்ற நிலையில் இயக்கச் சாயலுடனான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன என்றே கருதலாம்.  சங்க காலத்தில் இருந்த முதல், இடை, கடைச் சங்கங்கள் இலக்கிய இயக்க அடிப்படை வாய்ந்தனவே ஆகும். பலர் ஒன்றாக ஓரிடத்தில் கூடி ஒரு பொருள் பற்றிச் சிந்திப்பது அல்லது படைப்புகள் பற்றி ஆராய்வது என்ற நிலையில் அமைந்தது சங்கம் என்ற அமைப்பாகும். குழு மனப்பான்மையுடன் பலரும் உயர இலக்கியத்தின்வழி  வழி காண்பது இலக்கிய இயக்கமாகின்றது.

சைவ சமய எழுச்சி காலத்தில் பக்தி இலக்கியம் கொண்டு சமுதாயத்தில் பெருத்த விழிப்புணர்ச்சியை அருளாளர்களால் ஏற்படுத்த முடிந்தது. ‘இலக்கிய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் தனியிடத்தைப் பெற்றது பக்தி இயக்கம். இவ்வியக்கம் கலைக்குப் புத்துயிர் அளித்தது. பல்வகை இடங்களுக்குச் சென்று பதிகம் பாடியும், இறைவடிவங்களைப் பாசுரங்களில் ஒதியும்,இறையடியார்களுக்குக் காப்பியம் புனைந்தும்,இறைநலம் சார்ந்த பிரபந்தங்களை உருவாக்கியும் இலக்கிய வளம் சேர்த்தது இவ்வியக்கம்.’|  என்றவாறு பக்தி இயக்கப் பணிகள் குறிக்கத்தக்க இடத்தைத் தமிழக வரலாற்றில் பெற்றுள்ளன.

Continue Reading →

ஆய்வுக்கட்டுரை: ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

Continue Reading →