நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

நூற்றொகை  விளக்கத்தின்  பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் – விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

Continue Reading →

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

Continue Reading →

அகஸ்தியரின் பார்வை: கலை இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும்!

– பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 88வது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகின்றது… –       

அமரர் அகஸ்தியர்கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது.  பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →

தனியே நிற்கும் நகுலன் எனும் உயிர்க்கவிதை

நகுலன்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்

“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”

Continue Reading →

மகாஜனாவும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும்

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbdr_kauslaya_subramaniyan5.png - 47.49 Kbலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை  நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன.  அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த  மகாஜனன்   நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது.  அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும்  இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான  வரலாற்றுப்  பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான  மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி  அவர்களாவார்.  அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.

1. ஈழத்து இலக்கியமும்  மகாஜனக் கல்லூரியும் – ஒரு தொடக்கநிலைக் குறிப்பு

    ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும்  இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’   எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம். 

Continue Reading →

தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்

தகவத்தின் பார்வையில் சமகாலச் சிறுகதைகள்தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன். இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல. கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.

Continue Reading →

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்வைத்து …

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை  முன்வைத்து …dr_n_subramaniyan.jpg - 12.37 Kbதமிழ் ஆய்வுலகின் தலைமைப் பேராசிரியராகவும் ‘விமர்சன மாமலை’ என்ற கணிப்புக்குரியவராகவும் திகழ்ந்தவர், கலாநிதி  கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்கள்(1932-2011). ஒரு கல்வியாளருக்குரிய  ‘சமூக ஆளுமை’யானது  எத்தகையதாக அமையவேண்டும் என்பதைத் தமிழ்ச் சூழலிலே இனங்காட்டிநின்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரம்,அவர்.  அப்பெருமகன் நம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. 06-07-2014 அன்று அவர் நம்மைப் பிரிந்த மூன்றாவது நினைவுதினம் ஆகும். அந்நாளையொட்டி அவரது நினைவுகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும்   முன்னெடுப்புகளுள்   ஒன்றாக  இச் சிந்தனை உங்கள் பார்வைக்கு வருகிறது. பேராசிரியர் பற்றி விரிவானதொரு ஆய்வுநூல் எழுதும் ஆர்வத்துடன் தகவல் தேட்டங்களில் ஈடுபட்டுவரும் நான் அத்தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது   வெளிப்படுத்திவந்துள்ள சிந்தனைகளின்  ஒரு பகுதியை இங்கு கட்டுரை வடிவில் உங்கள் கவனத்துக்கு  முன்வைத்துள்ளேன்.    பேராசிரியரைப் பற்றிய இக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முதற்படியாக அவரைப்பற்றிய பொது அறிமுகக் குறிப்பொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்

 பொது அறிமுகம்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியவர்கள்  ஈழத்தின்  வடபுலத்தின் வடமராட்சி மண்ணின் மைந்தன் ஆவார்.   இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற  இவர்  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் “பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தலைப்பில்  மார்க்ஸிய ஆய்வாளர் Dr.George Thomson அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவரான  இவர்,  ஈழத்தின்  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்  தமிழகத்தின்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம்   சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும்  ‘வருகைதரு சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார். அத்துடனமையாது தமிழ்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும்  பல்வேறு  தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர். இவ்வாறான இயங்கு நிலைகளினூடாக, தமிழியலின் உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும்  ‘ஆய்வறிவுப் பாங்கானதாக’க்  கட்டமைப்பதில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் அவர்.

Continue Reading →

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்)…

Continue Reading →

சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள்

முன்னுரை
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →