“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில் தேவதாசி ஒழிப்புமுறை!

“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில்  தேவதாசி  ஒழிப்புமுறை!பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல்  வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: “வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு” – வாண்டுமாமா

– சிறுவர் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்காற்றி வந்த எழுத்தாளர் வாண்டுமாமா (இயற்பெயர்: வி.கிருஷ்ணமூர்த்தி) இன்று ஜூன் 12,014 அன்று தனது தோண்ணூற்றியொரு வயதில் காலமானார். அவரது மறைவினையொட்டி இக்கட்டுரையினை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள். –

வாண்டுமாமா.
வாண்டுமாமாஇந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்… பேசும் கிளியும்… பலே பாலுவும்… உங்கள் நினைவில் மின்னினால்… சபாஷ்… உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!  கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?   சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது…

Continue Reading →

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த ‘இளவாலை அமுதுப் புலவர்’ என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் ‘தொகுப்புநூல்’ லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் ‘பூங்கொடி மாதவன் சபைத்’ துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது ‘பஞ்சாமிர்தம்’.

Continue Reading →

கனடாவில் சிற்றிதழ்களின் தேக்கநிலை

நூலாசிரியர் அகில்இலங்கையில் நடந்த யுத்தம் ஈழத்தமிழ் மக்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்தது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்களின் பெரும்பாலானவர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். நாம் வாழும் கனடாவில் மட்டும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளில்; கணிசமானோர் கனடாவில் வாழ்கி;றார்கள் எனலாம். கவிஞர்கள், நாவலாசிரியர்கள், சிறுகதையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று படைப்பாளிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களது படைப்புக்களின் தொகையும் எண்ணிலடங்காதது. குறிப்பாக சிற்றிதழ்கள், பத்திரிகைகளின் தோற்றம் சமீப காலத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கணினி தெரிந்தவரெல்லாம் பத்திரிகை நடத்தலாம் என்றளவில் இதன் தோற்றம் இருந்தாலும் மழைக்கால விட்டில்களாக மறைந்துவிடுகின்ற இதழ்களே அதிகம். இக்கட்டுரையின் நோக்கம் அவ்வாறான இதழ்களின் ஆழ, அகலங்களை ஆராய்வதல்ல. நிறைய எழுத்தாளர்கள் வாழ்கின்ற இந்த கனடா நாட்டில் சிற்றிதழ்கள் எதுவும் ஏன் தொடர்ந்து  வெளிவரவில்லை என்பது பற்றி நோக்குவதே  ஆகும்.

Continue Reading →

புதுச்சேரியில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா!

1_sundaresanar5b.jpg - 11.64 Kbதமிழிசையின் சிறப்புகளைத் தமிழகம் முழுவதும் பாடிப் பரப்பிய இசையறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர் ஆராய்ச்சியறிஞராகவும், பாடுதுறையில் வல்லுநராகவும் விளங்கியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்களில் இருந்த தமிழிசைக் கூறுகளை மக்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
  
குடந்தை ப. சுந்தரேசனார் கும்பகோணத்தில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருத மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் ஆசிரியர் விபுலானந்தரின் மாணவராக இருந்து அடிகளாரின் தமிழிசை குறித்த கண்டுபிடிப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையிலும் விரிவுரையாளராக இருந்து மாணவர்களுக்குத் தேவார இசை பயிற்றுவித்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சிலகாலம் பணிபுரிந்தவர்.  அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் விருப்பப்படி இவர் பஞ்சமரபு என்ற அரிய நூலுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். சைவ, வைணவ இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய இவரின் நூற்றாண்டு 28. 04. 2014 முதல் தொடங்க உள்ளது. இவரின் தமிழிசைப் பணியை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் இவரின் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க – இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து வரும் 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் செயராம் ஓட்டலில் நடத்துகின்றன.

Continue Reading →

ஷேக்ஸ்பியரின் ஆங்கில இலக்கிய விருந்துகள் [ஷேக்ஸ்பியர் நினைவு தினக்கட்டுரை.]

[வில்லியம் ஷேக்ஸ்பியர் ஞானஸ்நானம் பெற்ற தினம் ஏப்ரில் 26, 1564. அவர் பிறந்த தினம் ஏப்ரில் 23, 1564 என்று கருதப்படுகின்றது. அவரது மறைந்த தினமும் ஏப்ரில் 23, 1616. – பதிவுகள்-]

முன்னுரை
வில்லியம் ஷேக்ஸ்பியர்பேராசிரியர் கோபன் மகாதேவாஆங்கிலமொழியில் நன்றே எழுதிப் புகழீட்டிய வில்லியம் ஷேக்ஸ்பியர், என் இலக்கிய நாயகர்களின் முதல் வரிசையில் வீற்று இருப்பவர். அவர் இங்கிலாந்தின் முதலாவது எலிசபெத் மகாராணியின் காலத்தவர். அதாவது இன்றிருந்து 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்து 52 வருடங்கள் வாழ்ந்து இலக்கியப் படைப்பினையே தன் தொழிலாகச் செய்து பணத்துடனும் புகழுடனும் இறந்தவர். தன் 52 வருட வாழ்க்கையிலே 39-பிரபலமான நாடகங்களையும், 154-சொனெற்-ரகக் கவிதைகள், அத்துடன் ஆறு சங்கீதத்துக்கு உரிய சொனெற்றுக்களையும், ஐந்து நீள்-கவிதைக் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
    
இன்று பொதுமக்கள் ஆங்கிலத்தில் சாதாரணமாகச் சம்பாசிக்கும் போது கூட, ஷேக்ஸ்பியரின் பல எழுத்து ஓவியங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து ஓரிரண்டு சொற் தொடர்களையாவது பாவிக்காமல் நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கூடப் பேச முடியாது, என்று சொல்லப் படுகிறது. அந்த அளவுக்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியங்கள் ஆங்கில மொழியை மேன் மேலும் தளைக்கவும் உதவியுள்ளன என்பர். எனவே இவர் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான நாடகக் கவி எனக் கருதப்படுபவர். தன் மொழிக்குச் சிறப்பூட்டிய ஓர் இலக்கிய மேதை.

Continue Reading →

மாந்திரீக எதார்த்தப் படைப்புகளைத்தந்தவர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்!

கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் “லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள், கடந்தகாலம் மற்றும் தேசியம்தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்.” -பாப்லே நெருடா.

மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்இறப்பெய்தினார். யதார்த்தை கூறும் முறையில் இலக்கியத்தின் உறவை அங்கீகரித்துச்சென்ற மார்க்வைஸ் இறந்ததும் மாயத்தன்மை கொண்டதுமான நினைவுகளையும் தன் பாட்டியிடம் கேட்டறிந்த புதிர்களையும் தனக்குரிய வாலயப்பட்ட ஸ்பானிய மொழியிலே கதை சொல்லி வந்தார். இந்தக் கதை சொல்லி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். என்பத்தி ஏழுவயதில் இன்று  அவர் உடல் இவ்வுலகினை விட்டுப் பிரிந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பே அவர் நினைவாற்றலை இழக்கும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். என்ற உண்மையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருந்தோம். இன்று அவரது உடலும் எம்மிடமிருந்து இல்லாமல் போய்விட்டது. 

Continue Reading →

BBC.Com: Gabriel Garcia Marquez (6 March 1927 – 17 April 2014)

Gabriel Garcia Marquez The vivid prose of Gabriel Garcia Marquez described a world as exotic as a Latin American carnival. His backdrop was the poverty-stricken, and often violent world of his Colombian home where democracy never really found roots. His stories wove imaginary magical elements into real life and were often set in a fictional village called Macondo. A left-winger by conviction he was not slow to criticise the Colombian government and spent a great part of his life in exile. Garcia Marquez was born in the town of Aracataca, Colombia on 6 March 1927.  Shortly after he was born, his father became a pharmacist and his parents moved away. The young Marquez was left in the care of his maternal grandparents.

Critical acclaim
His grandfather, a veteran of Colombia’s Thousand Days’ War and a liberal activist, gave him an awareness of politics. From his grandmother, Garcia Marquez learned of superstitions and folk tales. She spoke to him of dead ancestors, ghosts and spirits dancing round the house, all in a deadpan style that he would later adopt for his greatest novel. Garcia Marquez went to a Jesuit college and began to study law, but soon broke off his studies to work as a journalist. In 1954, he was sent to Rome on a newspaper assignment, and since that time, lived mostly abroad, in Paris, Venezuela, and finally Mexico City. He always continued his work as a journalist, even when his fiction increased in popularity.

Continue Reading →

பூந்துணர்- 2012

முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்இன முரண்பாடுகளின் அறுவடையாக மக்கள் புலபெயர்நாடுகளில் வாழும் நிலை ஏற்பட தங்களின் இலக்கியம் மீதான தாகத்தை படைப்பிலக்கியம் மூலம் வெளிபடுத்தினர்.அவ் விலக்கியத்தை பத்திரிகை,வானொலி,இணையம் என பல்வகை ஊடகங்களின் மூலம் வாசகர் பார்வைக்கு வைக்கையில் பலரின் கவனிப்புக்கும் உள்ளாகினர்.அவர்கள் பின்னர் தனித்தும்,கூட்டாகவும் நூல்களை வெளியிட்டு இன்னும் பலம் பெற்றனர்.நண்பர்களின் தொடர்பு,பிற இலக்கியங்களில் தேர்ச்சி என்பன அவர்களை இன்னும் இலக்கியத்தினை ஆழமாக சிந்திக்கவும் உதவின.. இந் நிலையில் நவீன தொழில்நுட்ப சாதன பயில்முறை இலகுவாகவே கைகளுக்குள் வர எழுத்து திருத்தங்களுடன் வரவும்,பதிப்பின் இலகுத்தன்மையும் சாத்தியமாகின. பலர் படைப்பாளர்களாக அடையாளப்படுத்தி நின்றார்கள். ஒரு புறம் எழுத்தில் ஆழமாக சிந்தித்து எழுதியவர்களிடையேயும் சிலர் வசதி வாய்ப்பு கிடைத்த மாத்திரத்தில் எழுத்தாளர்களாயினர்.அதிலும் சிலர் ஒரு நூலை வெளியிட்டதுமே உலக இலக்கியம் தன் கைகளுக்குள் என்கிற தொனியில் பேசவும் செய்கின்றையும் காணக்கிடைக்கின்றன. இவர்களின் பலம் அதிகமானால் ஆபத்தும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இங்கு புலம் பெயர் சூழலில் ஆங்காங்கே இலக்கிய அமைப்புக்கள், ஒன்றியங்கள், சங்கங்கள் தோன்றியும் உள்ளன. சில தொடர்ச்சியான செயல்பாட்டிலும் உள்ளன..  அவ் அமைப்புக்களுடாக பலரின் படைப்புக்களை உள்ளடக்கி நூலாகவும் கொண்டுவருகின்றமை பாராட்டக்கூடியதாகும். கனடாவில் இருந்து எனக்குக் கிடைத்த ‘கூர்,யாதும், லண்டனிலிருந்து திரு.பத்மநாப ஐயர் தொகுத்த உகம் மாறும்,கண்ணில் தெரியுது வானம் போன்ற தொகுப்புக்களும் அடங்கும்.இன்னும் வந்திருக்கலாம்.

Continue Reading →

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்!-  க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19.பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.  புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

அரண்
அரண்  – பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.

Continue Reading →