கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்
உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.
பெண்கள்
உலகின் கண்கள் .
உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் –
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !
பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு –
அக்கினிப் பிழம்பாயிருக்கும்!