அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.

Continue Reading →

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்!
[செப்டம்பர் 11 பாரதியார் பிறந்ததினம்.]

1. இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Continue Reading →

கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை நினைவாக தமிழ்ழ் ‘விக்கிபீடியா’க் குறிப்புகள்: முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 – செப்டம்பர் 21, 2005) .

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி மீள்பிரசுரமாகும் கட்டுரை. தமிழ் விக்கிபீடியா இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

Continue Reading →

தினமணி.காம்: ரா.கி.ரங்கராஜன் காலமானார்

ரா.கி.ரங்கராஜன்19, 2012- சென்னை:பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும், ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு தோளாக, தளபதியின் வாளாக, நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், நேற்று காலமானார்.கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், “எப்படி கதை எழுதுவது?’ என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. “சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், “படகு வீடு, பட்டாம்பூச்சி’ ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.மனைவி கமலா, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

Continue Reading →

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

பாரதியின் ஆன்மீக நாத்திகம் ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி – பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் – இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.

Continue Reading →

விடியல் சிவா கடிதம்

விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு[எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட இக்கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – பதிவுகள் -]

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, உங்கள் வளைத்தளத்தில் (Jeyamohan.in) 23.5.2012 அன்று எஸ்.வி.ராஜதுரைக்கு எழுதியுள்ள பதிலில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்: “உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.”

“இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”

Continue Reading →

‘விடியல்’ சிவா மறைவு!

விடியல் பதிப்பகம் தோழர் சிவா ‘விடியல்’ பதிப்பகத்தின் மூலம் மார்க்சிய நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்களுட்பட) பதிப்பித்து வந்தவர் தோழர் ‘விடியல்’ சிவா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த சிவஞானம் அவர்கள். ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகச் செயற்பட்டவர் இவர். அண்மைக்காலமாகவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று, ஜூலை 20, 2012, காலை 10.30மணிக்குக் காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு, குறிப்பாக முற்போக்குத் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பே. அவரது பிரிவால் வாடும் தோழர்கள், குடும்பத்தவர்களுக்குப் பதிவுகள் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் இணையத்தில் அவரது மறைவு பற்றி வெளியான செய்திகளையும் மீளப்பிரசுரித்துத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. – ஆசிரியர் –

Continue Reading →

மாத்தயாட்ட பின் சித்தவெனவா

இங்கே நான் சொல்ல வருவது வேறு ஒரு புது விதமான அனுபவம். நான் அங்கு வைத்தியசாலையின் மேல் மாடி  அறையில் இருந்த போது இரண்டு இளம் விரிவுரையாளர்கள் வந்து, “17 வயதான ஒரு நாயின் கால் முறிந்து விட்டது.  ஆனால் அதன் எஜமானர் அதற்கு  சத்திரசிகிச்சை  செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார்.  இந்நிலையில் நாம் என்ன செய்வது.” எனக்கேட்டனர்.'டொக்டர்' நடேசன்இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில்  நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை  அரசாங்கத்தால் கட்டப்பட்டு  மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில்  மிருக வைத்தியத்துறையில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு  தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை  சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக்  கொடுத்து நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள நினைத்ததால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்டி சென்றேன். என்னுடன் முன்னர்   படித்த  சகாக்கள்தான் அங்கு வைத்திய துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எனது அனுபவம் இனிமையாக இருந்தது.

Continue Reading →

கணையாழியின் கதை

[ கணையாழி தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்றோரிடத்தைப் பதிவு செய்துகொண்ட சஞ்சிகை. அது தொடர்ந்தும் வெளிவரவேண்டும். ஏற்கனவே பல தடைகளைத் தாண்டி வெளிவந்ததைப்போல் இம்முறையும் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கணையாழிக்கு இன்னுமோர் சிறப்புண்டு. உலகத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை அது அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளதைத்தான் கூறுகின்றேன். ‘கனடாச் சிறப்பிதழ்’, ‘ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்’ .. போன்ற சிறப்பிதழ்களாகக் கணையாழி வெளிவந்துள்ளது. எனது கட்டுரைகள் சிலவும், சிறுதையொன்றும் கணையாழியில் வெளிவந்துள்ளதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். கணையாழி தொடர்ந்தும் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். – வ.ந.கி, பதிவுகள் -]  இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி’ என்று பெயர் வைத்தேன்’ என்று ‘கணையாழி’ பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார்.

Continue Reading →

ஆயிரம் வருடத் தூக்கம் – பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும் (டிட் ஃபார் டாட் நடத்திய ஒரு நேர்காணல் – 1984

வைக்கம் முகம்மது பசீர்தார்மீகமின்மையும் அக்கிரமமும் அநீதியும் இந்தளவுக்கு வெகுசாதாரணமாகி விட்டதற்கான காரணம், சமூகத்தின் மத உன்னதங்களின் வீழ்ச்சிதானே?

“நிச்சயமாக! மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனிதத்தன்மைக்கு உயர்த்துவது மதங்கள்தான். மதங்களில் மிகவும் இயல்பானதும் எளிமையானதும் இஸ்லாம்தான்.

கலாச்சாரச் சீரழிவில் இன்றைய இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் பங்கிருக்கிறதல்லவா?

இருக்கிறது. இங்கே ஏராளமான வெளிநாட்டுப் படைப்புகள் இறக்குமதியாகின்றன. இணைசேர்வதைக் கற்றுக் கொடுப்பவைதான் இதில் அதிகம். ஆண்-பெண் போகமும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் பல போகிப்பதும் எப்படி என்பதை அவை கற்றுத் தருகின்றன. அதையெல்லாம் வாசித்து விட்டு இங்கிருப்பவர்கள் எழுதத் தொடங்கினால்தான் ஆபத்து. இறக்குமதி செய்யப்படுபவைகளில் நல்லவைகளும் இருக்கக் கூடும். அப்புறம் திரைப்படங்கள். அவை மனிதனுக்கு நல்லவற்றைப் போதிப்பதும் ரசிக்க வைப்பதுமாக இருக்க வேண்டும்

Continue Reading →