பிறவிப்பயன் !

கவிதை சுவைப்போமா?

விழியின்
நுனியில் பார்வை பிறக்க,
உன் கருவிழி
ஓரமாய்
ஒதுங்கி நிற்க,

அசைவால் நயனிக்கும்
அந்தக் குட்டிக்
கூந்தல்..

உன் செவ்விழி
இடையே ஒலி இல்லா
இசை மீட்டியது!

Continue Reading →

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1!

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விருப்புடன் வந்திடுவீர்

பொது வாழ்வில் சேவைதனை
பொறுப்பாய் ஆற்ற வந்தோரே
சங்கங்கள் பலதிலின்று பல
சச்சரவுகள் இருப்ப தேனோ

மன்றங்கள மைத்து பணிதனை
மகிழ்வுடனே ஆற்ற வந்தோரே
மாறுபட்டு நின்றும்முள் மோதி
மல்லுக் கட்டி நிற்பதேனோ

கற்றவர் நாமென்று கூறியென்றும்
கர்வப்படும் நம்மவர் தம்முள்
பிரிந்துநின்று பிணங்கு கொண்டு
பிளவு கண்டு நிற்றலேனோ

சிந்தித்துப் பார்த்திடுவோமே சற்று
சீர்திருத்த முனைந்திடு வோமே
மனம்விட்டுப் பேசி நாமும்நம்
மாறுபாட்டை போக்கலா மன்றோ

Continue Reading →

இரு-மொழி இரணைக் கவிதைகள்- 5: ஆண்மை MANHOOD, MANLINESS, MALENESS

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -ஆண்மையின் ஆதி ஆண்கள் பெண்களை
வளைக்க நடிக்கும் இயல்பு. (001) 

The origins of manhood lie in men’s
Actions to attract, court and love women.

அடக்குமுறை ஆண்மைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கென்றும் காண்க. (002)

It’s a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மைக்குப் பெண்மையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடை அன்பெனும் பண்;பு. (003)

The arrow that makes women fall for men
Is men’s dignified love for their women. 

ஆண்மையும் பெண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வேண்டி வந்த இடத்து. (004) 

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man. 

ஆண்மைக்கு அழகு, வீடொன்றை அமைத்து
பெண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

Continue Reading →

கவிதைத்தொகுப்பு: அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். –

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! – வ.ந.கிரிதரன் –

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. ‘ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது’ என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த ‘மறுமலர்ச்சி’ இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்’ என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

Continue Reading →

ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்

அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.

ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை’ என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….

;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்!

1. பனிப்பூக்கள்.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

பஞ்சின் மென்மை உன் கன்னமாக
விஞ்சும் அழகால் உள்ளம் கனலாகுதே
அஞ்சும் மனமின்றி ஆசையாய்த் தொடுகிறேன்
கொஞ்சமும் பயமின்றி உன் அம்மா ஏசுவாரென்று

அன்னமே வருவாயா அழகுப் பனியில்
உன்னதமாய்ச் சறுக்கலாம் பனியால் எறியலாம்
சின்ன செடிகளின் தண்டுகளில் பனியும்
என்ன அழகாய் அப்பியுள்ளது பனிப்பூ

வெப்பத்தில் உருகிக் கண்ணாடியாய் மின்னும்
ஒப்பனையற்ற அழகு பிரம்மன் சிருட்டியாய்
கற்பனையிலும் காணவியலாது வெப்ப நாட்டினருக்கு
சிற்பம் செதுக்கியதாய் எத்தனை பனிப்பூக்கள்.

வானமே பூமிக்கு இறங்கியதாக பெரும்
தானமான கவின்கலைப் பனிப்பூக்கள் குளிரில்
தேனமுத அதரபானம் அருந்தி சூடேற்றும்
நாணமற்ற இணைகளிங்கு மூலைக்கு மூலை

Continue Reading →

இரு-மொழி இரணைக் கவிதைகள்-3: என் கண்ணுள் இவ்வுலகம் (The World In My Eyes)

கவிதை: என் கண்ணுள் இவ்வுலகம்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -கிட்ட வா, நண்பனே, எட்ட நிற்காமலே;
என் உள்ளத்தினுள் புகுந்து நல்லாய்ப் பார் –
சுற்றிப் பார், நண்பா; சும்மா, பணம் வேண்டாம்!

என் கண்ணின் படிக்கட்டு வழியாய் மேலேறிச் 
சென்றிடுவாய், உள்ளே, என் மனத்தின் குகைக்குள்ளே.
தெண்டித்துப் பார்க்கும் நபர்கள் எவருக்கும் 
வெண் வெளிச்சமாகும், என் உள் மனமெல்லாம்.

அதோ தெரியும் அந்தத் தம்பியைப் பார் நண்பா:
முதுகினில் புத்தகப் பொதியும் 
கையினில் துப்பாக்கியும் கொண்டு 
பையுறை உடுத்து, பனை போல் வளர்ந்து 
முகத்தின் புன்முறுவல் முன்னரே மறைந்து,
மேவி மனத்தில் நிற்கும் கடமைதனில், வெற்றி 
மேவாத விரக்தியுடன், மனமுடைந்து, சோர்ந்து,
சாவதைப் பார், அவன், பொருந்தோடி, வீழ்ந்து!

அவன் உடலை உன்னித்துப் பார், இப்போ, நண்பா:
கவசம் போல் கல்லுறுதி. பட்டுடையின் பளபளப்பு…
அந்த அவயவங்கள் அசைந்த அழகென்ன?
தங்கப் புன்-சிரிப்பென்ன? நாடியின் துடிப்பென்ன?
மின்சாரக் கண்ணும், மிளிர் கருமைச் சுருள் முடியும்…
அன்பெல்லோ கொண்டிருந்தோம், அளவின்றி, அவன்மேலே!

Continue Reading →

கவிதை: கடவுள்!

- முல்லைஅமுதன்

பொழுதே போகாமல்
உட்கார்ந்திருந்தார் கடவுள்.
பக்தர்களே வரவில்லை..
திருந்திவிட்டார்களா?
அல்லது அவர்களே சாமியாகிவிட்டார்களா?
தலையைப் பிய்த்துக்கொண்டார் கடவுள்.

Continue Reading →

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.பூனையைப் புறம்பேசல்

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு 
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும் 
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே 
பூனையும் நாமாகவியலாது.
இதில் 
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.

Continue Reading →

கலைஞருக்கு ஓர் இரங்கற்பா: தமிழன்னை தவிக்கின்றாள் !

கலைஞர் கருணாநிதி

தமிழ்த்தாயின் தவப் புதல்வா
தானாக எழுச்சி பெற்றாய்
அமிழ்தான தமிழ் மொழியை
ஆசை கொண்டு அரவணைத்தாய்
தமிழ் முரசாய் நீயிருந்தாய்
தமிழெங்கும் முழங்கி நின்றாய்
தவிக்க விட்டுப் போனதெங்கே
தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

சங்கத் தமிழ் இலக்கியத்தை
தானாகக் கற்று நின்றாய்
பொங்கிவந்த தமிழ் உணர்வால்
பொழிந்து நின்றாய் பலவுரைகள்
ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
உள்ளம் அதால் நேசித்தாய்
உனைப் பிரிந்து வாடுகின்றார்
ஓலம் அது கேட்கலையா    !

Continue Reading →