1. விவசாயம்
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
1. விவசாயம்
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து
முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.
முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.
அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?
குளம்
எனக்காக
அமைதியாக இருந்தது.
காற்றும் அப்படியே.
வானத்தில் விமானம் பறப்பிலில்லை.
பறவைகள்
எங்கோ
தூரமாய் போயிருக்கவேண்டும்.
புடவைகளின்
மணம் அருகிலுமில்லை.
குளத்தை
அப்படியே மூச்சுக்காற்றால்
உள்ளிழுத உணர்வு
ஏதோ
பல கதைகள்
கன நாளாய்ச் சொல்லியது
எவ்வித ஆர்பாட்டமுமின்றி..
1. கவிதை: முகமூடி
எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி
பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை
கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்
பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென
விடியலிலும், இரவிலுமென
எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்
ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்
உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!
உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !
உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்
களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !
உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்
உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
உலக முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ….
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ….
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ….
ஊதியம் வாழப் போதுமானதுமில்லை ….
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்….!
களைப்பில் உழைப்பின் முதுகு ….
கேள்விக்குறியாய் வளைந்தது ….
சலிப்பும், விரக்தியும் மிகவே.
அடக்கப்பட்டனர், ஒடுக்கபட்டனர் ….
எதிர்த்தெழுந்தார் உழைப்பாளர் இந்நாளில்.
அண்மையில் ‘டொராண்டோ’, கனடாவில் காலமான முனைவர் சின்னத்துரை விஜயகுமார் அவர்கள் கணினியில் தமிழ் எழுத்துகளை உருவாக்கிய முன்னோடிகளிலொருவர். இவரைபற்றிக் ‘கனடா மிரர்’ .காம் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது: “தமிழ் எழுத்தை கம்யூட்டருக்கு அறிமுகம் செய்து வைத்த கல்விமான் கலாநிதி எஸ். விஜயகுமார் 31-03-2017 கனடாவில் காலமானார். இந்தியாவில் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதல் கம்யூட்டரில் பயன்படுத்தப்பட்டது என பெருமை கொள்ள முடியும். அப்போது திரு. விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டது.. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கம்யூட்டருக்கு உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்கள். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பு. கம்யூட்டர் எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் திரு. விஜயகுமார் அவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்”
இவரைப் பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு தடவைகள் தயாளனின் ‘மைக்ரோடெக்’ கணினி நிறுவனத்தில் சந்தித்திருக்கின்றேன். உரையாடியுமிருக்கின்றேன். அப்பொழுது இவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டமென்று நினைக்கின்றேன். மைக்ரோடெக் நிறுவனத்தில் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பித்துக்கொண்டிருந்தார். பழகுவதற்கு இனியவர். பண்பு மிக்கவர். கணினியில் தமிழ் எழுத்துகளைப் பாவிப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
கவிதை: 1. நான் 1 & நான் 2
1
நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1: அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்
2
நான் 1: கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1: அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்