ஜல்லிக்கட்டுக் கவிதைகள் இரண்டு!

வேதா இலங்காதிலகம்1. நல்ல முடிவு வருமென …

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

Continue Reading →

கவிதை: இறுகியிருந்த பாறை மனதில், நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்!

இறுகியிருந்த பாறை மனதில்
நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்
உறைபனித்துகளின் ஆழத்திலிருந்து
கவிதைபாடிய ஈழக்கவிஞன்
போயே போய் விட்டான்
தாமதமாகத்தான் அறிந்தேன்
இவன் மறைவை

சினிமா வெளிச்சம் படாத
இந்தக் கவிஞனை
பணத்திமிரின் தாளத்துக்கு ஏற்றபடி
ஆடாத இவனை
ஏனோ யாரும் பெரிதாக
கணக்கிலெடுக்கவில்லை

Continue Reading →

பாரதி வருக எங்கள்! பாவலா வருக!

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - – ஆத்திசூடி  மக்கள் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழாவில் தோன்றிய பாரதியாரும் ஒரு பைந்தமிழ் நிருபரும்…! கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் பாரதியார் வேடமிட்டு நடந்த கலைநிகழ்வு அனைவரையும் கவரும் படியாக இருந்தது.  பாரதியார் தான் பாடிய பாடல்களை முன்மொழிந்து பாட, அவரைக் கேள்வி கேட்பதுபோல் தீவகம் வே. இராசலிங்கம் சுப்ரமணிய பாரதியாரை வரவேற்றுப் பாடிய பாடல் இதுவாகும். –

பாரதி வருக எங்கள்
பாவலா வருக பாட்டுச்
சாரதி வருக முந்தைச்
சந்ததி வருக தையின்
சூரனே வருக  சொல்லின்
செல்வனே வருக வாழும்
வீரனே வருக  என்றும்
வீழ்ந்திடாய் வருக வாராய்!

காந்தனே வருக வெற்புக்
கவிஞனே வருக எங்கள்
பூங்கவி வருக் வேகப்
புலவனே வருக தேனார்
மாங்கவி வருக்  பெண்ணை
மதிப்பவா வருக எங்கள் 
பூம்பனிக் கனடா நாட்டில்
பேரருங் கவியே வருக!

Continue Reading →

கவிதை: நூற்றி ஐம்பதில் புலருங் கனடியம் .ஒரு போற்றுங் காவியம்!

* கனடாவின் நூற்றி ஐம்பதாவதாண்டினையொட்டி இக்கவிதை இங்கு பிரசுரமாகின்றது.

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - -

விஞ்சிய தாயாய் விளங்கு பூமியில்’
ஒன்றரை நூற்றாண்டு உயிலென அகவையில்…!

பல்லவி

வாழிய கனடா வாழிய கனடா!
வாழிய கனடா மணித்திரு நாடு!

அனுபல்லவி

ஆழிசூழ் உலகின் அற்புத விளக்கே
ஊழி முதல்வனாய் ஒளிருங் கோவிலே

சரணம்

நூற்றி ஐம்பதின் நூபுரக் கலசம்
போற்றியே கனடியம் பூத்தது மகுடம்!
காற்றும் ஒருமுறை களிப்பில் மலர்ந்தது
நேற்றைய பொழுதிலும் இன்றும் சிரித்தது!

Continue Reading →

கவிதை: பொங்கல் பொங்கட்டும்

இவ்வுலகம் இனிதுஎண்ணம் போல உயர்ந்திருக்கும் வான் இனிது      ஒளிதந்து வாழ்வளிக்கும் கதிர் இனிதுநிலத்திற்கு வளமை சேர்க்கும் மழை இனிதுவிதைத்ததை செழுமை படுத்தும் நிலம் இனிதுவியர்வைக்கு இதம் அளிக்கும்…

Continue Reading →

கவிதை: எல்லோரும் பொங்கி நிற்போம் !

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

புத்துணர்வு புதுக்கருத்து
புறப்பட்டு வந்திடட்டும்
பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
புதுப்பொலிவு பெற்றிடுவோம்
பொறுமையெனும் நகையணிந்து
பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
இறைநினைப்பை மனமிருத்தி
எல்லோரும் பொங்கிநிற்போம் !

குறையகன்று ஓடிவிட
இறைவனைநாம் வேண்டிடுவோம்
நிறைவான மனதுவரும்
நினைப்புடனே பொங்கிடுவோம்
துறைதோறும் வளர்ச்சிவர
துடிப்புடனே உழைப்பதென
மனமெண்ணி யாவருமே
மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

Continue Reading →

கவிதை: புதிய வருடத்தில் புதிய விதி செய்க!

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கை தோன்றும்..
அந்த நொடியில் துளிர்த்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..

விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்..

Continue Reading →

கவிதை: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு…

--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.

மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.

அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.

இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.

உப்பு கறிக்குக் கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்கத் தவறாதே.

Continue Reading →

கவிதை: சிந்தையில் நினைக்கின்றோம்; நத்தார் இதுநாள் வித்தாம் புதுநாள்.

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.காந்தள் மலர்கின்ற
காலத்திலே உம்மைக்
காந்தமாய் இழுக்கின்றோம்- மண்ணை
மாந்தி உயிர்க்கொடை
வாரியதா லுங்கள்
மாண்பில் உயிர்க்கின்றோம்- வண்ணப்
பூந்திரி போலுடல்
போர்கொண்டு சென்று
பொன்னாய் உருகிவிட்டீர்- உம்மை
ஏந்தி அழுகையில்
ஏர்கொண்டு கீறிய
இரத்தத்தால் எழுதுகின்றோம்!

வானக் கடல்வென்றீர்
மண்ணில் புதையுண்டீர்
மலர்முகம் எங்கையப்பா?- தமிழ்
மானப் பெயர்கொண்டு
மடியில் உறைந்துநீர்
வார்த்தனை குருதியப்பா!- அந்த
ஈன உலகெலாம்
ஒன்றாய் எரித்தனர்
இன்றென்ன கண்டாரோ?- மக்கள்
போன பின்னாலந்தப்
பேய்களின் வாலினைப்
பிடித்துமே விட்டாரோ!

Continue Reading →

என் .ஜெயராமசர்மா (மெல்பேண், . அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா !

Continue Reading →