படிக்கட்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.

எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.

கட்டி முடிச்சிடக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்ட – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.

Continue Reading →

சக்தி சக்திதாசன் கவிதைகள்!

1. அலாரம் அலற விழித்தன விழிகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர

சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க

Continue Reading →

கவிதை: நாள் தூரமில்லை!

கவிதை வாசிப்போம் வாருங்கள்1

 பெருகிவரும் மக்கள்தொகை பீதியூட்ட, தேவைகளும்
  பெருக்கெடுக்கும் காலமொன்று பேதலிப்பை ஏற்படுத்த
எரிசக்தி நீர்வளங்கள் நிலவளங்கள் பற்றாக்குறை
  ஏற்படுத்தப் போகின்ற எதிர்கால விபரீதம்
உருகிவரும் பனிமலைகள் ஒழுகிடவே ,கடல்மட்டம்
  உயர்வடைந்து நிலம்குறைந்து மழைவெள்ளம், இடிமின்னல்
ஒருபோதும் இல்லாத வகையினிலே பயங்கரமாய்
  உலகத்தை ஆட்டிவைக்கும் நிலைவரும்நாள் தூரமில்லை.

Continue Reading →

க.பிரகாஷ் கவிதைகள்!

1. புனல் வாதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக் 
கப்பலாக ஓடவிட்டேன்

தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்

மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

Continue Reading →

பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். ) கவிதைகளிரண்டு!

1. புல்.

vetha_new_7.jpg - 11.42 Kbபுல்லில் படுத்து வானம் பார்
அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை
சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.
புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.
பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.
புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.
உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.
புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.
அகரம் புல், அருகன் புல்லாகிய
அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.
ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.
காகா மூலி, ஆரோக்கியப் புல்,
குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,
விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

Continue Reading →

ரிஷி கவிதைகள்!

1. வெந்து தணியும் காடு….

- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் ) -துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

Continue Reading →

ஜூன் 2015 கவிதைகள்: மேலும் சில…

கவிதை வாசிப்போம் வாருங்கள்!க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!

இயற்கையின் வெற்றி

விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!

பொருளாதாரச் சிந்தனை

கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!

Continue Reading →