இர.மணிமேகலை கவிதைகள்!

மனச்சித்திரம்

இர.மணிமேகலை கவிதைகள்!

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.
 

Continue Reading →

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்.

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

இவர்க்கிலையோ ..?

பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே  மீனினைத் தான் பிடிப்பான் !

கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !

Continue Reading →

பொங்கல் / புத்தாண்டுக் கவிதைகள்!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 – வ.ந.கிரிதரன் –

greeting_pongal5.jpg - 13.10 Kb கதிரும், உழவும் இன்றேல் இங்கு
 உயிரின் இருப்பும் இல்லை அதனால்
 நன்றி மறப்பது நன்று அன்று
 என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
 கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
 உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
 உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
 இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
 இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
 கதிரும் உழவும் எருதும் எண்ணி
 அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
 இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
 வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
 ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
 அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
 இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
 களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்
  

Continue Reading →

நாற்றமெடுக்கும் தேர்தல்!

நாற்றமெடுக்கும் தேர்தல்!  - மெய்யன் நடராஜ் -

கட்சி விட்டுக் கட்சித் தாவிக்
  காட்ட வந்த தேர்தல்.
கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளிக்
  கொட்ட வந்த தேர்தல்
பெட்டி மேல பெட்டி வைத்து
  பேரம் பேசும் தேர்தல்
மட்ட மான கொள்கை கொண்ட
  மானங் கெட்டத் தேர்தல்

Continue Reading →

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!

1. நல்லோர்க்கே சொர்க்கம்….!

வாழ்க்கை என்பது சிறிதாகும் – அதில்
வாழும் முறையோ பெரிதாகும்
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய
இஸ்லாம் தந்த நெறியாகும்….!

குடிசை வாழும் ஏழைகளும் – பெருங்
கோடி சீமான் “ஹாஜி”களும்
முடிவில் சமமாய் மண் மீது – நபி
மொழிந்தவாறு “ஜனாஸா”வே….!

Continue Reading →

கவிதை: இரவு!

கவிதை: இரவு!

இரவு அழகானதுதான்
நிம்மதியாய் தூங்குகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
தாயின் அன்பை புசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவுகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
மனைவியின் அழகை ருசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
வான் நிலவை ரசித்து பார்ப்பவனுக்கு

Continue Reading →

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்1. இருண்ட சொற்கள்

உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்

ஒரு கல் தட்டப்படுகிறது
அதனுடன் ஒப்பிடுகையில்
தண்ணீரும் புற்களும்
எமது துயரங்களின்
விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன

‘நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?’ என
திரும்பவும் கேட்க மாட்டேன்
அப்படிக் கேட்பதன் மூலம்
கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்a
ளபளப்பான வார்த்தைகளின் மீது
சோர்வுகளை ஊற்ற முடியாது

எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
எனவே யன்னலிலிருந்து உனது
பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்

Continue Reading →

தீராத திமிர்கொண்ட பெண்ணா, எம்சீதை? (பாரதியின் சாயலில் ஒரு பாட்டு)

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

தீராத திமிர் கொண்ட பெண்ணு — சீதை
வீட்டிலே புருஷனுக்கு மனமெல்லாம் புண்ணு…
தீராத திமிர் கொண்ட பெண்ணு!…   …   …   …   …   (தீராத)

தேத்தண்ணீர் கொண்டுபோய்க் கொடுப்பாள் — அது
நாக்கிலே படுமுன்னர் தட்டிப் பறிப்பாள் — அவர்
ஏனம்மா?… என்ன இது?.. என்றால்…
சீனிபோட மறந்தாச்சு! அதற்கு என்ன? என்பாள்!…     (தீராத)

Continue Reading →

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே……..!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

Continue Reading →