மலர்கவே! புதிய ஆண்டே!

இத்தரை மீதினில் வாழும் மாந்தர்வாழ்வினில் களிப்பும் நல்ல எண்ணமும்மலர்ந்திட மற்றும் இங்கு வாழும்மரங்கள், செடிகள், புட்கள் அனைத்துஉயிர்கள் இருப்பிலும் அச்சம் நீங்கிடசூழல் பேணலில் மேலும் மானிடர்கவனம் செலுத்திட,…

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகளிரண்டு!

வேதா. இலங்காதிலகம்

1. மனிதர் மனிதராக இல்லை..

மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!

Continue Reading →

கவிதை: இனிப்புக்குள் இருக்கும் உப்பு

கவிதை வாசிப்போமா?

எனது பயணம்
தொடங்கிய பிறகுதான்
பாதையைப் பார்க்கின்றேன் –
பாதிக்கும் மேல் புற்கள்
ஆனாலும்
பாதிக்கும் என்று தோன்றவில்லை!

தொடர்ந்ததென் பயணம் – உடனே
உணர்ந்ததென் பாதம்
புற்களின் ஊடாக
கற்கள் – இடையில்
படர்ந்த நெருஞ்சி
முட்கள்!

Continue Reading →

கவிதை: ஆட்டுக்குட்டிகளின் தேவதை

கவிதை வாசிப்போமா?

ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

Continue Reading →

கவிதை: மனிதனைத் தேடி அலைகிறேன்.

கவிதை வாசிப்போமா?

பனி கழுவிய
பூக்களைப்போல்
சிரித்திருக்கும் பிள்ளைகள்

நிலம் பிடிக்கவென
புகுந்த ஆயுததாரி போல்
பிரம்போடு நுளையும் நான்

Continue Reading →

எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது

 சு. குணேஸ்வரன் காலநீட்சியின் பின்
எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது.

மூத்தோருக்கும்
காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும்
மற்றோருக்கும்
இயலாதபோது கைகொடுக்கும்
ஊன்றுகோல் அல்ல இது.

உடையாருக்கு குடை பிடிக்கவும்
பக்கப்பாட்டுப் பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல்.
இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். 

Continue Reading →

என் சித்திரத்தாளின் திருமணத்தினச் சிரிப்பு

சித்திரத்தாள் சிரித்தாள் எனைப் பார்த்து.   எம் சுவரின்மத்தியிலே தூக்கி, மறைந்து சென்று மறந்து வரும்சித்திரத்தாள், இன்று சிரித்தாள்.  என் சென்றவளின்முத்துப் போல் பல் வரிசை மிளிர்ந்து முகம்…

Continue Reading →

கவிதை: இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

– குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும். –

1_shasika_amali_munasinghe.jpg - 17.44 Kbகன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

Continue Reading →

கவிதை: அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லைகழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

Continue Reading →