– மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல்…
“திடீரென்றுஅலுவலகம்புகுந்தஅந்தத்தெருநாயின்சேறு படிந்தகால்தடம்நாள்தோறும்வீட்டிற்குவெளியில்கிடக்கும்அப்பாவின்சேறு அப்பியசெருப்பினைநினைவுப்படுத்துகிறது….வாலாட்டியேகடந்துபோகும்அதன்வாலசைவிற்குமண்டியிட்டதுஎன் வாழ்க்கை….” suniljogheema@gmail.com
தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !
இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்
1.
இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.
நான்கிற்கு நான்காய் வீடு
நடுவில் நீளமாய் மேஜை
துணி விரித்துப் போட்டு
விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.
1. வேழத்தின் ஓலம்
அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி
கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.
1. பகல் வேடக்காடு….
நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.
பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.
முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!
1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !
– அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் –
கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !
காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !
மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்
கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !
எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !
வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !
ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!
அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!
தெப்பக் குளத்தின் தென்புறத்தில்,
திண்டில் அரச மரநிழலில்,
செப்பற் கடங்கா அருள்சுரக்கும்,
சிவனார் உமையாள் முதற்குமரர்,
தொப்பை வயிற்றார் : துதிக்கை யார்,
தூங்கா மல்தினம் கண்விழித்து,
குப்பைக் குணத்தார் செயல்கண்டு,
குமுறு கின்றார் குழம்புகின்றார் !
“ஆற்றங் கரையோ குளக்கரையோ,
அதிலோர் அரச மரநிழலோ,
ஏற்றம் பெறவே இனிதுநின் றால்,
என்னை ஏனதில் இருத்துகின்றார்?
வேற்று மதத்தார் கோவிலெல்லாம்,
விண்புகழ் சேர்க்கும் மேன்மைபெற,
நாற்றம் பிடித்த இடத்திலெல்லாம்,
நமையேன் வைத்து நசிக்கின்றார் ?
காலைப் பொழுதில் அபிஷேகம் : பின்,
கடமைக் கெனவொரு சிறுபூஜை !
மாலைப் பொழுதிலும் இதுதொடரும்,
மதிப்பாய் தினமும் இருவேளை !
வேலை என்று இதைத்தொடர்ந்து,
வெறுப்பை உளத்தில் ஏற்றுகின்றார் !
நாலு தலையார் நம்மாமர்,
நமக்கென ஏனிதை எழுதிவைத்தார் ?