சிறுகதை: இரண்டு மயானங்கள்!

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!இதுவரை அவன் நூறு வாழ்ந்து முடிந்த உடல்களை புதைத்து எரித்திருப்பான். இந்த கணக்கில் கூட பிழையிருக்கலாம். அடிக்கடி சில அநாதைப் பிணங்கள் உடல் குத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பணங்களுடன் அவன் வேலையிழக்காமல் வாழ்க்கையில்லாமல்  இருக்க வந்திருக்கும். அவன் தந்தையை கூட கண்ணீர் ததும்ப புதைத்திருக்கிறான் . அவன் தாய் அவன் பிறந்த போதே மயானத்திற்கு சென்றுவிட்டாள். தன் தாயை தந்தை புதைக்கும்போது சுடுகாட்டு மண்ணில் ஒரு நாளிதழின் மீது முழு கடவுளாக தவழ்ந்திருக்கிறான்.

அப்படி ஆரம்பித்தது மயானத்திற்கும் அவனுக்கும் ஆன உறவு. இப்போது அவன் தன்னுடைய தந்தை வயதில் தன் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டிருக்கிறான்.இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அவனால் ஏதோ மற்றவர்களை போல வாழ முடியவில்லை. அவனிடம் பணம் அடிக்கடி புரளும் ஆனாலும் இன்று தான் உண்டு தன் நிழல் உண்டு என இருக்கும் அவனால் இன்றுவரை ஆண்-பெண் உறவின் ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அவனுக்கு அவ்வளவு வயதாகியும் அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை. அவன் தனியாக இருக்கும் போது அவனுக்கு இருக்கும் ஒரே பேச்சுத்துணை ராசி என பெயர் வைக்கப்பட்ட அந்த முரட்டு கறுப்பு நிற நாயும், என்னை யார் அடக்க என இருநூறு கைகளுடன் பரந்துவிரிந்து ஆகாயத்தில் எதையோ தேடும் மனித பிணச்சாம்பல்கள் ஊறிய சத்து மணலில் முளைத்து தன் வயதுடைய பெரிய வேப்பமரமும் தான்.

வேலையுள்ள நேரங்களில் ராசி அவனுடன் வந்துவிடும் . அவன் வந்திருக்கும் வாழ்ந்து முடித்தவரின் உறவினர்களிடம் எதுவுமே பேசுவதில்லை . அந்த சமயங்களில் அவன் பேசுவதெல்லாம் நான்கு கால் ராசியுடன் தான்.வேலை முடிந்தபின் நான்கு கால் ராசி மயானத்தை விட்டு ஓடிவிடும் .அது எங்கு போகும் என்று யாருக்கும் தெரியாது .இரவு நேரங்களில் அந்த வேப்பமரத்திற்கு கீழே ஒரு மரக்கட்டில் போட்டு படுத்துக்கொள்வான். இப்படி அவனுடைய வாழ்க்கை ரயில் போல போய்கொண்டிருந்தது. அன்றைய நாளும் வழக்கம் போலத்தான் விடிந்தது. ஆனால் ஒரு இனம்புரியாத சிந்தனைகள் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. தன்னை அறியாமல் கண் கலங்கியது அடிக்கடி.  வழக்கம் போல அவனால் நடந்து கொள்ள முடியவில்லை. என்றுமில்லாமல் அன்று இரண்டு வேலைகள் வந்தும் அவனது நெருங்கிய நான்கு கால் ராசி வரவில்லை. ஏதோ இது அவனை மேலும் குழப்பமடைய செய்தது.

Continue Reading →

சிறுகதை: மூச்சு விட மறுத்தவனைப்பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய  உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. “எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்” என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.

இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.

மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ  என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.

Continue Reading →

சிறுகதை: உயிர்க்கசிவு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது.

எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான்.

“என்னம்மா இது?… ராவிருட்டியில?…. பிள்ளையள் பயப்பிடப்போகுது…. படுங்கோ!”

அம்மாவுக்கு வயது போய்விட்டது. கிழவி. யார் என்ன சொன்னாலும் கேட்கத்தான் வேண்டும்.

குளிரடித்தது. போர்வைக்குள் உறக்கத்தை இழுத்து மூடிக்கொண்டு படுப்பதற்கு அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டாள். விழிப்பு போர்வையை விலக்கி விலக்கி வெளியே வர எத்தனித்தது. யன்னல்களைப் பூட்டிவைத்தாலும் குளிர்காற்று ஹோலுக்குள் இலகுவாகப் புகுந்துவிடுகிறது. சிறிய வீடு. இரண்டு சிறிய அறைகள். ஒரு அறையில் பேரப்பிள்ளைகள் படுக்கிறார்கள். மற்றதில் மகனும் மருமகளும். அதனால் அம்மாவின் படுக்கை ஹோலுக்கே வந்துவிட்டது.

உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையிலான இழுபறியில் ஓரளவு கண்தூங்கும் வேளையிற்தான் அந்தக் குருவியின் குரல் கேட்கும். நிலம் விடியாத அதிகாலையிலேயே வந்திருந்து பாடும் குருவி! வெளியே கிளை பரப்பி நிற்கும் மரத்துக்கு நாள் தவறாது வந்துவிடும். ஒவ்வொரு கிளையாக தத்தித் தத்தி அமர்ந்து பாடும் தொனி, அது தன் துணையைத் தேடி ஏங்குவதுபோலிருக்கும்.

யன்னலூடு சற்று வெளிப்புத் தெரிந்தது

அம்மா ஒரு கையை நிலத்திலூன்றி மறு கையால் பக்கத்திலிருந்த கதிரையைப் பிடித்தவாறு மெல்ல எழுந்தாள். படுக்கையை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். பின்னர் சுவரோரமாக இருக்கும் தனது கதிரையிற் போய் அமர்ந்து கொண்டாள்.

Continue Reading →

சிறுகதை: ஆண்களும் பூதமும்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான். சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப்  பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகிவிடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட் பண்ணவேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்துபோயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்கமுடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்துபோயிருந்தேன். அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும்வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவனிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும்.

முதல் நாள் இரவு ஒன்பது மணியைப்போல் வயிற்றைக் கைகளால் அழுத்திகொண்டு அழத்தொடங்கினான். அடி வயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப் பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தான் மகன். பதினொரு மணியளவில் அண்மையில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன்.

Continue Reading →

சிறுகதை : திருமதி கொஞ்சம்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -‘மிஸிஸ் கொஞ்சம்’ என்பது எங்கள் பெண்கள் திலகத்துக்கு நான் நாளாந்தப் பாவனைக்காகச் சூட்டிக் கொண்ட ஜனரஞ்சிதமான பெயர். ஒரு நாட்டின் பொருளாதார மந்திரியாக இருந்திருக்க வேண்டியவர்.  அதை, நான் மட்டுமே சொல்லவில்லை. அவரே இருந்து இருந்திட்டு எனக்கும், தன் மக்கள், நண்பர் எல்லாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் (கிடைக்காவிடின் அவரே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் கொண்டு) அதை நேரில் சொல்லி அல்லது சொல்லாமற் சொல்லி ஞாபகமூட்டத் தவறியதில்லை. ஏதோ ஒரு உலக நாட்டின் துரதிஷ்டகரமான இழப்பு ― அதாவது இந்தப் பொருளாதார நிபுணி, நாங்கள் முற் பிறவிகளில் செய்த நற்பயனால் எமக்குக் கிடைத்திருக்கிறார்.

ஒருநாள் எம்வீட்டுக்குக் கரு, தயா என்னும் ஒரு சோடி இலக்கிய நண்பர்களை இரவுச் சாப்பாட்டுக்கு நானும் மிஸிஸ் கொஞ்சமும் அழைத்திருந்தோம்.

அவர்களும் இலங்கையில் பிறந்த இங்கிலாந்து வாசிகள் என்ற படியால் பழங்கால அனுபவங்களை மீளாய்வு செய்து ஆனந்தமாக அவ் இரவைக் கழிக்கலாம் என்னும் நோக்குடன், உறைப்பான கோழி இறைச்சிக் கறியும் குழம்பும், முட்டைப் பொரியலும் கீரைப் பிட்டும் சமைப்பது என முடிவு செய்யப் பட்டது. குசினித் தட்டுகளிலிருந்த பிட்டு மாச்-சரைகளை எடுத்து அளவுச்-சுண்டினுள் போட்டு மதிப்பிட்டால், மூன்றரைப் பேருக்குப் போதும், ஆனால் நாலு பேருக்குக் காணாது என்ற நிலை. என்ன, ஒரு கொஞ்சம் தானே குறைவு, எங்களில் ஒருவர் அன்றைய வீட்டுக்காரர் என்ற முறையில் கொஞ்சம் குறைச்சுச் சாப்பிடுவது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. ஆனால் எம் இருவரில் யார் கொஞ்சம், கொஞ்சமாய் உண்பது? என்பது மட்டும் பேசப் படவில்லை.

அடுத்து, கறித்தூள், மிளகாய்த் தூள்களின் நிலை ஆராயப் பட்டது. கறித்தூள், கொஞ்சம் மட்டும் பாவிப்பது என்றும், உறைப்புக் கறியே எம் நோக்கமென்ற படியால், மிளகாய் தூளில் கொஞ்சம் கூடப் போடுவதென்றும் எம் ஒருமித்த முடிவு. இந்த எம் திட்டத்தின் படி சமையல் இனிதே நடந்தேறியது. 

Continue Reading →

சிறுகதை: கார் ஓட்டம்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -‘தம்பி, இது நல்ல விறுத்தம். பாக்கிறதுக்குத் திறமாய் இருக்குது.  இப்பிடி ஒண்டை இந்தப் பக்கத்திலை, நானெண்டால் ஒரு நாளும் காணேல்லை.  இதுக்கு என்ன பேர், தம்பி?’

‘இதை வொக்சோல் வெலொக்ஸ் எண்டு சொல்லறது, பெரியையா!’

‘நல்ல விசாலமான கார் தான், ஒரு சப்பறம் மாதிரி.  கண்ணைப் பறிச்சுக் கொண்டு மினுங்குது. அதோடை, கதவைத் திறந்த உடனை சடார் எண்டு மூக்குக்கை வந்து அடிக்கிற இந்த வாசனையையும் நான் வேறை ஒரு வண்டிலிலும் காணேல்லைத் தம்பி . . .  அங்கை! ஏதோ தூசி மாதிரி இருக்குது. துடையும்!’

‘ஓம் பெரியையா. இதைப் புதிசாய்த் தானே வாங்கின நான்.  அது தான் பளிச்செண்டு மினுங்குது, நல்லாய் மணக்குது.’

‘இங்கையும் வைச்சு ஓடுறாங்கள், இரண்டு கசவாரங்கள். முந்தி உனக்கு கார் பழக்க மறுத்த மருதங்குளத்துச் சின்னராசன்ரை ஒசுட்டின் ஏ-போட்டியும், கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை படான் போட்டும், உன்ரை இந்த வொசுக்கோல் காரிட்டைப் பிச்சை எடுக்க வேணும் தம்பி.  உன்ரை இந்தக் கார் எந்த ஊரிலை தம்பி செய்தது?’

‘இதுகும் அவையின்ரை போட்டு, ஏ-போட்டி, மொறிசைப் போலை இங்கிலாந்திலை தான், பெரியையா.’

‘அதுதானே நானும் பாத்தன். இங்கிலீசக் காறர், அவங்கள் வெள்ளையங்கள் எல்லே. எப்பிடியும் கெட்டிக்காறர் தான்!’

‘ஓம் பெரியையா, அவையிட்டை நாங்கள் படிக்கிறதுக்கு எத்தினையோ விசயம் இருக்குது தான். எண்டாலும் நாங்களும் முன்னேறி வாறம் தானே?  நாங்களும் இப்ப இப்ப நல்ல வடிவான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய தார் றோட்டுகள் எல்லாம், கொழும்பிலையும் மற்றஇடங்களிலையும் கட்டுறம் தானே?’

‘அது சரி ராசா.  அது தானே உன்னைக் கோபாலுத் தம்பியும் நானும் எஞ்சினியருக்குப் படிக்க வைச்ச நாங்கள், உன்ரை கொம்மா செத்தாப்போலை. உனக்குத் தெரியுமோ தெரியாது, கோபாலு வருத்தமாய் யாழ்ப்பாணம் திரும்பி வர முன்னம், குருநாகல், குளியாப்பிட்டியா, தண்டகமுவவிலை எட்டுக் கடையள் எல்லாம் வித்துப் போட்டுக் கொந்துறாத்து வேலை செய்ததெல்லே, புத்தளம், சிலாபம் பகுதியிலை. அப்ப கோபாலு சந்திச்ச ஆகப் பெரிய உத்தியோகத்தர், ஒரு எஞ்சினியர் தான். அது தான், அவரைப் போலை உன்iயும் படிப்பிக்க வேணுமெண்டு . . . . .   இப்ப சரி. தூசி போட்டுது. ‘

Continue Reading →

சிறுகதை: மீன் முள்!

சிறுகதை வாசிப்போமா?நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால்  ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.

என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு  சித்தன் என பெயரிட்டிருந்தது.

என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும்  கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை  என்னுடைய கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. சிலவற்றின் சன்மானம் என்னை அடைந்தும் பலவற்றின் சன்மானம் இன்னும் வந்தடையாமலுமுள்ள நிலை. நான் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.நான் அதை எடிட்டர்கள் நல்வாழ்வுக்கு என தியாகம் செய்துவிடுவேன்.

அவ்வப்போது நான் பாடுவது உண்டு.எனக்கு வீணையும் வாசிக்க தெரியும்.இதனால் எனக்கு ஒரு சில வயதான ரசிகர்கள் உள்ளனர். நான் வெகுதூர பயணத்தில் இருக்கும்போது சாலையின் ஓரத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் நின்றுகொண்டே.சில்லறைகள் பல கொட்டும்.நோட்டுகள் சில விழும்.இது நான் எழுதி சம்பாதித்ததைவிட அதிகமாக இருந்தது.

நானும் மனிதன் தானே என நிருபிக்க ஒரு பெண்ணை காதலித்தேன்.அவள் பெயர் மாதவி.அவளுக்கு இப்போது இரு ஆண் குழந்தைகள்.நிச்சயம் நான் ஒரு துரதிருஷ்டசாலி.என் காதலியின் கல்யாணம்  என் மனதின் முன்பே நடந்தேறியது.அன்றிலிருந்து தெரிந்தது நான் மனிதன் அல்ல.நாம் சிரிப்பதும்,சந்தோஷப்படுவது வீண் என.அவளின் கல்யாண நாளில் இருந்தே நான் என் மகிழ்ச்சியுடன் விவகாரத்து பெற்றிருந்தேன்.

வரவர என் தொழிலும் வீழ்ச்சி தான்.அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்து உங்கள் படைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றே பதில் வந்தது.வேறு வழியில்லாமல் சிற்றிதழ்களுக்கு அனுப்பி பார்த்தேன்.ஒன்றும் நடக்கவில்லை.அவர்கள் அனைவரும் பெயர் பிரபலமானதா என்று பார்த்தார்களே ஒழிய படைப்பை பார்க்கவில்லை.

தரமான இலக்கியம் பிரசுரமான காலம் போய் நவீனத்துவம் என்ற பெயரின் பெயரில் நகைச்சுவை இலக்கியமும்,தனிநபர் விமர்சனமும் பத்திரிக்கைகளை கோலோச்சின.எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுத தெரியாது.எனக்கு தெரிந்தது எல்லாம் ஜெயகாந்தனும்,நகுலனும்,பிரமிளும்,மெளனியும்,சுந்தர ராமசாமியும் ,ஆத்மாநாமும்  தான்.இதனால் என்னவோ என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்டது என்றே எனக்கு பொருள்கொள்ள தோன்றியது.

Continue Reading →

அயல் மொழிச்சிறுகதை: நெய்ப்பாயசம்

கமலாதாஸ்நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்… என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?”  அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை.

Continue Reading →

காதலர்தினக் கதை: கண்களின் வார்த்தை புரியாதோ..?

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?   குரு அரவிந்தன் அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.

இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

Continue Reading →

சிறுகதை : என் சுண்டெலி செத்தே விட்டதோ?

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இன்று சடுதியாக என் சுண்டெலிக்கு வலிப்பு! நேற்று மட்டும் நன்றாய்த் தான் இருந்தது.  புதுமெருகூட்டப்பட்ட என் பழையகவிதைகளில் ஐந்தைக் கணினியில் தட்டெழுதிப் பிரசுரத்துக்கு அனுப்பிவிட்டே படுக்கச் சென்றேன். இன்று காலையில் நான் வழக்கமாக மேயும் இணையத் தளங்கள் மூன்றையும் தேடிப் பிடித்து ஈழத் தமிழர் உரிமைப்போரின் கடைசியான திருப்பு முனைகள் என்னவென்று அறிந்த பின்னர் என் எழுத்து வேலையை ஆரம்பிப்போம் என எண்ணிக் கணினியின் தொடங்கு குமிழ்களை அழுத்தினேன். கணினியும் விழித்து என்னைப் பார்த்துச் சிரித்துக் காலை வணக்கம் சொல்லி இன்முகத்துடன் வரவேற்றது.

ஒரு வினாடிகூட விரயம் செய்ய விரும்பாது, கணினியின் உள்ளே செல்ல எண்ணி, காத்திருந்த விநாயகரின் வாகனத்தை அதன் புறமுதுகின் முன்பக்க இடது முனையில் முதல்விரலால் அழுத்தி, முன்னே தள்ளினேன். சுண்டெலி அசைந்தது. ஆனால் கணினி, சிரித்த முகத்துடன் உறைந்தே காணப்பட்டது. சுண்டெலியைத் தலைகீழாகத் தூக்கி அதன் தொப்புளிலே எரிந்து சிகப்புநிற வெளிச்சம் வீசும் வட்டம் அணைந்து இருந்ததைக் கவனித்தேன். என் சுண்டெலி லேஸர்க் கதிர்ச் சத்திரசிகிச்சை பெற்றால்தான் இனி விழித்தெழுந்து இயங்கக் கூடும் என உணர்ந்தேன். அது என் சில தினங்களையும் பணப் பவுண்டுகளையும் ஏப்பம் விடக்கூடும் எனவும் சிந்தித்தேன். என் சட்டைப் பைக்குள் இருந்த உள்ளங்கைத் தொலைபேசியின் சிறு பொத்தான்களை மெதுவாக மாறிமாறி அழுத்தி ஹரோவிலிருந்த பீசீ-உலகக் கடையுடன் பேசினேன்.

என் சுண்டெலியை நான் குப்பைக்குள் வீசிவிட்டு வந்தால், அதை உயிர்ப்பிக்க வேண்டிய அதே பதினைந்து பவுண்டுக்கு ஒரு புதிய சுண்டெலியை விற்பதாக வலை விரித்தனர். நான் சிந்தித்தேன்:

இந்தச் சிணுங்கு மூஞ்சிச் சுண்டெலிக்குப் பதினைந்து பவுண்டுகள் ஏன்? இது இன்றைய ரகத்து லேஸர்ச் சுண்டெலி என்ற படியாலேயே! இது என் மேசைக் கணினியுடன் சேர்த்து வியாபாரப் பேரத்தில் கிடைத்தது.

Continue Reading →