சென்னையில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘துயில்’ கலந்துரையாடல்

எஸ். ராமகிருஷ்ணன்சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.  நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

Continue Reading →

லண்டனில் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ விருதைப்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்!

இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ நவஜோதி ஜோகரட்னம்இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’  ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில்  லண்டன் The Orchard Theater  இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.

‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்தைக் குருவாகக் கொண்டு  சாகித்தியா இவ்வரங்கேற்றத்தை கடும் உழைப்பின் மத்தியில் சிறப்பிப்பது தன்னை மிகமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக கனடாவிலிருந்து பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த ‘நிருத்தியக் கலைமணி’ ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். புஷ்பாஞ்சலி,  கணபதி ஸ்துதி, ஜதீஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், பதம்,  கலிங்க நர்த்தனம், தில்லானா என்ற ஒழுங்கில் கவர்ச்சி, கச்சிதம், விறுவிறுப்பு நிறைந்த நடன உருப்படிகளால் சாகித்தியா  சபையோர்களைக் கட்டி வைத்திருந்தாள் என்று தனது பிரதம உரையில் குறிப்பிட்ட ஸ்ரீமதி. கிருபாநிதி ரட்னேஸ்வரன் இரு கண்களைப்போன்று நர்த்தகி சாகித்தியாவும் இசைக் கலைஞரான ஸ்ரீ.பாலகாட் ஸ்ரீராமும் பக்க வாத்தியக் கலைஞர்களான ‘மிருதங்க கலைமாமணி’ ஸ்ரீ.பத்மநாபன் ஜெயராமன், வயலின் வித்துவான் ‘சங்கமித்திரா’ ஸ்ரீ. கே.ரி.சிவகணஷ்,   புல்லாங்குழல் செல்வன்.அரவிந்தன் பகீரதன் போன்றவர்களோடு இணைந்து பரதத்தின் மதிப்பை, ஆளும் நேர்த்தியோடமைந்த பாவத்தை, கலையை உயிரோட்டமாக வெளிப்படுத்தி ரசிர்களை தக்க வைத்தார்; நர்த்தகி சாகித்தியா என்றும் பாராட்டியிருந்தார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

தமிழ்  ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

வணக்கம் நண்பர்களே…. தமிழ் ஸ்டுடியோவின் ஐந்திணை மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருகிறது. திரைப்படம் பார்ப்பதையே ஒரு கலையாக மாற்றும் முயற்சியாக ஐந்திணை செயல்படவிருக்கிறது. மேலும் திரைப்படம் சார்ந்து நுணுக்கங்கள், திரைப்படம் இலக்கியம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு, வெகுவாகக் குறைந்து வரும் மனித உறவு போன்றவற்றை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் களமாக இந்த ஐந்திணை செயல்படவிருக்கிறது.

Continue Reading →

வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை நூல் வெளியீடு

“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற…

Continue Reading →

Bollywood Cinema Showcards: Indian Film Art from the 1950s to the 1980s

Last Day October 2; Bollywood Cinema Showcards: Indian Film Art from the 1950s to the 1980s Included with Museum admission. Only a few weeks remain to see this stunning array of vintage Bollywood cinema showcards and other forms of film advertising, assembled for the first time in Canada. Using a combination of photo collage and hand painting, local artisans used their imagination to create dynamic interpretations of scenes from Bollywood films.

Continue Reading →

பிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா!

அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு. இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன .

Continue Reading →

கவிதை நூல் வெளியீடு: மட்டுவில் ஞானகுமாரனின் சிறகு முளைத்த தீயாக…..

‘ஸ்காபுரோ சிவிக் சென்ரர்’ , 23-09-2011 வெள்ளி பி.ப. 5:30 மணி அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்! தொடர்புகளுக்கு: 416-546-1394  – 647-504 3336 க.நவம்: knavam27@hotmail.com

Continue Reading →

கனடாவில் நடந்த சிறார்களின் இசை அர்ப்பணமும் சலங்கைப் பூசையும்.

சென்ற வாரம் 03-11-2011 ரொறன்ரோ பின்ச் அவனியூவில் உள்ள ஜோர்க்வூட் அரங்கத்தில் சிறார்களின் இசை அர்ப்பணமும், சலங்கைப் பூசையும் ஒரே மேடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. பிரபல பாடகியான இசைக்கலா வித்தகர் கலைமணி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான ஆகாஷ் கதிர்காமனின் இசை அர்ப்பணமும், பிரபல நாட்டிய தாரகையான லலிதா கதிர்காமனின் மாணவியான அஸ்வினி கதிர்காமனின் சலங்கைப்பூசையும் ஒரே மேடையில் இடம் பெற்றன. ரொறன்ரோவின் பிரபல நடன, சங்கீத, இசைக் கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டதுசென்ற வாரம் 03-11-2011 ரொறன்ரோ பின்ச் அவனியூவில் உள்ள ஜோர்க்வூட் அரங்கத்தில் சிறார்களின் இசை அர்ப்பணமும், சலங்கைப் பூசையும் ஒரே மேடையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. பிரபல பாடகியான இசைக்கலா வித்தகர் கலைமணி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவனான ஆகாஷ் கதிர்காமனின் இசை அர்ப்பணமும், பிரபல நாட்டிய தாரகையான லலிதா கதிர்காமனின் மாணவியான அஸ்வினி கதிர்காமனின் சலங்கைப்பூசையும் ஒரே மேடையில் இடம் பெற்றன. ரொறன்ரோவின் பிரபல நடன, சங்கீத, இசைக் கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.

Continue Reading →

National Book Development Council of Singapore (NBDCS),: Short Story Writing Workshop (in Tamil):

National Book Development Council of Singapore (NBDCS)ஜெயந்தி  சங்கர்எழுத்தாளர் மாலன்

Hello! We are pleased to inform you that the National Book Development Council of Singapore (NBDCS), with the support of National Arts Council (NAC), Singapore Indian Development Association (SINDA), Singapore Tamil Teachers’ Union (STTU) and Association of Singapore Tamil Writers (ASTW), will be organising the Short Story Writing Workshop (in Tamil) on:

Continue Reading →