இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

இலண்டனில் பரணீதரி தனது புதல்விகளுடன் பரத அரங்கேற்றம்

ஒரு நர்த்தகி என்பவள் தனது உடலைப் பயிற்சிகளுக்கு  உட்படுத்தி குறிப்பிட்ட கலையில் அழகியல் அம்சம்  நிறைந்த உடலாக மாற்றியமைக்கின்றாள். அவளது உடல் அதிகளவு அழகிய அம்சமுடைய சக்தியின் இருப்பிடமாக விளங்குகிறது. அந்த வகையில் பரணீதரி தில்லைநாதன் தன்னைப் பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்தி விடாமுயற்சியுடன் ஒரு தாயாக நின்று அரங்கேற்றம் செய்வது என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

Continue Reading →

இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) ,அவுஸ்திரேலியா : 31 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்

இலங்கையில் நீடித்த போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 1988  ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்  முப்பத்தியோராவது ஆண்டு நிறைவு நிகழ்வும், வருடாந்த பொதுக்கூட்டமும் இம்மாதம் 19 ஆம் திகதி ( 19-10-2019)  சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில் மெல்பனில் வேர்மண் தெற்கு சனசமூக நிலையத்தில் ( Vermont South Community House – Karobran Drive, Vermont South VIC 3133) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின்  தலைமையில் நடைபெறும்.

Continue Reading →

குவியம்’ ஆரம்பம்

செப்டெம்பர் பதினொராம் திகதி மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலான காலப்பொழுதில் ‘குவியம்’ அறிமுக விழாவை இலண்டன் ஈலிங் அம்மன் கோவிலின் அரங்கில் நடாத்தி வைத்தனர். புரட்சிக் கவிஞன் பாரதியார் பிறந்ததினமாகிய அன்று ‘குவியம்’ என்றொரு இலக்கியம் சார்ந்த அமைப்பை எழுத்தாளரும் கவிஞருமான நிலா துவங்கியுள்ளார்.

அந்த விழாவை குவைத்திலிருந்து வந்திருந்த எழுத்தாளரும் கவிஞருமாகிய திரு வித்தியாசாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தமை மகுடமாக அமைந்தது. திருமதி யமுனா தருமேந்திரனின் தொகுத்து வழங்கலில் அமைந்த விழா மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

Continue Reading →

நிகழ்வு: லண்டனில் பிரீத்தி பவித்ரா மகேந்திரனின் புல்லாங்குழல் இசை

நிகழ்வு: லண்டனில் பிரீத்தி பவித்ரா மகேந்திரனின் புல்லாங்குழல் இசை

‘அரங்கேற்றம் என்பது ஒரு இளம் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும். பத்து வருடங்களுக்கு மேலாக புல்லாங்குழல் இசையை, பிரபல வேணுகானமணி ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனைக் குருவாகக் கொண்டு பயின்ற பிரீத்தியின் அரங்கேற்றமோ ஒரு புல்லாங்குழல் கச்சேரியைப் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. அபாரமான தேர்ச்சி பெற்ற கலைஞர் போன்று பிரித்தி பவித்ரா பிரபல மிருதங்க வித்துவான் ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரா, பிரபல வயலின் வித்துவான் ஸ்ரீ சிதம்பரநாதன் ஜலதரன் போன்ற கலைஞர்களுடன் தனது புல்லாங்குழல் இசையின் தாள லயம் குறித்த உணர்வை முக பாவங்கேளோடு வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. பிரீத்தியின் அண்ணனான டாக்டர் மேவின் மகேந்திரன் தன்னடக்கத்தோடு மோர்ஷிங் இசையை அழகாக வாசித்து தங்கைக்கு புத்துணர்வை ஏற்படுத்திய விதம் மகிழ்வு தரும் ஒன்றாகும்’ என்று செப்டம்பர் 21ஆம் திகதி லண்டன் ‘பெக்’ தியேட்டரில் இடம்பெற்ற அரங்கேற்றத்தில், சென்னையிலிருந்து வருகை தந்திருந்த ஸ்ரீ என். ராமகிருஷ்ணன்  தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.

Continue Reading →

அறிமுகமும் வெளியீடும், மெல்பேர்னில்! ஆசி கந்தராஜாவின் சிறுகதைத் தொகுதி மற்றும் புனைவுக் கட்டுரைத் தொகுதியும், சௌந்தரி கணேசனின் கவிதைத் தொகுதியும்…

புதியவன் ராசையாவின் ‘ஒற்றைப்பனைமரம்’

புதியவன் ராசையாவின் 'ஒற்றைப்பனைமரம்'

வணக்கம்,  புதியவன் ராசையாவின் ஒற்றைப்பனைமரம் என்ற திரைப்படத்தை மீண்டும் Saturday October 12 ம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு திரையிட நண்பர்களில் சிலர் யோசித்துள்ளோம். இத் திரையிடலுக்கான உங்கள் ஆதரவை ம் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

அன்புடன்,

செல்வன்

Continue Reading →