மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரன் கவிதைகள் 41

எனது 41 கவிதைகள் ‘வ.ந.கிரிதரன் கவிதைகள் 41’ என்னும் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் வடிவிலேயே மின்னூல் கிடைக்கும். எதிர்காலத்தில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். வாங்குவதற்கான இணைய இணைப்பு:

Continue Reading →

மின்னூல் வாங்க: நாவல் – அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’

மின்னூல் வாங்க: நாவல் - அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ‘மனக்கண்’ நாவல் தற்போது மின்னூல் வடிவில், ‘பதிவுகள்.காம்’ வெளியீடாக வெளியாகியுள்ளது. வாங்க விரும்பினால் அதற்கான இணைய இணைப்பு: மின்னூலின் அறிமுகக் கட்டுரை: அ.ந.க.வின் மனக்கண் – வ.ந.கிரிதரன் –

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது ‘தணியாத தாக’த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் ‘களனி வெள்ளம்’ என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் ‘மனக்கண்’ நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போதைய அதன் இயக்குநர் விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை ‘லீகல் சைஸ்’ அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை. நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

Continue Reading →

மின்னூல் வாங்க: ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்)

பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் ‘மனக்கண்’, அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். ‘பதிவுகள்’ இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும்.


எனது 60 கட்டுரைகள் அடங்கிய தொகுதி ‘வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்) என்னும் தலைப்பில் மின்னூலாகப் ‘பதிவுகள்.காம்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை விபரம்: $6  தற்போது பிடிஃப் கோப்பாக இம் மின்னூல் கிடைக்கின்றது. இம் மின்னூலினை வாங்க விரும்புபவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்:

தொகுப்பிலுள்ள கட்டுரைகள் விபரங்கள் வருமாறு:

Continue Reading →

மின்னூல் வாங்க: கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்

பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். கவீந்திரன் (அமரர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்…

Continue Reading →

மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்.

– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி…

Continue Reading →

e-book: Novella – America By V.N.Giritharan & English Translation By: Latha Ramakrishnan

– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி…

Continue Reading →

To buy ‘AN IMMIGRANT’ (e-book) By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan]

– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி…

Continue Reading →

மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:

– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி…

Continue Reading →

மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’

– பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் ‘மனக்கண்’, அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். ‘பதிவுகள்’ இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். –


வ.ந.கிரிதரனின் நாவலான 'குடிவரவாளன்'  மின்னூலினை வாங்க விரும்புகின்றீர்களா?

வணக்கம்!  ‘குடிவரவாளன்’ நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்):

குடிவரவாளன் நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்… வ.ந.கிரிதரன் –

இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Continue Reading →