அஞ்சலி: ஏழாலை தந்த தமிழ்மகள்:தமிழ்ப்பிரியா

இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

– எழுபதுகளில் இலங்கை வானொலியில் தன் இலக்கிய பயணத்தை ஆரம்பித்துப்பின் பத்திரிகை, சஞ்சிகை எனத் தன் பயணத்தை விரிவு படுத்தியவர் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா (முத்தையா புஷ்பராணி). இலங்கையில் ஏழாலை , சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிந்தாமணி, சுடர், சிரித்திரன், ஈழநாடு , வீரகேசரி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகின. குங்குமம் (தமிழகம்) வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத்தயாரித்தவர் இவரென்று எங்கோ வாசித்த நினைவு. அதிலும் இவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. சுடரில் சிறுகதைகளுடன் இவரது நாவலொன்றும் தொடராக வெளியானது. சுடரின் ‘சந்திப்பு’ பகுதிக்காகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், எழுத்தாளர் குறமகள் ஆகியோருடன் இவர் நடாத்திய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. புலம் பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வந்த இவரது மறைவுச் செய்தியினை முகநூலில் இவரது நெருங்கிய தோழிகளிலொருவரான எழுத்தாளர் தாமரைச்செல்வி பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் முல்லை அமுதன் இவர் நினைவாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குக் கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். – பதிவுகள் –


உலகம் கைகளுக்குள் வந்தமை ஆச்சரியம் தான். வாழ்வில் பலரைச் சந்திக்கமுடியாமலேயே போய்விடுமோ என்கிற ஆதங்கம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.சிலசமயம் எல்லாம் கைகூடி வந்திருக்கும்.பலதடவைகள் கைகளுக்கு எட்டாதவையாகவே காலம் முடிந்திருக்கும். ஊரில் ஒவ்வொரு மாலைப்பொழுதுகளையும் ஆக்கிரமித்திருந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சிறு நாடகங்கள்,தொடர் நாடகங்கள் இவற்றுக்கப்பால் என் போன்றவர்களை அதிகம் வசீகரித்த நிகழ்வு எதுவெனில்  ‘இசையும் கதையும்’ நிகழ்ச்சியாகும்.கதைக்கேற்ற பாடல்களுடன் மனதுள் இறங்கி நாளெல்லாம் அசைபோடவைக்கும்.பல நாட்கள் அவை பற்றியே பேசுவோம்.நண்பர்களின் வீட்டில் அல்லது யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிலோ உட்கார்ந்து கேட்போம்.பொழுது போவதே தெரியாது..வேறு தெரிவுகளும் இல்லாத நாட்கள்.

அதே சமயம் யார் என்கிற தேடலும் நண்பர்களிடையே எழும். அந்த வேளையில் தான் ஈழநாடு, சுடர், கலாவல்லி, இலங்கை வானொலி, வீரகேசரி, சிந்தாமணி, அமிர்த கங்கை, மல்லிகை, சிரித்திரன் , குங்குமம்(இந்தியா), இதயம் பேசுகிறது  போன்ற இதழ்களில் எழுதிய கதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படப் பலரும் வாசிக்கும் படைப்பாளராக நாம் கண்டோம்.சுடரில் வெளிவந்த ‘வீணையில் எழும் ராகங்கள்‘ மறக்கமுடியாத தொடராகும். அதே போலத் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதத்தொடங்கினார். அப்போது  ‘நெஞ்சில் வரைந்த ஓவியம்‘, ‘உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது’, ‘இறைவன் கொடுத்த வரம்‘ போன்ற தொடர்களை எழுதி எம்மை வியப்பில் ஆழ்த்தினார்.நாமும் எழுதத்தொடங்கிய காலம். அதே சமயம் கவிதைகள், கட்டுரைகள் எனவும் எழுதினார். குங்குமம் இலங்கைச் சிறப்பிதழுக்குத் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

Continue Reading →

நூல் மதிப்புரை : “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் – என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இந்நூலில் மொத்தம் இருபத்து மூன்று கட்டுரைகள். தமிழில் பதினைந்து. ஆங்கிலத்தில் எட்டு. கட்டுரை வாசித்த அனைவருமே தில்லிப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் தமிழோடு இன்னொரு மொழி பயின்ற மாணவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பிறகு எங்கெங்கோ பணியாற்றுபவர்கள். திருக்குறள் உலக அளவில் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினால் மொழிபெயர்க்கப்படாத மொழி எது இருக்கிறது என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும்  என்றாலும் எழுத்தும் இலக்கியமும் படைத்த மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதுவும் பலமுறைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நாற்பது முறை. இந்தியில் இருபது முறை. நமக்கு வியப்பு ஏற்படுகிறது. இந்தியில் இருபது முறைகளா? என்றும் ஆதிக்க மொழி இந்தி என்று கருதி நாம் எரிச்சலடைகிறோம். இந்தி மக்கள் மீது நமக்கு எந்த வகையிலும் கோபமில்லை. மக்கள் சார்பில் இருபது முறை மொழிபெயர்க்கப்பட்டது வியப்பில்லை.

கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் இந்திய மொழிகள், அயல்மொழிகளாக உள்ளன. இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், கொங்கணி, மராத்தி, உருது, சமற்கிருதம், இந்தி, ஒடியா, பஞ்சாபி எனப் பல மொழிகள். இவற்றோடு அயல் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ், ஜப்பான், இரஷ்யன் போன்றன.

Continue Reading →

கலைஞர் இரகுநாதனுக்கு இதய அஞ்சலி ! என்னை வாழ்த்திய எந்தன் இரகு, இன்று நினைவாகிப்போனார்!

“ சிறு நண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை அலை வந்து
அதுகொண்டு போகும்….”

கவிஞர் அம்பிகடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

ஓர்கால் நான் அரசியலில் ஊன்றி நின்ற காலம். 1950 களில் சிறுகதை எழுதுவதுடன் எழுத்துலகில் அடி எடுத்து வைத்த நான், பின்பு விஞ்ஞானக் கட்டுரை, கவிதை என விரிவாக்கம் செய்து, ஈழத்து பேனா மன்னன் எனவும் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களால் விதந்துரைக்கப்பட்டேன். அதுமட்டுமல்ல. 1968 ஆம் ஆண்டு, புகாரில் ஒரு நாள் என்ற நான் எழுதிய கவிதைக்கு தமிழ்நாட்டிலே அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியில் இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் கையால் தங்கப் பதக்கம் பரிசும் பெற்றேன். அப்போதுதான், அன்பர் இரகுவுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நிழல் நாடக மன்றத்தின் ஸ்தாபகராகிய அவர், கவிதை நாடகம் ஒன்றை மேடையேற்றுதற்கு என்னிடம் வந்தார். அத்தொடர்பால் “வேதாளம் சொன்ன கதை” என்ற எனது கவிதை நாடகத்தின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். நிழல் நாடக மன்றம் அதனைத்தயாரித்து 1970 இல் மேடையேற்றியது. நானும் நாடகத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். பின்னாளில் அவர் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற திரைப்படத்தை எடுத்தபோதும் என்னிடமிருந்தும் ஒரு பாடலைப் பெற்றுக்கொண்டார். காலத்தின் கோலத்தில், வீடு, ஊர், சொந்தம், சுற்றம், உறவு, விளைநிலம் எல்லாம் விட்டு ஏதிலிகளாக, புலம் பெயர்ந்த அவர், பிரான்ஸ் நாட்டிலே தஞ்சம் புகுந்தார். நான் அவுஸ்திரேலியாவின் கரையேறினேன். அதேசமயம் எமது உறவு நீடித்து நிலைத்தது. அவர் புகலிடத்திலும் தன் கலைப் பணிகளைத் தொடர்ந்தார். காலஞ் சுழன்றது காட்சிகள் மாறின.

Continue Reading →

ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து கூகி வா தியாங்கோவின் ( Ngugi wa Thiong’o) சிந்தனைகள்

கூகி வா தியாங்கோ ( Ngugi wa Thiong’o)

- ஞா.டிலோசினி, கிழக்குப் பல்கலைக்கழகம் -

கூகி வா தியாங்கோ கிழக்கு ஆபிரிக்காவில் கென்யாவில் தோன்றிய திறமையான, தரம்வாய்ந்த எழுத்தாளராகக் காணப்படுகிறார். பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றிய இவர், ஒப்பிலக்கியம் மற்றும் அளிக்கைகள் தொடர்பான பேராசிரியராகவும் கடமையாற்றினார்.

தியாங்கோ நாவல், நாடகம், சிறுகட்டுரை முதலானவற்றையும் இலக்கிய விமர்சனம், சமூக விமர்சனம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளிலும் எழுதியுள்ளார். 1977 இல் நாவல் எழுத ஆரம்பித்தார். தியாங்கோ சாதாரண மக்களைக் கருத்திற் கொண்டே தனது படைப்புக்களை எழுதினார்.  ‘அழாதே, குழந்தாய்!’ (Weep not Child), ‘இடைப்பட்ட  ஆறு’ (The River Between) , ‘கோதுமைத் தானியமணி’ ( a Grain of Wheat) , ‘இரத்த இதழ்கள்” ( Petals of Blood), ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ (Devil on the Cross ) ஆகியவை இவரது நாவல்களாகும்.

தியாங்கோவின் படைப்புக்கள் ஆபிரிக்க இலக்கியம், அரசியல், மற்றும் அடிமை வாழ்க்கை குறித்து எழுதப்பட்டவையாகும். ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற கூகி வா தியாங்கோவின் நூலை அடிப்படையாக வைத்து ஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து தியாங்கோவின் சிந்தனைகளை அறியமுடியும்.

காலனிய ஆதிக்கத்தில் இருந்து தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆபிரிக்கப் படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள் அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல்’ என்ற தமது நூலில் ஆபிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளில் இருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்ச் செயற்பாடுகளை விபரித்துள்ளார்.

Continue Reading →

யூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் ! அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் !!

நீர்வை பொன்னையன்- பேராசிரியர் மெளனகுரு -இலியட் ஒடிஸி எனும் கிரேக்க காவியத்தில் ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க பத்து ஆண்டுகள் கிரேக்கத்தில் நடை பெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயாணத்திலும் கழித்தவன் யுலிஸஸ்.  ஓய்வு என்பதே அறியாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய, புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய புதிய திசைகளை நோக்கிச் செல்ல விரும்புவன். தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று. கிழப்பருவமெய்திய யூலிசஸ் நாட்டுக்கு மீள்கிறான்.

இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிவதைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை. எனினும் நாடுவந்து. ஓய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத்து உறங்கி வறிதே இருக்க முடியவில்லை. சுறுசுறுப்பான அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் “சும்மா” வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிசன் பாடிய இலியட் ஒடிசியில் வரும் யூலிசஸ் கூற்றை மொழி பெயர்த்துத் தந்துள்ளார் விபுலானந்த அடிகளார். சும்மா இருப்பதை வெறுத்த யூலிசஸ், “ பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே “ எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பாடும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் வந்து சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.

Continue Reading →

துயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்,…

Continue Reading →

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்

- ஞா.டிலோசினி -“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு புதிய இயக்கம். அத்தோடு பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய, அரசியல், பொருளாதார சூழ்நிலையிலும் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்னும் உயர்நெறியை நிலைநாட்டுவதைக் கருவாகக் கொள்கிறது என விளக்குகிறது” (பிரேமா, இரா., பெண்ணியம் – அணுகுமுறைகள் : 13).

புலம்பெயர் சூழலில் பெண்களின் எண்ணிக்கை கணிசமானளவு காணப்படுகிறது. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த ஆண்களின் சகோதரிகளாகவும், மணப் பெண்களாகவும் பெண்கள் புலம்பெயர்ந்து சென்றனர்.

பின்னர் கல்வி, வேலைவாய்ப்பு என வேறு தேவைகளுக்காகப் புலம்பெயர்ந்தனர். இலங்கையை விட புலம்பெயர் சூழலில் பெண்கள் தொடர்பான பண்பாட்டுக் கூறுகளை தமிழர் சமூகம் கட்டிறுக்கமாக வைத்திருக்கிறது. பெண்களது நடைமுறைகள், திருமணம் ஆகியவை தொடர்பாக அதிகாரம் மிக்க போக்குடன் நடந்து கொள்ள முனைகிறது.

தனிமைத் துயர், மொழி, அந்நியத் தன்மை, நிறவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் பெண்களே, பெண்களது பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், செயலாற்றவும் துணிந்தனர். இதனால் வெவ்வேறு நாடுகளில் பெண்கள் அமைப்புக்கள் உருவாகியதோடு, பெண்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றதோடு, பெண்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் வெளியீடுகளும் வெளிவந்தன. (நூல்கள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள்). இத்தகைய வெளியீடுகளில் இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் நாவல்களும் குறிப்பிடத் தக்கன.

இராஜேஸ்வரி, கணவர்களின் கொடுமைகளால் பெண்கள் தஞ்சம் புகும் ஸ்தாபனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தவர். பெண்களுக்கான துயர்களும், கொடுமைகளும் இன, மத, மொழி, வர்க்கங்களைத் தாண்டியவை என்பதை உணர்ந்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யும் நோக்கில் ‘கிரேட் லண்டன் கவுன்சிலில் (GLC) வேலை செய்தார்.

Continue Reading →

கப்பலில் கரையொதுங்கியவர்கள்

கப்பலில் கரையொகப்பலில் கரையொதுங்கியவர்கள்துங்கியவர்கள்

“2009, 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு கப்பல்களில் புகலிடம் தேடி வந்திறங்கிய தமிழர்களை நாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினோம். அவர்களது குடும்பங்களைப் பிரித்தோம். குழந்தைகள் உட்பட, சகலரையும் சிறையில் அடைத்தோம். இவர்கள் சிறையில் நலிவுற்றிருந்த இதே ஆண்டுகளில்தான் –  கொசொவோ அகதிகளை விமானங்களில் மீட்டெடுத்துக் கொண்டுவந்த பத்தாவது ஆண்டு நிறைவையும், வியட்நாமிலிருந்து தப்பியோடி வந்த அகதிகளை வரவேற்ற நாற்பதாவது ஆண்டு நிறைவையும், ஹங்கேரியப் புரட்சியின்போது இடம்பெயர்ந்த அகதிகளை உள்ளெடுத்த ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் நினைவுறுத்திக் கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த காலங்களில் அகதிகள் மீது காண்பித்த அனுதாபத்தையிட்டும் இரக்கத்தையிட்டும் எங்கள் முதுகில் நாங்களே தட்டிப் பெருமிதமடைந்தோம். அதே சமயம், புதிதாக வந்திறங்கிய தமிழ் அகதிகளிடம் கொடூரமாக நடந்துகொண்டோம். கனடியர்களான நாங்கள் உண்மையில் யார் என்பதிலும், உலகுக்கு எங்களை எப்படி நாங்கள் காட்டிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ள இந்த முரண்நிலையை நான் ஆராய்ந்தறிய விரும்பினேன்.”

The Boat People என்னும் தமது முதலாவது நாவலூடாக ஆங்கில இலக்கிய உலகில் இன்று பிரபலம் அடைந்திருக்கும் தமிழ்க் கனடியரான ஷரோன் பாலா (Sharon Bala) அந்த நாவலைத் தாம் எழுதுவதற்குக் கால்கோளமைத்த அருட்டுணர்வின் பின்னணியை இவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்.

தொழிலின் நிமித்தம் டுபாயில் வசித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அங்கு பிறந்தவர், ஷரோன். பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) வாழ்ந்து வந்த அவரது குடும்பம், இலங்கையில் நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக ஊர் திரும்ப விரும்பாமல், ஷரோனின் ஏழாவது வயதில் கனடாவுக்கு இடம் பெயர்ந்தது. ஒன்ராறியோ மாகாணத்தின் பிக்கறிங்ஸ் நகரில் வளர்ந்த ஷரோன், உலகின் சகல திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களை உள்ளடக்கிய அன்றைய கனடிய பன்முகக் கலாசாரச் சூழலே, தமது இன்றைய ஆளுமைக்கும் எழுத்தார்வத்துக்கும் வித்தூன்றியதாகக் கூறுகின்றார்.

Continue Reading →

‘முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’

'முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன்  அவர்கள் ஐபிசி தமிழ் பத்திரிகையில் ஈழத்து இலக்கியச் சிற்பிகள் என்னும் தலைப்பில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், இலங்கை இலக்கியத்தில் தடம் பதித்த ஆளுமைகள் பற்றி எழுதி வருகின்றார். இதுவரை பெப்ருவரி மாத இதழில் அவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி ‘முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’ என்னும் தலைப்பில்  எழுதியிருக்கின்றார், அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதிலெங்கும் அ.ந.க.வின் நினைவு நாள் பெப்ருவரி 14 என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் பெப்ருவரி மாதம் அ.ந.க.வை நினைவு கூர்ந்திருப்பதும், அம்மாதத்திலேயே அவரது நினைவு தினம் வருவதும் பொருத்தமானது.

Continue Reading →

தமிழிலக்கியங்களில் அறச்சிந்தனைகள்

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையும் மேன்மையும் உடையது தமிழ். இவ்வகையில் தமிழ் ஈடு இணையற்ற மொழி. பழந்தமிழர்கள் இனக்குழுக்களாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். அறம், இசை, ஈதல், கல்வி, காதல், வீரம், போர்த்திறன் எனப் பல்வேறு சிறப்புகளோடு வாழ்ந்ததை இலக்கியங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. தமிழ்இலக்கியங்களில் காணப்படும் சிறப்புகளில் ஒன்று அறம். இந்த அறம் சங்க இலக்கியம் தொடங்கிக் காப்பியம், அறஇலக்கியம், சிற்றிலக்கியம் என நீண்டு இன்றைய நவீன இலக்கியம் வரை தமிழின் மரபு அறுபடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய அறச் சிந்தனைகளில் சிலவற்றை இங்குக் காணலாம்.

முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். சங்கக் காலத்தில், உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். புலவர்களைப் பெரிதும் போற்றினான். மிகுந்த பொருள்களை நல்கினான். இதனைக் கண்ட அவன் மக்கள் வெதும்பினர். தந்தைக்குப் பிறகு நாட்டில் நமக்கு எதுவும் இராது. எல்லாவற்றையும் புலவர்களும் பாணர்களும் எடுத்துக் கொள்வர். இதன்காரணமாகப் படைத்திரட்டிக் கொண்டு தந்தைக்கு எதிராகக் கிளம்பினர். போர் மூழ்வதற்குரிய சூழ்நிலை நிகழ்ந்தது. இதைக் கேள்விபட்ட புல்லாற்றூர் எயிற்றியனார் புலவருக்குப் பொறுக்க முடியவில்லை.  சோழரை அவர் சந்தித்தார். நீங்கள் போர் புரிகிறீர்கள், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யாருக்கு ஒப்படைக்கப் போகிறீர்கள்? அந்தப் போரில் தோற்றால் யாருக்கு என்னாகும்? மக்களுக்கு எதிராகப் போரிடுவது முறையன்று. போரிடுவதைக் கைவிட்டு உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு நல்லது செய்து வானுலகம் போற்றும்படி வாழ்வாயாக! என நல்லறம் உரைக்கின்றார். அவர் பாடிய பாடல் வருமாறு:

‘மண்டுஅமர் அட்ட மதனுடைய நோன்தாள்,
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு
— — – – – – – –
ஓழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே;
ஆதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்’  (புறம்.213)

Continue Reading →