கலாசூரி விருது: பன்முக ஆற்றல் கொண்ட ,பிரபல பெண் எழுத்தாளர் பவளசங்கரி த. திருநாவுக்கரசுக்கு தடாகத்தின் கலாசூரி விருது!

கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார்.கலாசூரி விருது: பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவளசங்கரி த. திருநாவுக்கரசு அவர்கள்பெறுகின்றார். தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது ) கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள். அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்

உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள் உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு. அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்.

பெண்கள்
உலகின் கண்கள் .

உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் –
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !

பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு –
அக்கினிப் பிழம்பாயிருக்கும்!

Continue Reading →

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகைமைச் சான்றுரை

– 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை –

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbமதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும்  கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர்  பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.

“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”

என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.

Continue Reading →

படைப்பாளி ராஜாஜி ராஜகோபாலனின் ‘உபயகாரன்’ சிறுகதை பற்றிய எனது பார்வை!

ராஜாஜி ராஜகோபாலன்முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்சிறுகதைக்கான களமுனைகள் தாராளமாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட செல்நெறியில் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். கல்வி, கணினி வசதிகள், இனமுரண்பாட்டின் வன்மங்கள், வலிகள், வாழ்க்கை தந்து கொண்டிருக்கும் நோவுகள் பலரை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் சூழலில் பலர் தங்களின் இடப்பெயர்வு/புலப்பெயர்வு நகர்வுகளின் இருப்பில் இருந்துகொண்டு தங்களை/தங்கள் சிந்தனையை கட்டமைக்கப்பட்ட வடிவத்திற்குள் கொண்டுவருகின்றனர். அது எழுத்தாகவும், வேறு வடிவங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் புலம் பெயர் வாழ்வின் இறுக்கத்திற்குள் இருந்துகொண்டு வனைகின்ற பல படைப்பாளர்கள் வரிசையில் இன்று சிறப்பாகத் தன்னை வடிவமைத்துக்கொண்ட படைப்பாளனாக நிமிர்ந்து வருகிறார் நம்மவர் திரு.ராஜாஜி ராஜகோபாலன். யாழ் புலோலி கிழக்கில் பிறந்து தன் கல்வி, சட்டத்துறை சார் தொழில் எனத் தன்னை நிறுத்திக்கொண்டாலும் எழுத்தின் மீதான தாகம் அதிகமாகவே அவ்வப்போது தினகரன், கவிஞன், வீரகேசரி, மல்லிகை, திண்ணை, காற்றுவெளி, சங்கப்பொழில், ஈழநாடு ஆகியவற்றில் எழுதினார். வேலைப்பளு அவரை குந்தியிருந்து எழுதுவதைத் தடுத்தது. ஆனால் அவரின் ஓய்வு தற்போது நிறையவே எழுதவைக்கிறது. அவரின் பாசையில் ‘ஊறப்போட்ட’ கற்பனைகள் வடிவம் பெறுகின்றன. தான் பார்த்த, கேட்ட அனுபவங்கள் நிதானமாகக், கவனத்துடன் எழுத முனையும் முயற்சி பாராட்டும்படி உள்ளது. எனக்குப் பிடித்த இன்னொரு விடயம் வழக்கு மொழி மீதான பற்று, அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தும் முறைமை அலாதியானது. ஒரு படைப்பு அது சார்ந்த களம், அந்தக் களத்தில் வாழுகின்ற பாத்திரங்கள், அப்பாத்திரங்களின் மொழி, அவற்றை வெளிப்படுத்தும் முறை கூர்ந்து கவனிக்கப்படாவிட்டால் படைப்பின் வீரியம் குறைந்துவிடும். இங்கு திரு.ராஜாஜி கோபாலனின் பார்வை கவனிப்புக்குரியது. கவிதையாயினும் சிறுகதையாயினும் அவர் தெர்ந்தெடுத்த பாத்திரங்கள் கதைக்களத்துடன் ஒத்துப்போவதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.  எப்போதோ நிகழ்ந்த அனுபவத்தைப் பலவருடங்களாக அசைபோட்டு, மீட்டு எழுதுவது முடியாத காரியம்தான். எனினும் இவர் எழுதிருக்கிறார். அச்சம்பவத்தை அப்படியே எழுதுவதிலும் அபாரத் துணிவு வேண்டும். கதை, மொழி இரண்டும் சிதையாமல் வடிவமைப்பதில் சிரமம் இருக்கிறது. சொல்ல வந்ததைச் சொல்லாமல் திசை திருப்பிவிடும் அபாயமும் உள்ளது. கத்திமேல் நடக்கும் விளையாட்டு. மேலும், சம்பவக் கோர்வை கவனத்தில் மையம் கொள்கிறது.

Continue Reading →

எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் மறைவு!

– எழுத்தாளரும், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலத்திலிருந்து பங்களிப்பு செய்துவந்தவரான கி.பி.அரவிந்தன் அவர்கள் மார்ச் 8 அன்று மறைந்தார். அவரது நினைவாக அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும்,   பதிவுகள் மார்ச் 2010  இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியால் எழுதிப்பிரசுரமான கி.பி.அரவிந்தனின் ‘இருப்பும் விருப்பும்’  பற்றிய நூல் அறிமுகக் கட்டுரையினையும் மிள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்

aravinthan_k_p_5.jpg - 27.41 Kbகி. பி. அரவிந்தன் (1953 – 8 மார்ச் 2015) விக்கிபீடியாக்குறிப்புகள்!
கி. பி. அரவிந்தன் (1953 – 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன.

Continue Reading →

அ.ந.க.வின் (கவீந்திரனின்) கவிதைகள் சில!

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கவிதைகள் மீள்பிரசுரமாகின்றன. –

- அறிஞர் அ.ந.கந்தசாமி -1. எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும் 
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
“எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை 
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
அப்பனே நிகழ்காலம் செல்க” என்றான். 

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
‘செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
மலைவுறுத்தா தெதிர்காலம்” என்று கூறிக் 
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

Continue Reading →

அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகள் சில…

– அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றயது. –

- அறிஞர் அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமியின் ‘நாயினுங் கடையர்’ அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் ‘காளி முத்துவின் பிரஜா உரிமை’ படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று. “போர்க்குணம் மிக்க எழுத்தாளன் தான் உண்மையான இலக்கியவாதி” என டால்ஸ்டாய்யும் கார்க்கியும் சொன்னதின் அர்த்தம்- அந்தப் போர்க்குணம் மிக்க எழுத்து அ.ந.க., அ.செ.முவிடம் அக்காலமே வெளிப்பட்டது. இருவரையும் மனிதாபிமானம் மிக்கோர் என்பேன்.

ஒரு படைப்பாளியின் சிருஷ்டிகளைப் படியாமல் மேலெழுந்தவாரியாக ‘ஆகா ஊகூ’ என்று இலக்கியத்தை மலட்டுத்தனமாக்கும் கேடுகெட்ட நிலை இன்னும் விட்டபாடில்லை. படியாமலே விமரிசிக்கும் ‘மேதைகளு’ம் உண்டு. ஓர் சமயம் ஓர் இலக்கிய ஆர்வலர் நான் எதிர்பாராத ஒரு கேளிவியைத் தூக்கிப் போட்டார் – “சில விமர்சகர்கள் மேடையில் பேசினாலும் பத்திரிகையில் எழுதினாலும் புத்த்கம் வெளியிட்டாலும் கனதியாக – பல்வகை உத்திகளில் ஓயாமல் எழுதுகிற அ.ந.கந்தசாமியையோ உங்களையோ ஏன் குறிப்பிடுவதில்லை”. “குருடர்கள் யானை பார்த்த கதை தெரியும் தானே?” என்று திருப்பிக் கேட்டேன்.  ஒரு வகையில் பார்த்தால் எழுதிகிறவனுக்கு விளம்பரம் ஆபத்துத் தான். விளம்பர ஓடுகாலித்தனம் இலக்கியக்காரனுக்கு விழுக்காடு என்பதை இன்னும் நம்பாத – புரியாத கலை இலக்கிய ‘மேதாவி’கள் நம் மத்தியில்  செப்பமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியிருப்பதும் நல்லதுதான். கம்பு எடுத்தால் அடியெடுத்து ஓடாமல் விழுந்து படுக்கிற மாடுகளும் உண்டு தானே.

Continue Reading →

நவீன தமிழ்க்கவிதை வெளியில் நான்….

- கிருஷாங்கினி -[சென்ற வருடம் கிருஷாங்கினியிடம் வாங்கிய கட்டுரை (பதில்கள்) என்னிடமே தங்கி விட்டன. அவற்றையும் கிருஷாங்கினியின் கவிதைகளையும் சேர்த்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிற்றிதழ் பரப்பில் தனது கவிதை, கதை கட்டுரைகள் மூலமும், சதுரம் என்ற தனது பதிப்பகத்தின் வாயிலாகவும் ஆர்வத்தோடு பங்களித்துவரும் கிருஷாங்கினி குறித்த முடிந்த அளவு அகல்விரிவான கட்டுரை ஒன்றை அனுப்ப விரும்பி இந்த நீள்கட்டுரைத் தொகுப்பினைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியுள்ளேன் – லதா ராமகிருஷ்ணன் -]

கவிஞர் கிருஷாங்கினி : சிறு குறிப்பு
இயற்பெயர் பிருந்தா. 25.8.1947 அன்று பிறந்தவர்.நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் முனைப்பாகப் பங்காற்றிவருகிறார். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் குறித்த , சமூக அவலங்கள் குறித்த கட்டுரைகள், எழுதியுள்ளார். ஓவியம், நடனம், பிறவேறு நுண்கலைகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். கானல் சதுரம் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. கவிதை கையெழுத்தில் என்ற தலைப்பில் வெளியான இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு கையெழுத்துப்பிரதி வடிவில் கோட்டோவியங்களுடன் அமைந்து உருவமும் உள்ளடக்கமுமாய் தனிக் கவனம் பெற்றது.கவனத்தை ஈர்த்தது. கவிஞர் கிருஷாங்கினி பல்வேறு தேசிய அளவிலான, மாநில அளவிலான இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். 2002 – 04 ஆண்டுகளில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார் ஸீனியர் ஃபெல்லோஷிப் பெற்று 50களுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் எழுத்தாளர்களால் கையாளப்பட்ட கருத்தோட்டங்கள், கருப்பொருள்கள், அணுகுமுறை குறித்த ஆய்வுத்தாள் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார்.[‘The Ideas, Topics and Approach adopted by Women Writers in Modern Poetry written after the 50s.’]

சமகாலப் புள்ளிகள் என்ற தலைப்பிலான இவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு 2002இல் தமிழக அரசின் இரண்டாவது பரிசுக்குரிய நூலாக விருது வழங்கப்ப்ட்டது.ment. தேவமகள் அறக்கட்டளை வழங்கிவரும் கவிச்சிறகு விருது பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது கணவரோடு சென்னை, சிட்லப்பாக்கத்தில் வசித்துவருகிறார். கவிஞர் கிருஷாங்கினியின் மின்னஞ்சல் முகவரி: nagarajan63@gmail.com

Continue Reading →

மாதொருபாகனை முன்வைத்து மேலும் சில கருத்துப்பகிர்வுகள்

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் ஒருவர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொண்டார், ஏன் அந்தக் கதைக்கருவைத் தெரிவுசெய்துகொள்ளவில்லை; ஏன் இந்தக்கதைக்கருவை இப்படிக் கையாளவில்லை, ஏன் அந்தக் கதைக்கருவை அப்படிக் கையாண்டார் என்று கேட்பதெல்லாம் ஒருவகையில் அபத்தம்தான். அதேசமயம், ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வதற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும்போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்துமூலம் நேர்த்தியாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.

தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப்பது சில அறிவுசாலிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூகமாற்றத்திற்கான முன்முனைப்பை மெய்யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உருவாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்தமாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகு முறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப் படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

Continue Reading →

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

லதா ராமகிருஷ்ணன்மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு,  மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது.  கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.

Continue Reading →

பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று!

தர்மசிறீ பண்டாரநாயக்க– தகவல் உதவி – விக்கிபீடியாமூலம் (சிங்களமொழியில்) – தர்மசிறி பண்டாரநாயக்கவின் ‘ஏகா அதிபதி’ நாடகத்தின் ஒரு பகுதி.\தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை –

நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’

‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்’

‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்’

‘ நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.’

‘ அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்’

‘ ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்’

‘ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்’

Continue Reading →