“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பது பாரதியார் வாக்கு. மானிடவாழ்வில் தாய்க்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. முற்றும்; துறந்த முனிவர்களும் தாயைப் போற்றியுள்ளனர். அத்தகைய தாய்க்கு அடுத்தபடியாகப் போற்றப்படவேண்டியது ஒருவர் பிறந்த நாடாகும். தேசப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அப்பற்று மற்றைய இனத்தவரையோ மற்றைய ஊரவர்களையோ துன்புறுத்துவதாகவும் தாழ்த்துவதாகவும் அமைந்துவிடக் கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை நாம் அறிந்துகொள்ள உதவும் வழிகளுள் பிரதேச வரலாற்றாய்வுகள், இடப்பெயர் ஆய்வுகள் என்பன முக்கியமானவை. இவ்வாய்வுகள் மொழியியல், வரலாறு, தொல்பொருளியல், நிலநூல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகளுக்கும் வழிகாட்டுகின்றன. மக்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அறியவும் இவ்வாய்வு துணைசெய்கின்றது. பல்லாண்டு காலமாக ஊரின் சிறப்புப் பற்றிக் கூறும் வழக்கம் தமிழ்மொழியில் இருந்து வந்துள்ளதை நாம் காண்கிறோம். பட்டினப் பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்ககால நூல்கள் நகர்கள் பற்றிக் கூறுவனவாகும். ஊரின் அமைப்பு, மக்களின் தொழில்வளம், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சிறப்பு ஆகியவை பற்றிய பல செய்திகளை இந்நூல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சிற்றிலக்கிய வகைகளான ஊர் விருத்தம், ஊர்வெண்பா என்பனவும் ஊரின் வரலாறு பற்றிக் கூறுவனவாகும். பாட்டுடைத்தலைவன் வாழ்ந்த ஊரின் சிறப்பினை பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப்பெறுவது ஊர்விருத்தம் என்பார்கள். ஒரு ஊரினைப் பத்து வெண்பாக்களால் சிறப்பித்துக் கூறுவது ஊர் வெண்பா எனவும் அறியப்படுகின்றது.
இலங்கை நாவல் இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ந.பாலேஸ்வரி.அந் நாட்களில் மித்திரன், ஜோதி, தினகரன், ஈழநாடு, கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, சுடர், சிரித்திரன், கவிதை உறவு, தமிழ்மலர், ஒற்றைப்பனை, திருகோணமலை எழுத்தாளர் சங்கம் மலர், சுதந்திரன் போன்ற பல அச்சு ஊடகங்களில் சிறுகதை, நாவல்,கட்டுரை என எழுதிவந்தவர்.இன்றுவரை அவரை நாவல் ஆசிரியராகவே அனைவர்க்கும் தெரியும்.அவர் சிறந்த பேச்சாளர்.சிரித்திரன் ஆசிரியர் கூட அவரின் எழுத்தை சிலாகித்துப் பேசியதை கேட்டிருக்கிறேன்.
இவரின் எழுத்தில் லக்ஸ்மி,ரமணிச்சந்திரன் போன்றோரின் சாயல் இருப்பதாகக் கூறுவர்.ஒருமுறை திரைப்படம் சார்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவரின் நாவலைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தோம்.அப்போது செங்கை ஆழியானின் யானை எனும் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியும் மேற்கொண்டதாகவும்,வனபரிபாலனச் சட்டம் இடம் கொடுக்காததால் அது கைவிடபட்டதகவும் சொன்னார்கள்.பிறகு காலம் எம்மை மாற்றிவிட அது முடியாது போயிற்று. எளிமையாக வாழ்ந்தவர்.தனது சேகரிப்புகளெல்லாம் அழிந்துவிட்டதாகவும் சொன்னார்.இவரின் தந்தையின் தமிழ்ப்பற்றும்,தந்தையாரின் தம்பி திருகோணமலையின் பிரபல எழுதாளராகவும் இருந்ததும் இவரையும் அதுறை நாடிச் சென்றதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் தந்தையாரின் பெயரான பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரையும் இணைத்தே எழுதினார்.பின்னர் திருமணமாகியதும் கணவனின் பெயருடன் இணைத்து தொடர்ந்து எழுதினார்.
– 27 பெப்ரவரி 2014, கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன் இன்று (26.02.14) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்து இணுவிலில் புகுந்து; பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ்.பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார். தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் பற்றிய ஆய்வில் பெரும் புரட்சி ஏற்பட்டது. குறள் பற்றி நூற்றுக்கும் மேலான நூல்கள் வெளிவந்தன. அய்ம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் குறள் மொழிபெயர்க்கப் பட்டது. நூற்றுக்கணக்கான உரையாசிரியர்கள் குறளுக்குப் புத்துரையும் தெளிவுரையும் கண்டனர். திருக்குறளுக்குப் பல சிறப்புக்கள் இருக்கின்றன. இந்த சிறப்புக்கள் காரணமாகவே திருக்குறள் காலம் தோறும் கற்றோரால் போற்றி வரப்பட்டுள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட முதல் நூல். அதில் அய்ம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளின் முதல் பெயர் முப்பால். பின்னால் வந்தவர்களே அதன் ஆசிரியரின் பெயரை நூலுக்கு வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகள், ஏழு சீர் களைக் கொண்டது. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு. போப். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பழைய உரைகள் பத்து என்பது மரபு. திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை பத்தாவது. மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.
சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன் புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.
1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.
1.1. உத்தி விளக்கம்:
உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது. தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.
1.2. விளம்பர உத்திகள்
விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முன்னுரை
தமிழின் உயர்வை உலகறியச்செய்த இலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அத்தகு சிறப்புப்பொருந்திய சங்க இலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி பாடப்பட்டுள்ள இரண்டு நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்தாகும். இந்நூல் சேர அரசர்களின் வாழ்வியல் பண்புகளை எடுத்தோதும் ஒப்பற்ற இலக்கியம். இதனை கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி காஞ்சனா அவர்களால் எளிய மலையாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று.
நூல் அமைப்பு
பாடாண் தினையில் அமைந்த 80 பாடல்களைக் கொண்டது. இதில் எட்டு சேர வேந்தர்களைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கவுதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைப்பாடினியார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என எட்டு புலவர்கள் பாடியுள்ளனர்.
முன்னுரைதமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும்…
இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி (இராசையா நாகலிங்கம்) அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம். அதற்குள்… மனம் கவலை கொள்கிறது. சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935இல் ராசையா/தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார்.அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக,உதவி அரசாங்க அதிபராக,உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார். இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன், எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார். மனித நேயம் மிக்கவர்.எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார்.ஆரம்பத்தில் ‘மலர்’ எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தினார்.பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார்.இலக்கிய அனுபவம்,ஆளுமை மிக்கவர்.செ.யோகநாதனின் ‘தோழமை என்றொரு சொல்’ மலர் வெளியீடாகவே வெளிவந்தது.
– *இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள குறுநூல் வரிசையில் பிரசுரமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குறுநூல்கள் 10 ரூபாய், இருபது ரூபாய் அதற்குட்பட்ட விலைகளில் பலதரப்பட்ட சமூக இலக்கிய கருப்பொருள்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இத்தகைய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. நூல்கள் வேண்டுவோர் ungalnoolagam@gmail.com ஐ தொடர்புகொள்ளவும். –
இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு
இலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.
உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?