முகப்பு
ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம். அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார். இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.
2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது. இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ? எவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.
இந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.
கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி வந்தடைந்தேன் என்பது உதவிகரமானது. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சாதாரணமாகக் கவிதை பற்றிப்பேசும் விமரிசகர்கள் அதன் குறைந்தபட்ச சாத்தியங்களைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். காரணம் அதுவே புறவயமானது என அவர்கள் நம்புகிறார்கள். கவிதையில் எதுவுமே புறவயமானதல்ல. எனவே ஒரு கவிதையிலிருந்து நான் போகக்கூடிய – அதாவது எழுதக்கூடிய அளவுக்குப் போகக்கூடிய – அதிகபட்சத்தை முன் வைப்பதே உதவிகரமானது.
மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.
[‘பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?’ என்னும் தலைப்பில் , அவனது ‘நிற்பதுவே நடப்பதுவே’ கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. ‘நுட்பத்தில்’ வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு’ என்னும் தலைப்பில் ‘டொராண்டோ’வில் வெளிவந்த ‘தாயகம்’ (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை ‘பதிவுகள்’ இணைய இதழிலும், ‘திண்ணை’ இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான ‘தமிழ்ப்பூக்க’ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. – வ.ந.கி] தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை’ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள்’. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது’ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு’ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே’ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம்’ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள்’ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே’. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை’ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்’ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. ‘அல்லா’ என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:
[எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926 — 08.12.1995) அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். ‘பதிவுகள்’ இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் – பதிவுகள் ]
லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்
உயர்ந்தவன், நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை
பெருமைதான் முதிசச் சொத்து. வீண் பெருமை பேசி
அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
வடிவாத் தெரியும்.
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.
[தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். குறுநாவல்கள், நாவல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அவர் எழுதியிருந்தபோதும் அவை இதுவரை நூலுருப் பெறவில்லை. ஈழநாடு பத்திரிகையில் அவர் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு விடயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக்’காலம் முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டம். எழுத்தாளர் அ.செ.மு அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். பலவேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர் அ.செ.மு. எழுத்தாளர் அ.செ.மு.வைப் பற்றி எழுத்தாளர் கருணாகரன் தனது ‘புல்வெளிகள்’ வலைப்பதிவில் நல்லதொரு பதிவினை எழுதியிருக்கின்றார். ஒரு பதிவுக்காக அக்கட்டுரையினை ‘பதிவுகள்’ இங்கே பதிவு செய்கின்றது. – பதிவுகள்-]
[2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீன எழுத்தாளரான மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் மீள்பிரசுரமிது. ஒரு பதிவுக்காக. – பதிவுகள்-] 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.
[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘வாதங்களும், விவாதங்களும்’ நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ] – ‘நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை’ என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்” (விவாதங்கள் சர்ச்சைகள், பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் ‘எழுத்து’ இதழில் வெளியான ‘பாலையும், வாழையும்’ கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் ‘சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்’ என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.