பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (இலங்கை)

முனைவர் நா.சுப்பிரமணியன் தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் “ஈழத்துத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் “தமிழ் யாப்பு வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.

Continue Reading →

“மக்கள் எழுத்தாளர்’ விந்தன்

"மக்கள் எழுத்தாளர்' விந்தன்[எழுத்தாளர் விந்தனின் நினைவுதினமான ஜூன் 30இனையொட்டி அவர் பற்றிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்]  எழுத்துலகில் “விந்தன்’ என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய “தமிழரசு’ மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் “தமிழுக்கும் அமுதென்று பேர்’  என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

Continue Reading →

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு வயது 86

எழுத்தாளர் டொமினிக் ஜீவா[ தனிமனிதராக நின்று இத்தனை வருடங்களாகச் சளைக்காமல், களைக்காமல் ‘மல்லிகை’ மாத இதழினை நடாத்திவரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்த தினம் ஜூன் 27. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது சிறுகதைகள் முக்கியமானவை.  இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருது, கனடாவிலிருந்து சுயாதீன திரைப்பட அமைப்பினரின் ‘அகேனம்’ இலககிய விருது ஆகியவற்றைப் பெற்றவர். எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினத்தையொட்டி அவரைப் பற்றிய விக்கிபீடியாக் குறிப்புகள் பிரசுரமாகின்றன- பதிவுகள் -]  டொமினிக் ஜீவா (பிறந்த திகதி:  ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

Continue Reading →

நீண்ட ஆறு

ஜெயந்தி சங்கர்ஸியா, ஷாங், ஜோவ் முடியாட்சிகளுக்கெல்லாம் மூதாதையரான லுவோஜு சீனர்களின் ஆதித்தாய் என்றறியப் பெறுகிறாள். மஞ்சள் மாமன்னரின் மனைவியான லுவோஜு யாங்சே ஆற்றங்கரையோரத்தில் முற்கால சீனத்தின் ஸிலிங் என்றறியப்பட்ட நகரத்தில் பிறந்தாள். இவர்களுக்கு ஸுவான் ஸியாவ் மற்றும் ச்சாங் யீ என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அரசி லுவோஜு தான் முதன்முதலில் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மற்றும் பட்டிழை நெய்தல் பற்றி அக்காலச் சமூகத்துக்குக் காட்டியதால் இன்றைக்கும் சீனத்தில் லுவோஜு என்றால் பட்டுப்புழுக்கள் வளர்க்கும் தேவதை என்றே பொருள். இந்தக் கண்டுபிடிப்பு சீன நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிது உதவியுள்ளது. லுவோஜுவின் நினைவாக அன்றே கட்டப்பெற்ற ஓர் ஆலயம் இன்றைக்கும் யிச்சாங்கில் இருக்கிறது. ஒவ்வொரு சந்திர ஆண்டின் மூன்றாம் மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்தக்கோவிலில் பெரிய திருவிழா நடக்கும். லுவோஜு கலாசாரத்தைக் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் இங்கு நடைபெறும்.

Continue Reading →

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக் – நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும். அந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், ‘தூரத்துப் பச்சை’ என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் ‘இலக்கியத் தாரகை’ கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார். மலையக இலக்கியத்தை நோக்கும்போது 60களின் பின் ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது ‘கலாபூஷணம்’ க.ப.சிவம் இணையாசிரியராக இருந்து வெளியிட்ட ‘மலைமுரசு’ என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ. நடேசய்யர், ‘மலையகத் தமிழர் வரலாறு’ போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்குக் கொண்டுவந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்த்தவர்களில் ஒருவரே இன்றைய (மல்லிகை) அட்டைப்படத்தை அலங்கரிக்கும் ‘இலக்கியத் தாரகை’ ‘கலாபூஷணம்’ திருமதி. நயீமா சித்தீக் அவர்கள்.

Continue Reading →

டானியல் கல்லறையின் இன்றைய நிலை..? நினைவுச் சின்னம் மறைந்த மாயம் என்ன..??

அமரர் கே.டானியல்இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 - 03 - 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய - அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது.இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் – மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் – தலித் இலக்கியப் பிதாமகர் – முன்னோடி எனப் போற்றப்படுபவரும் – பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 – 03 – 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் – பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய – அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை – நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் – பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது. கடந்த 11 – 05 – 2012 காலை தோழர் பசு. கௌதமன் மற்றுமொரு தோழருடன் டானியல் கல்லறையைப் பார்க்கப் போனேன். அடையாளம் காணமுடியாதபடி முட்புதர்களால் மூடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தைக் காணவில்லை. அது மறைந்த மாயம் என்ன..? அது பொருத்தப்பட்ட இடம் சிறிது சிமெந்து பூசி மறைக்கப்பட்டிருந்தது. புகழ்பெற்ற படைப்பாளியும் சமூக விடுதலைப் போராளியுமான டானியல் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் கல்லறைகள் அமைந்த இடத்தை இப்படியா பராமரிப்பது…? தஞ்சை நகரசபை கண் திறக்குமா..?  இது குறித்து டானியலின் உற்ற தோழரான பேராசிரியர் அ. மார்க்ஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது…!

vtelangovan@yahoo.fr 

Continue Reading →

இலங்கையில் தலைசிறந்த தமிழ் நாவல்கள்…..?

எழுத்தாளர் முருகபூபதிபேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார். இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மேல்மாடியில் நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி அவர்கள், இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும் கடந்து வெளியாகும் மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார். மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

Continue Reading →

யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 –  கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் ஜீவாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே பத்திரிகை சஞ்சிகைகள் வாயிலாக யமுனா ராஜேந்திரனை அறிந்திருந்தாலும், ‘பதிவுகள்’ மூலமாகத்தான் அவருடனான மின்னஞ்சல் தொடர்பு முதலில் ஏற்பட்டது. ஆனால் இன்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு குறுகிய நேரம்தானென்றாலும் மிகவும் பயனுள்ளதாகவும், நெஞ்சில் நிலைத்து நிற்கும் சந்திப்புகளிலொன்றாகவும் அமைந்து விட்டது.

Continue Reading →

உச்சம் – படைப்புக் கட்டுரை

கங்காரு என்ற பெயர் முதன் முதலாக 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி கப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் பதியப்பட்டுள்ளது. கப்பலைத் திருத்துவதற்காக Endeavour river (தற்போது cook town) இல் தங்கியிருந்தபோது, அந்த அதிசய மிருகத்தைப் பார்த்து 'அதன் பெயர் என்ன?' என்று அங்குள்ள ஆதிவாசிகளிடம் கேட்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகள் 'Kangaroo' ('நீங்கள் கேட்பது புரியவில்லை') என்று தமது Guugu Yimithirr பாஷையில் சொல்லியிருக்கின்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் அந்த மிருகத்தின் பெயராயிற்று.1.
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி – கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும். பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.

Continue Reading →