Appreciating the feminine notes in Carnatic music

The earliest women I saw and heard in music and who marked my memories profoundly were M.S. Subbulakshmi and D.K. Pattammal. The earliest women I saw and heard in music and who marked my memories profoundly were M.S. Subbulakshmi and D.K. Pattammal. They were iconic figures then already, when I discovered them in my childhood. While they enjoyed much in common, they were also sharply in contrast. Both were towering and well respected women on the music front. Both enjoyed large and faithful audiences, sang to full houses. Both shone in their brilliant diamonds and Kanchipuram silks. They remained all through loyal to the traditional Tamil-lady look, their sarees drawn over the shoulders. Pattammal was pleasant looking while MS was strikingly beautiful. MS had her faithful retinue on stage till the end. Pattammal had her devoted brother and outstanding musician in himself, D.K. Jayaraman with her in their duet performances, till his death separated the pair. Pattammal’s spouse obliged her by granting her permission to carry on her career. MS’ spouse went out of his way to chart his wife’s course. Both lent their voices to films and immortalised several classical lyrics. While MS became an emblematic figure worldwide synonymous with her nightingale-like voice and the trance that she spun her audience into with her soothing bhajans and multilingual compositions, Pattammal remained the unchallenged goddess of laya, of emotion-laden singing, of a clarity and articulation hitherto unmatched and her devotion to Tamil lyrics.

Continue Reading →

ஈழத்துக் கலைஞனின் வாழ்வின் எல்லை…

அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன்ஈழத்தின் வடபுலக் கிராமமான கரவெட்டியில் 10/07/1944இல் பிறந்து கலை உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் அமரர்.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்.எழுத்து,நடிப்பு தன் மூச்சாகக் கொண்டவர்களில் இவரும் ஒருவர்.தொலைபேசியில் பேசுகையில் அதிராமல்,நிதானமாகக் கேட்டபடி அமைதியாக பதில் சொல்வது அவரின் பழுத்த அனுபவத்தைச் சுட்டி நின்றன.யாழ்ப்பாணத்தில் நாடகம்,நடிப்பு என அலைந்த நாட்களில் யாழ்நகர விளம்பர நிறுவனங்களான பெஸ்டோன்,மணிக்குரல் விளம்பரசேயினரின் ஒலிபரப்பில் அடிக்கடி பயணிக்கையில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். பயணிக்கும் போதும் பயணிகளை மகிழ்வதற்காக பேரூந்தின் சாரதியால் ஒலிபரப்படும் ஒலிநாடாவும் பயண களைப்புத் தெரியாமல் குதூகலமாய் திரிந்த காலங்களும் உண்டு.பின் இலங்கை வானொலியில் -அண்னை றயிற், ஒலிக்கையிலும் எங்கடை பொடியன் என்று என் தந்தை சொல்லி மகிழ்ந்ததி இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.பிறகு கே.எம்.வாசகரின் இயக்கத்தில் சில்லையூராரின் அறிவிப்பில் ஒலிபரப்பாகிய ‘தணியாத தாகம்’ அந் நாட்களில் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது.இன்றுஎப்படி சின்னத்திரைகள் நம்மவர்களைக் கட்டிப்போட்டதோ அதே போல அந் நாட்களில் இலங்கை வானொலி நாடகங்கள் நம்மை ஆட்கொண்டிருந்ததை மறக்கமுடியாது. தணியாததாகத்தில் சோமு என்ற பாத்திரமே மக்கள் மனதில் இடம்பிடித்தது. யாழ்ப்பாணத்து வழக்கு மொழியை மேடையில் அற்புதமாக கொழும்பு மேடைகளில் ஒலிக்க வைத்ததில் வரணியூரானுக்கும், கே.எஸ்.பாலச்சந்திரனுக்கும் முக்கிய இடம் உண்டு.அதே போல கமலாலயம் மூவீஸாரின் ‘வாடைக்காற்று’ திரைப்படத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து திரையிலும் ஜொலித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் கடமையாற்றியபடி, மேடை,வானொலிநிகழ்விலும் பங்குபற்றினார்.

Continue Reading →

ஈழத்திற்குப் பெருமை சேர்த்த இசையரசன் குலசீலநாதன்..!

ஈழத்திற்குப் பெருமை சேர்த்த இசையரசன் குலசீலநாதன்..!அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது..! 1972 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் புதிய வின்சர் திரையரங்கில் ‘குத்துவிளக்கு” என்ற ஈழத்துத் திரைப்படம் வெளியாகியது. அதனைப் பார்ப்பதற்கு நண்பர்களுடன் போயிருந்தேன். திரைப்படம் ‘ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..” என்ற பாடலுடன் ஆரம்பமாகியது. கணீரென்ற குரலில் அந்தப் பாடல் தொடங்கியதும் ‘ஆகா… அற்புதமான குரலில் பாடல் ஒலிக்கிறதே…” என வியந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து கைதட்டி மகிழ்ந்தது இன்றுபோல் எனக்கு ஞாபகமிருக்கிறது..! ஆமாம்.. அற்புதமாக அந்தப் பாடலைப் பாடியவர்தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்று இசைத் தயாரிப்பாளராக விளங்கிய சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன். பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிராமிய நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விளங்கிய எமது குடும்ப நண்பர் ஏ. சிறிஸ்கந்தராசாவின் கொழும்பு – நாரங்கன்பிட்டி தொடர்மாடி வீட்டில் பலமுறை குலசீலநாதனைக் கண்டு பேசிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வேளைகளில் எமது வேண்டுகோளுக்கிணங்க அவர் பல பாடல்களைப் பாடுவார். சகோதரர் வி. ரி. தமிழ்மாறன் அவரிடம் எழுதிக்கொடுத்திருந்த ‘கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா..” போன்ற சில மெல்லிசைப் பாடல்களையும் அவர் பாடிக்காட்டுவார். நாம் அவரது இசைமழையில் நனைந்து மகிழ்வுறுவோம். அவர் எங்கள் அன்புக்குரிய ‘பல்கலை வேந்தர்” சில்லையூர் செல்வராசனின் உற்ற நண்பர். இருவரும் ஒன்றாகவிருந்து பேசிக்கொள்வதை, பாடி மகிழ்வதைப் பார்ப்பதே ஆனந்தம். சில்லையூர் கவித்தூறல் சொட்ட, இவர் அதனை இசைமழையாகப் பொழிவார். ஆகா… அதனைக் கேட்பது தான் எத்தனை ஆனந்தம்..!

Continue Reading →

சத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞனை தமிழ் அன்னை இழந்துவிட்டாள்

கவிஞர் வாலிகவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார்.  அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார்.  தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த  பல்லாயிரம்  பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்  என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல்  கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில்  இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின்  பாஞ்சாலி சபதம்   தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது.  தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில்  ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார். 

Continue Reading →

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா!

அன்று…..
தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, சீனத் தமிழ் வானொலியில் 18 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது.  ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த‌ நிகழ்ச்சிகளை பரவலாக  ஒலிபரப்பத்துவங்கியது.

Continue Reading →

‘We live in the age of nomadic hunters’ – Chandragupta Thenuwara

'We live in the age of nomadic hunters' - Chandragupta ThenuwaraIn 1997, Chandragupta Thenuwara coined the term ‘Barrelism’ as a way of conceptualizing his opposition to militarization. As the barrels kept invading city squares, urban streets and many other public spaces, he converted the barrels painted in camouflage into works of art. Instead of artistic reproduction of landscapes, he created ‘barrelscapes’ using the empty exhibition spaces of the art galleries. “If someone asked me to portray the present state of Sri Lankan society, I have nothing to draw but barrels. Barrels have occupied the space around us. Barrels have blocked my view. How can I paint the sky as it hardly can be seen?” he asked during an interview in 1999. Since then more than a decade has elapsed and the war has paused.  “We now live in a post-barrelist stage, surrounded by new symbols of militarization” he said to JDS, while his latest exhibition of sculpture and drawings – ‘The Monument and Other Works’ – is being held at Lionel Wendt Art Gallery in Colombo.  Returning to the island in 1993 after completing his postgraduate studies at the Moscow State Art Institute, Thenuwara became head of the Vibhavi Academy of Fine Arts – better known as VAFA – apart from lecturing at the Faculty of Aesthetic Studies at the Colombo University. He was an artist in residence at CAIR, Centre for Art International Research at Liverpool John Moores University and served as a Board Member of the Architectural Association Foundation in London in 1996-97.

Continue Reading →

கனடாவின் சிறந்த தமிழ்ப் பாடகி மகிஷா! ‘ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்’ நடுவர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியின் ‘ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு…

Continue Reading →

பேணுவோம்: நுண்கலைகளின் தாய்வடிவம் கூத்துக் கலையினை!

அன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன்,  சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு  எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.அன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன்,  சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு  எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.

Continue Reading →

இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம்!

வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய "சூழ் கலை நயம்". வானொலி செய்த பாக்கியமோ,-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய “சூழ் கலை நயம்”. வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம்! மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.

Continue Reading →

இரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு: மணிரத்தினத்தின் ‘ராவணனும்’, மௌனகுருவின் ‘இராவணேசனும்’

மணிரத்தினத்தின் 'ராவணா'விலிருந்து ...மெளனகுருவின் 'ராவணேச'னிலிருந்து..ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.

Continue Reading →