கவிதை: மரணத்தின் உரையாடல்

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

Continue Reading →

நீவீர் இன்றி அமையாது உலகு

நீவீர் இன்றி அமையாது உலகு

“தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து – அல்ல
மண்ணிலிருந்தே….

சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்

Continue Reading →

அன்னையர் தினக் கவிதை: தாயே தமிழே தத்துவமே

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !

Continue Reading →

அன்னையர்தினக் கவிதை: அன்னையர் தினம்

அன்னையர் தினக்கவிதைஎழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

ஒவ்வொரு வீட்டிலும்
ஒளிர்ந்திடும்
தியாக தீபம்
அம்மா.. அம்மா…

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
தாலாட்டும் தென்றல்
அம்மா.. அம்மா…

இன்பத்திலும் துன்பத்திலும்
அணைத்திருக்கும்
அழியாத உறவு
அம்மா.. அம்மா…

Continue Reading →

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம் !

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஓயாமலுழைத்து நிற்கும் ஓருயிரை நினைப்பதற்கு
தாய்நாளாய் ஒருநாளை தரணியிலே வைத்துள்ளார்
வாழ்வெல்லாம் எமக்காக ஈந்துநிற்கும் அவ்வுயிரை
வதங்காமல் காப்பதுதான் மானிலத்தில் தாய்த்திருநாள்  !

சுமையென்று கருதாமல் சுகமாக எமைச்சுமந்து
புவிமீது வந்தவுடன் புத்துணர்வு அவளடைவாள்
அழுதழுது அவதியுற்று அவளெம்மை பெற்றிடுவாள்
அவள்மகிழச் செய்வதுவே அன்னையரின் தினமாகும்    !

காத்துவிடும் தெய்வமாய் காலமெலாம் இருந்திடுவாள்
கண்ணுக்குள் மணியாக எண்ணியெமைக் காத்திடுவாள்
பார்க்குமிடம் எல்லாமே  பார்த்திடுவாள் எம்மையே
பாரினிலே அவளுக்கு ஈடாவார் எவருமுண்டோ   !

Continue Reading →

நீள் கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

நீள்கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது
மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

Continue Reading →

கவிதை: தொக்கி நிற்கும் குறியீடுகள்

வாசிப்போம்

(அ)

ஒரு நூற்றாண்டுக் காலத் தனிமையிலிருந்து
தற்காலத் தனிமை அனுபவத்திற்குள் நுழைவது போல்
உணரும் தருணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ஒரு கவிதை.

(ஆ)

எனதான கவித்துவானுபவத்தில் ஏற்றி வைத்தத் தீயை
மீண்டும் என்னுள் எரியவிட்டிருக்கிறது.
எனதுயிரில் கருவுற்றுக்கொண்டிருந்த கனலை
உதைத்தவாறு உசுப்பி விட்டிருக்கிறது.

Continue Reading →

சுயநலத்தை துறந்திட்டால் துன்பமதைத் துடைத்திடலாம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

Continue Reading →

நிரந்தரமே இல்லையென நிரந்தரமாய் உறங்கிவிட்டாள் !

கண்ணுக்குள் மணியானாள்
கருத்துக்குள் உருவானாள்
உணவுக்குள் சுவையானாள்
உணர்வுக்குக் கருவானாள்
மலருக்குள் மணமானாள்
மழைமேகம் அவளானாள்
மண்மீது என்னிடத்து
பிரியேனே எனவுரைத்தாள் !

பொதுநலத்தை உடன்கொண்டாள்
சுயநலத்தைத் தான்துறந்தாள்
வருந்துயர்கள் விருந்தாக
வாஞ்சையுடன் கண்டிடுவாள்
நிரந்தரமாய் இருந்திடுவேன்
எனவுரைத்த மங்கையவள்
நிரந்தரமே இல்லையென
நிரந்தரமாய் உறங்கிவிட்டாள்  !

Continue Reading →

கவிதை : “தீ ”

ஶ்ரீராம் விக்னேஷ்

கர்ப்பமெனத் தங்கியதைக் : கரையேற்றும் வரையினிலே
காக்கும்தாய் நெஞ்சினிலே தீ – அது
பெற்றவளைப் போலவொரு : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பிறகு என்ன வாழ்வுமுற்றும் தீ !

கண்சிமிட்டிப் பார்த்துஅது : கலகலப்பாய்ச் சிரித்துவிட்டால்
கண்திருஷ்டி என்றுஒரு தீ – அதை
கண்சுற்றிக் கழிப்பதற்குக் : கண்டுகொண்ட முறையினிலே
கண்முன்னே எரித்திடுவார் தீ !

கல்விகற்க அனுப்பிவிட்டுக் : காலைமுதல் மாலைவரை
கக்கத்திலே தாய்கொள்வாள் தீ – மகள்
கற்கையிலே ஆங்கொருவன் : காதல்வசப் பட்டுவிட்டால்
கண்களிலே கொண்டிடுவாள் தீ !

காதலித்து மணப்பவனும் : கல்யாணப் பந்தரிலே
காசுபணம் கேட்பதுவும் தீ – அதை
கண்டு துடிதுடித்து : கண்ணீர் வடித்திடுவாள்
கன்னியவள் மூச்சினிலே தீ !

Continue Reading →