கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில் தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்……. தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.தீண்டாமைக்கும்…

Continue Reading →

தம்பா கவிதைகள்!

தம்பா1. தீக்குச்சிகளின் நடனம்.

மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.

போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.

இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.

கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.

Continue Reading →

கவிதை: ஓவியன் பெரேடைப் பற்றி

அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையதுஅங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை…

Continue Reading →

உரைநடைச்சித்திரம்: மருமகள் அல்ல… மகள்!

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய கவிதை இது. -

–தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய  உரைநடைச்சித்திரம். –

மருமகள் அல்ல… மகள்!

எனக்காக வாழவேண்டும் என்ற
எந்தப் பிரார்த்தனையும்
இல்லாது நின்ற எனது கணப்பொழுதுகளில்
நானும் அவளும் இணைபிரியாதவர்களாக…!

இன்று…அவளுக்கு அகவை அறுபத்தியெட்டு!

கடந்த ஆவணி 31இல், திருமணநாள் நாற்பத்தியெட்டு!

எனக்கான கடமைகள் எதுவோ?
அவற்றை அவள்…
தனக்கானதாக எடுத்துக் கொண்டவைதான்
இன்றைய பொழுதின் எனது வெற்றிகள்!

Continue Reading →

’ரிஷி’யின் கவிதைகள்: சுவடு அழியும் காலம்…

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. மண்ணாந்தை மன்னர்கள்’

யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?

Continue Reading →

கவிதை: மண்வீடு …..

- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -– பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பதிவுகள் இணைய இதழாளர்களுக்கு எனது இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும் …..தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்றான நீலகிரியில் வசிப்பவன் நான். எங்களது குடும்பத்தார் இலங்கையின் மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ……அதன் நினைவாக இந்தக்  கவிதை….. –


களிமண்ணால் சுவரேற்றி
கல்மூங்கிலால் கூரை அமைத்து
செம்மண் ஓடால்
கூரை வேய்ந்தது
எங்கள் வீடு …..
கடுங்குளிர் கனமழை
சுடுவெயில் அடர்பனியிலிருந்து
பாதுகாத்தது
எங்கள் வீடு ….
ஆந்தை அலற நரி ஊளையிட
யானை பிளிறி நிற்க புலியோ உறும
கரடியின் கத்தலில் இருந்தும்
முப்பதாண்டுகள் முழுமையாய் காத்த வீட்டை
முற்றாக மறந்து
கான்கிரீட் வீட்டுக்கு காலடிவைத்த போதும்
கலங்காமல்
வாழ்த்தி வழியனுப்பியது
எங்கள் வீடு …..

Continue Reading →

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

எதோ ஒரு பயங்கரக் கனவு.
வாய்விட்டுக் கத்த
முயற்சிப்பதும் ,
முடியாமல்
திணறுவதும் புரிகிறது.
ஆனாலும்
எதுவுமே செய்ய முடியாத
இயலாமை.
பக்கத்தில்
அன்புக் கணவர்
அணைத்துக் கொள்ள,
குழந்தையானேன்.
கடுமையாய்
உழைத்து வீடு திரும்பும் முன்
உணவு தயார் செய்கையில் ,
தாயானேன்.’

Continue Reading →

கவிதை: தமிழ்க் கனேடியனும் நானும்!

கவிஞர் திருமாவளவன்இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம்.  அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான ‘தமிழ்க்கனேடியனும் நானும்’ என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் –


இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் ‘இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?’ என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி!   ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.

இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் ‘பதிவுகள்’ இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: “பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?”

இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: ‘தமிழ்க்கனேடியனும் நானும்‘.

Continue Reading →

கவிதை: வே.நி.சூர்யா கவிதைகள்!

கவிதை படிப்போமா?1) பதற்ற நிறுவனம்

பழைய பதற்றம் நாளையை நினைத்து தொற்றிக்கொண்டது வானத்தை மேகங்கள் தொற்றிக்கொள்வது போல
கடைசி நாள் எனக்கு கடிகார சுவாச நிறுத்த வைபவம் என்னில்
உறுதியாகிவிட்டது நாளை
‘ழ’ வை போல உருவாக்கம் அரிது
‘ அ ‘ வை போல அழிவு எளிது
உனக்கு தெரியும் கூடவே
புரியாது உனக்கு

2)சோளக்கொல்லை பொம்மைகள்

இளம்சிவப்பு செங்கல்களின் அடுக்குவரிசையால் ஆனதொரு தடுப்பு சுவர்
மணல் மேடை அச்சுவருக்கு அப்பால்
தன் ஒரு காலை சோளக்கொல்லை பொம்மையொன்று மண்ணில் ஊன்றி நீட்டுகிறது மறுகாலை தன் உயரத்திற்கு
மதுபானத்தை தாங்குகிறது அந்த கால்
அந்த சோளக்கொல்லை பொம்மையின் கைதாங்க மற்றுமொரு கால் போன்ற கம்பு
உயிர்பெற்று நிற்கிறது தன் உயரத்திற்கு தன் காலை நீட்டி மடக்கியதில் நனவிலி மனக்கிடங்கில் சோளக்கொல்லை பொம்மை

Continue Reading →

கண்ணம்மா (மலேசியா) -கவிதைகள்!

கவிதை வாசிப்போமா?

1. கவிதை எழுத ஆசை.

எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?

வரும், நிச்சயம்
வரும்.

2. நட்பு  –

மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.

Continue Reading →